அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

காத்திருப்பு பட்டியலில் திருச்சி எஸ்.பி.! பின்னணி என்ன?

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

திருச்சி மாவட்டத்தின் எஸ்.பி.யாக கடந்த ஓராண்டு காலத்துக்கும் மேலாக பணியாற்றி வந்த எஸ்.பி. செல்வநாகரத்தினம், தற்போது காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டு, அவரிடத்தில் புதிய எஸ்.பி.யாக டோங்கரே பிரவீன் உமேஷை நியமித்து உத்தரவு பிறப்பித்திருக்கிறது நடிகர் விஜய் தலைமையிலான த.வெ.க. அரசு.
திருச்சி எஸ்.பி.யாக இருந்த கடந்த ஒன்றரை ஆண்டுகளில், கொலைக்குற்றவாளிகள் 73 பேர்; போக்சோ, கற்பழிப்பு வழக்கு குற்றவாளிகள் 55 நபர்கள்; மற்றும் ரவுடி, திருட்டு, கஞ்சா விற்பணை என தொடர் குற்றங்களில் ஈடுபட்டு வரும் 505 குற்றவாளிகள் உள்ளிட்டு 925 சரித்திரப் பதிவேடு குற்றவாளிகளை தொடர்ந்து கண்காணிப்பில் வைத்திருக்கிறார். இவர்களில், மீண்டும் குற்றமிழைத்த 150-க்கும் மேற்பட்டோரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறைபடுத்தியிருக்கிறார். விஜய் முதல்வராக பதவியேற்ற சமயத்தில் 364 முக்கியமான சரித்திர பதிவேடு குற்றவாளிகளை அழைத்து ஆயுதப்படை மைதானத்தில் பேரேடு நடத்தி அவர்களுக்கு எச்சரிக்கை விடுத்த சம்பவம் வைரலானது.
கொலை, கொள்ளை, திருட்டு வழக்குகளை திறம்பட கையாண்டு குற்றவாளிகளை விரைந்து கண்டறிந்திருக்கிறார்கள். நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்குகளை உரிய முறையில் கையாண்டு சுமார் பத்தாயிரத்துக்கும் அதிகமானோருக்கு தண்டனைகளை பெற்றுத்தந்திருக்கிறார்கள்.
2024 இல் 111 கஞ்சா வழக்கு, 420 குட்கா வழக்கு 648 பேர் மீது எஃப்.ஐ.ஆர்., கிலோ கணக்கில் கஞ்சா, குட்கா பறிமுதல் என அதிரடிகளை காட்டியிருக்கிறார். முந்தைய ஆண்டை விட 339 சதவிகிதம் கூடுதலாக கஞ்சா, குட்கா களை கைப்பற்றியிருக்கிறார்.
சாலை, விபத்துகள் தடுப்பு நடவடிக்கைகள்; கண்காணிப்பு கேமராக்கள்; பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கும் தனிக்கவனம் கொடுத்திருக்கிறார்.

எஸ்.பி. செல்வநாகரத்தினம்
எஸ்.பி. செல்வநாகரத்தினம்

இந்த வார JULY 1 அங்குசம் இதழில்…

மூன்று சரித்திரப்பதிவேடு குற்றவாளிகளை கண்காணிக்க ஒரு காவலர் என நியமித்ததோடு, அண்ணா பல்கலை கணிணி அறிவியல் துறையுடன் இணைந்து சரித்திர பதிவேடு குற்றவாளிகளை கண்காணிக்கும் கருடன் எனும் புதிய மொபைல் செயலியை உருவாக்கி செயல்படுத்தி வருகிறார்கள். காவலர் மன்றம் மற்றும் காவலர்களின் குடும்பங்களின் நலன்சார்ந்த நடவடிக்கைகளையும் மேற்கொண்டிருக்கிறார்.
இதையெல்லாம்விட, கடந்த ஆண்டில் காரை வழிமறிந்து 10 கிலோ தங்கத்தை கொள்ளையடித்த வடமாநில கும்பலை கூண்டோடு கைது செய்து, நகைகளையும் கைப்பற்றியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இத்தகைய பின்னணியில்தான், திருச்சி எஸ்.பி. செல்வநாகரத்தினம் அதிரடியாக மாற்றப்பட்டிருக்கிறார்.
இந்த மாற்றத்தின் பின்னணியில், ஒழுங்காக பணி செய்யாத போலீசு அதிகாரிகளுக்கு விதிமுறைகளை மீறி தண்டனை வழங்கியதாகவும் சரித்திரப்பதிவேடு குற்றவாளிகளை கொண்டு பேரேடு நடத்தியபோது சம்பந்தமில்லாத நபர்களையும் அழைத்து வந்தார்கள் என்ற குற்றச்சாட்டை சொல்கிறார்கள்.
கடைநிலை காவலர்களையும் அரவணைத்து, அவர்களுக்கு களத்திலும், தொழில்நுட்ப ரீதியிலும் பயிற்றுவித்து வேலை வாங்கினார் என்றும் அவரது பணியிட மாற்றம் வருத்தமளிப்பதாகவும் போலீசு வட்டாரத்தில் தெரிவிக்கிறார்கள்.
அடுத்தடுத்து சென்னை மாநகர கமிஷனர் இடமாற்றம் உள்ளிட்டு இதுபோன்ற சகட்டு மேனியிலான பணியிட மாற்றங்களைத்தான் “மாற்றம்” என்று சொல்கிறார்களோ என்னவோ?

MLA கதிரவன் நன்றி தொிவிக்கும் சுற்றுப்பயணம்

யாவரும் கேளீர்

– அங்குசம் புலனாய்வுக்குழு.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.