திருச்சி பத்திரிகையாளர்களுக்கு அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையம் சார்பில் பயிலரங்கு !

0

திருச்சி பத்திரிகையாளர்களுக்கு அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையம் சார்பில் பயிலரங்கு ! அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையம் திருச்சியில் ஊடகவியலாளர்களுக்குப் பயிலரங்கு நடைபெற்றது மூத்த ஊடகவியலாளர்கள் இராதாகிருஷ்ணன், கோவி.லெனின் பங்கேற்பு

 

அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையம் (UNHCR) திருச்சியில் 11.08.2022ஆம் நாள் இரம்யா ஓட்டலில், “அகதிகள் பிரச்சனைகளை ஊடகங்களில் வெளியிடுதல்” குறித்த பயிலரங்கை நடத்தியது. இப் பயிலரங்கில் 30க்கும் மேற்பட்ட திருச்சியைச் சார்ந்த ஊடகவியலாளர்கள் கலந்துகொண்டனர்.

https://businesstrichy.com/the-royal-mahal/

UNHCR
United Nations High Commission for Refugee

பயிலரங்கம் காலை 10.30 மணிக்குத் தொடங்கியது. அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையத்தின் சென்னைப் பிரிவின் மூத்த நிருவாக உதவியாளர் திருமதி ஸ்ரீவித்யா மகேஷ் அவர்கள் வரவேற்புரையாற்றினார். மேலும், பயிலரங்கில் கொண்ட சிறப்பு விருந்தினர்கள் அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையத்தின் சென்னைப் பிரிவின் தலைமை களஅலுவலர் சச்சினாந்தா வளன் மைக்கேல், மூத்த ஊடகவியலாளரும் .இராதாகிருஷ்ணன், மூத்த ஊடகவியலாளர், தமிழ்நாடு அரசின் இலங்கை அகதிகள் மறுவாழ்வு குழு உறுப்பினர், மூத்த ஊடகவியலாளருமான  கோவி.லெனின் ஆகியோரை அறிமுகம் செய்து உரையாற்றினார்.

 

பல் கட்டும் சிகிச்சையில் நவீனம் காட்டும் KM DENTAL CLINIC

“அகதிகள் என்ற வரையறை குறித்தும், அகதிகள் பாதுகாக்கப்பட வேண்டியவர்கள்” என்ற பொருண்மையில் அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையத்தின் சென்னைப் பிரிவின் தலைமை களஅலுவலர் சச்சினாந்தா வளன் மைக்கேல் உரையாற்றினார்.  “அகதிகள் என்பவர்கள் ஒரு நாட்டின் எல்லைக் கோட்டினைத் தாண்டி இன்னொரு நாட்டிற்கு மதம், இனம், மொழி மற்றும் அரசியல் கருத்து தெரிவித்தல் தொடர்பாக, உயிருக்கும் உடமைக்கும் பாதுகாப்பு இல்லை என்பதை உணர்ந்து புலம் பெயர்ந்து செல்பவர்களே அகதிகள் என்ற வரையறைக்குள் வருவார்கள்.

 

புகலிடம் கோருபவர்கள், தஞ்சம் அடைபவர்கள் அகதிகள் என்ற வரையறைக்குள் அடங்க மாட்டார்கள். உள்நாட்டிற்குள் இடம் பெயர்ந்து வாழும் மக்கள் அகதிகள் என்ற வரையறைக்குள் வரமாட்டார்கள். பிறக்கும் ஒவ்வொரு குழந்தைகளுக்கும் மண் சார்ந்த உரிமை உண்டு. ஒரு இனக்குழுவை ஓர் அரசு நாட்டாற்றவர்கள் என்று அறிவித்து, அந்நாட்டைவிட்டு வெளியேற்ற முடியாது. வெளியேற்றினால் அந்த மக்கள் எந்த நாட்டில் வேண்டுமானாலும் அகதியாய் செல்ல உரிமை உண்டு.

 

அகதியாய் ஏற்க ஒவ்வொரு நாட்டிற்கும் என்று தனித்தனிச் சட்டங்கள் உண்டு. ஒரு நாட்டின் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டவர்கள், அந்நாட்டை விட்டு வெளியேறி, இன்னொரு நாட்டில் அகதியாகவே, புகலிடம் கோரியோ, தஞ்சம் அடையவே உரிமை இல்லை. அகதிகள் புலம்பெயர்ந்த நாட்டில் பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவார்கள். அவர்களுக்கு வழங்கப்படும் நிதிச் செலவினங்களால் நாட்டின் பொருளாதாரம் சீர்குலையும், அகதிகள் நம்மைவிட நல்ல வாழ்க்கை வாழ்கிறார்கள் என்ற சிந்தனையோட்டத்தைத் தவிர்த்து, நாடிழந்து, மண்ணை இழந்து வாழும் அகதிகளுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் மனித நேயச் சட்டங்களின்படி அவர்கள் நடத்தப்பட வேண்டும். அவர்களுக்கான மனித உரிகைள் வழங்கப்பட வேண்டும். சர்வதேச அகதிகள் சட்டம் வரையறுத்துள்ள விதிகளின்படி அவர்கள் வாழ்வாதாரங்கள் காப்பற்றப்பட வேண்டும்.

