அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

நான் தேவதூதன் அல்ல !

திறந்த மடல் - 19

திருச்சியில் அடகு நகையை விற்க

மாண்புமிகு தமிழ்நாடு முதல் அமைச்சர் விஜய் அவர்களுக்கு, வணக்கம்.

முதல் முயற்சியிலேயே தனிப்பெரும்பான்மை கட்சியாக 108 இடங்களைப் பிடித்து, திமுக கூட்டணி கட்சிகளின் ஆதரவில் தமிழ்நாட்டின் 17-ஆவது சட்டமன்றத்தின் முதல் அமைச்சராகப் பொறுப்பேற்றமைக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்த வார MAY 6 அங்குசம் இதழில்…

இப்போது போலவே, கடந்த 1952 ஆம் ஆண்டிலும் அறுதிப் பெரும்பான்மையைப் பெறாமல் தனிப்பெரும்பான்மை கட்சியாக காங்கிரஸ் கட்சியும் தொங்கு சட்டமன்றத்தை சந்தித்தது.

தேர்தல் முடிவுகள் மே-4 அன்று அறிவிக்கப்பட்டும் அன்றிலிருந்து ஏறத்தாழ ஒரு வார காலத்திற்கு நீடித்த அரசியல் குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து, மாநிலத்தில் மக்களால் ஏற்படுத்தப்பட்ட அரசு பதவியேற்க வேண்டும் என்பதில் உறுதி காட்டிய முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நீங்கள் நன்றி தெரிவிக்கவேண்டும் என்ற பொதுமக்களின் எதிர்பார்ப்பு பொய்த்துப்போய்விடுமோ என்றிருந்த நிலையில், மு.க.ஸ்டாலின் உள்ளிட்டு அனைத்துக் கட்சித் தலைவர்களையும் அவர்களது இல்லத்திற்கே சென்று நன்றி தெரிவித்தீர்கள். இந்த அரசியல் நாகரீகம் தொடர வேண்டும் என்பதே தமிழக மக்களின் எதிர்பார்ப்பு.

2026 யாவரும் கேளீர் ஏப்ரல் மாத இதழ்

விஜய் பதவியேற்பு விழா-பாதுகாப்பு ஏற்பாடுகள் #Vijay #VijayCM #TamilNadu #CMOathCeremony #VijayPolitical #VijayMovement #TVK #TVKVijay‌ #JayaPlusபெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், மே 10 ஆம் நாள் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், “சி.ஜோசப் விஜய்…. என்னும் நான்…. ” என்று நீங்கள் உறுதிமொழியை வாசிக்கத் தொடங்கியவுடன் அரங்கில் கூடியிருந்த மக்கள் அனைவரும் ஒன்றாக எழுப்பிய ஆரவாரம் அடங்க சில நிமிடங்கள் ஆனது. மக்கள் ஒரு மாற்றத்தை விரும்பி, ஆட்சிப் பொறுப்பை உங்களிடம் வழங்கி, உங்களிடமிருந்து பெரும் எதிர்பார்ப்போடு காத்திருக்கிறார்கள்.

பதவியேற்பு விழா முடிந்து ஆளுநர் அவையை விட்டு வெளியேறியவுடன், தாங்கள் நன்றி தெரிவித்து ஆற்றிய உரை Code of Conduct என்னும் “நடத்தை விதிமுறை”களுக்கு எதிரானது என்று விமர்சனம் எழுந்துள்ளது. அதையும் தாண்டி நீங்கள் ஆற்றிய உரையில் ஆட்சி அமைக்க உதவிய நண்பா, நம்பீஸ்களுக்கும், சமூக வலைதளங்களில் உடனிருந்து பணியாற்றிய தகவல் தொழில்நுட்பம் சார்ந்த பணியாளார்கள் என அனைவருக்கு நன்றி தெரிவித்தீர்கள். நல்ல பண்பாடுதான் மாற்றுக் கருத்தில்லை. அதே சமயம் கூட்டணி ஆட்சி அமைக்க ஒத்துழைத்த திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சியினருக்கு உரிய முக்கியத்துவத்தை உங்கள் உரையில் வழங்க தவறவிட்டீர்கள்.

