சிக்கலில் திருச்சி நுண்ணறிவு பிரிவு உதவி ஆணையர் செந்தில் குமார்  !

0

சிக்கலில் திருச்சி நுண்ணறிவு பிரிவு உதவி ஆணையர் செந்தில் குமார்  !

திருச்சி நுண்ணறிவு பிரிவுக்கு உதவி ஆணையராக இருந்த கண்ணன், கந்தசாமி, கபிலன், வெங்கட்ராமன், ஆகியோர் ஏதேனும் சர்ச்சைகளில் சிக்கி அதிரடியாக பணியிட மாற்றம், சஸ்பெண்ட் என்று விசாரணைக்கு உட்பட்டனர்.  என்பது கடந்த கால வரலாறு

2 dhanalakshmi joseph

இந்த நிலையில்  எவ்வளவு சர்ச்சைகள் இருந்தாலும், திருச்சி மாநகர காவல்துறையின் நுண்ணறிவு பிரிவு உதவி ஆணையர் பதவிக்கு எப்போதும் கடுமையான போட்டி இருக்கும், இந்த போட்டிகளில்  வென்று செந்தில்குமார் கடந்த ஜீன் மாதம் 2021ம் ஆண்டு பொறுப்பெற்றார்.

இவர் ஏற்கனவே திருச்சியில் கோட்டை காவல் நிலையம், உறையூர், முசிறி உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வாளராகவும், காவல்துறை உதவி ஆணையாளர் ஆகவும் பணிபுரிந்துள்ளார். புதுக்கோட்டையில் இருந்து திருச்சி மாநகர நுண்ணறிவு பிரிவிற்க்கு பணியாற்றி வருகிறார்.

- Advertisement -

- Advertisement -

Sathyapriya Ips
Sathyapriya Ips

நுண்ணறிவு பிரிவு திருச்சி மாநகர காவல்நிலையங்களில் நடந்து வரும் விசாரணைகளை கண்காணித்து மாநகர காவல்துறை ஆணையருக்கு தினமும் ரிப்போர்ட் செய்ய வேண்டியது இவர்களுடைய கடமை ! அதனால் திருச்சி மாநகரில் கமிஷருக்கு இணையாக  இந்த பதவியில் இருப்பவர்கள் வல்லமை படைத்தவர்களாக இருப்பார்கள்.

இந்த நிலையில் திருச்சியில் கள்ளலாட்டரி, ஸ்பா என்கிற மசாஜ் சென்டர்கள் ஹாட்டல்களில் ஆடல்பாடல், கள்ளத்தன மதுவிற்பனை, கனஜோராக தெரிந்தும் தெரியாமல் தொடர்ந்து விற்பனை செய்யப்பட்டு வந்தது.

சத்தியபிரியா ஐபிஎஸ் திருச்சி மாநர காவல்துறை ஆணையராக பொறுப்பேற்ற  பின்பு இந்த சமூக விரோத செயல்கள் நடவடிக்கை குறித்து தொடர்ந்து விசாரித்து கொண்டே இருக்கிறார்.  இந்த நிலையில்  நுண்ணறிவு பிரிவு போலீசுக்கு தெரியாமலே திருச்சி மாநகரில் அதிரடியாக சோதனை செய்து பலரை கைது செய்தும் சில அதிகாரிகளை பணியிடை மாற்றம் செய்து வந்திருக்கிறார்.

இந்த நிலையில் திருச்சி தென்னூர் உழவர் சந்தை அருகே உள்ள வக் போர்டுக்கு சொந்தமான அன்னார் பாக் தர்காவை 194 செண்ட் நிலம். 400 சதுர அடியில் உள்ள தர்கா உள்ளது.

4 bismi svs

இந்த இடத்திற்கும்  சில தொழில் அதிபர்களுக்கும் நீதிமன்ற வழக்கு நடைபெற்று வந்த நிலையில் தீர்ப்பு தொழில் அதிபர்கள் பக்கம் சாதமாக வந்தால்  15.072023 நள்ளிரவில் மர்ம நபர்களால் இடிக்கப்பட்டதை தொடர்ந்து சுற்றியுள்ள இஸ்லாமிய மக்கள் போராட்டத்தில் ஈடுபட முயற்சித்தனர்.

இது சட்டம் ஒழுங்கு பிரச்சனையாக மாறி இருக்கிறது. ஆனால் இதை தெரிந்தும், தெரியாதது போல் முறையாக கமிஷருக்கு ரிப்போர்ட் செய்யவில்லை. என்கிறார்கள் சக அதிகாரிகள்.

இந்த சட்டம் ஒழுங்கு பிரச்சனை காவல்துறை தலைமை வரை சென்று பெரிய தலைவலியை ஏற்படுத்தி உள்ளது.

இதே சர்ச்சைக் குரிய இடத்திற்காக கடந்த ஜனவரி மாதம் 1ம் தேதி நள்ளிரவில் இதே போன்று மர்ம நபர்கள் உள்ளே புகுந்து இடித்து தள்ளினர் என்பது குறிப்பிடதக்கது.

இந்த நிலையில் நேற்று 15.07.2023 அன்று மாநகர ஆணையர் சத்தியபிரியா – மாநகர நுண்ணறிவு பிரிவு ஆணையரை தன்னுடைய அறைக்கு அழைத்து,

நீங்கள் உங்கள் பதவிக்கு தகுந்த பணியை சரிவர செய்யவில்லை,  என்று கோபம் அடைந்து உடனே ஆயுதபடைக்கு செல்லுங்கள் உத்தரவு போட்டியிருக்கிறார்.

இதை சற்றும் எதிர்பார்க்காத  உதவி ஆணையர் செந்தில்குமார் அதிர்ச்சியடைந்து தன்னுடைய செயலுக்கு வருத்தம் தெரிவித்து இருக்கிறார்.

இந்த நிலையில் இன்று காலை முதல் 16.07.2023 முதல் மெடிக்கல் விடுப்பில் இருக்கிறார் என்கிற தகவல் நுண்ணறிவு பிரிவு அலுவலகம் தரப்பில் நமக்கு தகவலாக கிடைத்து இருக்கிறது.

இது குறித்து நுண்ணிறிவு பிரிவு உதவி ஆணையார் அவர்களை தொடர்பு கொண்ட போது.. சொல் போன் ரீங் தொடர்ந்து ஒலித்துக்கொண்டே இருக்கிறது.

நுண்ணறிவு பிரிவு உதவி ஆணையர் பதவி மிகவும் பொறுப்புள்ள பதவி என்பதை மீண்டும் ஓரு முறை வெளிப்படுத்தியுள்ளது.

5 national kavi
Leave A Reply

Your email address will not be published.