சினிமா பாணியில் ஹீரோவாகவே உங்களை த.வெ.க. தொண்டர்கள் அணுகிவரும் நிலையில், “நான் ஒன்றும் தேவதூதன் அல்ல.” என்ற உங்களது உரையும் அதனை தொடர்ந்து, “எளிய குடும்பத்திருந்து வந்தவன். பட்டினி கஷ்டம் எல்லாம் அறிந்தவன்” என்றீர்கள்.மேலும், திராவிட கட்சிகளுக்கு மாற்றாக வந்திருப்பதாக சொல்லிக்கொள்ளும் நீங்களே அவர்களின் வழக்கமான பாணியிலேயே, ”தமிழ்நாட்டின் கஜானாவை முந்தைய அரசு துடைத்து வழித்து எடுத்துவிட்டார்கள். சுமக்க முடியாத சுமையை தலையில் சுமத்திவிட்டு சென்றுவிட்டார்கள். என்ன இருக்கிறது என்று பார்த்து முதலில் வெள்ளை அறிக்கை ஒன்றை வெளியிட்டுவிட்டுதான் அடுத்த பணி” என்று பேசியிருக்கிறீர்கள்.

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

“மின்சாரப் பயன்பாட்டில் 200 யூனிட் இலவசம், பெண்கள் மீதான பாலியல் குற்றங்களைத் தடுக்கச் சிங்கப் பெண் திட்டம், போதையை ஒழிக்கக் காவல் நிலையங்கள் அமைத்தல்” ஆகிய மூன்று அறிவிப்புகளோடு நிறுத்திக் கொண்டீர்கள்.

விஜய் பதவியேற்பு விழா... புகைப்பட தொகுப்பு! Vijay swearing-in ceremony Photo galleryமிக முக்கியமாக, பெண்களின் பெரும் எதிர்பார்ப்பான மாதம் 2500 என்று உயர்த்தப்பட்ட உரிமைத் தொகை; வருடத்திற்கு 6 சிலிண்டர்; அனைத்துப் பேருந்துகளிலும் பெண்களுக்கு இலவசப் பயணம்; வேலையில்லாப் பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.4000/-; விவசாயக் கடன் தள்ளுபடி; பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு சவரன் தங்கத்தோடு மாமன் சீர்; திருமணம் ஆகும் பெண்களுக்கு ஒரு சவரன் தங்கத்தோடு அண்ணன் சீர்; 1 முதல் 12-ஆம் வகுப்பு வரை மாணவர்கள் படிப்பில் இடைநிற்றல் கூடாது என்பதற்காகப் பெற்றோர்களுக்கு ஆண்டுக்கு 10 ஆயிரம் ரூபாய் என்ற நிதி சார்ந்த எந்த அறிவிப்பும் இல்லாதது பெருத்த ஏமாற்றம்தான்.

தமிழகத்தின் மொத்தக்கடன் 10 இலட்சம் கோடிகளுக்கும் மேல் இருக்கிறது என்பதை அறிந்துதானே 12 இலட்சம் கோடிக்கு நலத் திட்டங்களை அறிவித்தீர்கள். வாக்குகளையும் அறுவடை செய்தீர்கள். இப்போது என்னால் என்ன முடியுமோ அதை மட்டுமே நிறைவேற்றுவேன்.  நான் தேவதூதன் இல்லை என்கிறீர்கள்.

முந்தைய அரசின் மீது குறை சொல்லி தப்பிக்கும் ஏமாற்று அரசியலுக்கு முற்றுப்புள்ளி வையுங்கள். அனைத்து மக்களுக்குமான தமிழகத்தின் முதல்வர் என்ற பொறுப்பை உணர்ந்து, மாற்று வழிகளை கண்டடையுங்கள். தமிழ்நாட்டின் கடன் எவ்வளவு இருக்கிறது என்று தெரிந்து கொள்ள முடிந்த உங்களுக்கு, அதே தமிழகத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) 30 இலட்சம் கோடியாக இருப்பதையும் அறியாமலிருக்க வாய்ப்பு இல்லை.

கடன்  சுமை என்ற போலி பிம்பத்தைக் காட்டி, மக்களின் வாழ்வாதாரத்துக்கு அடிப்படையான நலத்திட்டங்களை நிறுத்திவிடாமல், அவை எப்போதும்போல தொடர்வதை உறுதிபடுத்துங்கள் முதல்வரே! தமிழக மக்களின் எதிர்பார்ப்பு இதுவொன்றுதான்.

தமிழன்புடன்,

ஆதவன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.