 

அகதிகள் தமது நாடுகளுக்கு மீள திரும்புதல் என்பதில் கட்டாயப்படுத்துதல் இருக்கக்கூடாது. இந்தியாவில் 2,13,444 அகதிகள் உள்ளனர். இவர்களின் 1.50 இலட்சத்திற்கும் மேல் இலங்கையைச் சார்ந்த தமிழர்கள். குறைந்த எண்ணிக்கையில், திபெத்தியர், பர்மா, ஆப்கன், சோமாலியா, சூடான், ஈரான், ஈராக், ஏமன் நாட்டைச் சார்ந்தவர்களும் உள்ளனர். அகதிகளின் பிரச்சனைகளை ஊடங்களில் வெளியிடும்போது அகதிகளுக்குப் பிரச்சனை வராமாலும், அவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் செய்திகள் வெளியிடப்பட வேண்டும்.

 

அகதிகளுக்குரிய ஆவணங்கள் மற்றும் ஆதார் அடையாள அட்டை இல்லாத நிலையிலும், இந்திய அரசு, அகதிகள் அனைவரும் கோவிட்-19 தடுப்பூசி செலுத்திக்கொள்ள அனுமதி வழங்கியது. அகதிகள் பிரச்சனை என்பது உலகளாவிய பிரச்சனை என்பதால் அதனை ஊடகவியலாளர்கள் அவர்களின் உரிமைகள் காக்கப்படும் வகையில் செய்திகளை வெளியிட வேண்டும்” என்று குறிப்பிட்டார்.

 

மூத்த ஊடகவியலாளர் இராதாகிருஷ்ணன் உரையாற்றும்போது,“அகதிகள் பிரச்சனை என்பது ஓர் அரசியல் பிரச்சனைத்தான். அரசியல் எதிர்கருத்துகள் ஏற்கப்படாத நிலையில் ஏற்படும் வன்முறை மற்றும் கலவரங்களால்தான் மக்கள் வாழும் நாட்டை விட்டு வேறு நாட்டை நாடி வாழும் நிலமை ஏற்படுகின்றது. பெரும்பாலும் முஸ்லீம்களாக உள்ள ரோஹிங்கியாக்கள், மியான்மரில் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்படாத ஒரு இனக்குழுவாகும், மேலும் நான்கு தசாப்தங்களாக வன்முறை அலைகளை எதிர்கொண்டுள்ளனர்.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

2022 ஜனவரிக்குள் உலகின் மிகப்பெரிய அகதிகள் முகாமான பங்களாதேஷின் காக்ஸ் பஜார் பகுதிக்கு 920,994 ரோஹிங்கியா அகதிகள் தப்பிச் சென்றுள்ளனர். அவர்களுக்காக சுமார் 10ஆயிரம் தற்காலிக வீடுகள் மலைப் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ளது. அந்தத் தற்காலிக வீடுகள் மிகவும் சிறிய சிறிய அறைகளாக உள்ளன. இருவர் படுத்துக்கொள்ளக்கூடிய இட அளவுதான். சர்வதேச அகதிகளுக்கான ஆணையம் தெரிவித்த விதிகளின்படி அவர்களுக்கான வீடுகள் அமைக்கப்படவில்லை. மழைக்காலங்களில் நடந்து செல்லமுடியாதபடி சேறும்சகதியுமாக இருக்கும். இங்கேதான் அகதிகள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அகதியாக வாழ்வது என்பது நினைத்து பார்க்க முடியாத அளவுக்குக் கொடுமையும் மன அழுத்தமும் கொண்டது.

 

தமிழ்நாட்டில் அகதிகளாக வாழ்ந்து வரும் இலங்கைத் தமிழர்கள் நிலைமை மற்ற பகுதிகளில் வாழும் அகதிகளைவிட அதிக மேம்பாடு கொண்டதாகவே உள்ளது. இராஜீவ்காந்தி படுகொலையைத் தொடர்ந்து, இலங்கை அகதிகள் பல்வேறு வகையில் கண்காணிப்புக்கு உள்ளக்கப்பட்டனர். பலர் சிறப்பு முகாம்களில் அடைக்கப்பட்டனர். இந்திய அரசு கடந்த 40 ஆண்டுகளில் சுமார் 3000 கோடியை அகதிகளுக்காகச் செலவிட்டுள்ளதாக மறுவாழ்வு அமைச்சகத்தின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. ஆண்டுக்கு சுமார் 100 கோடி மட்டுமே செலவிடப்பட்டுள்ளது. இது இந்திய நிதிசெலவு என்ற பெருங்கடலின் சிறுதுளியே என்பதை உணரவேண்டும்.

 

அகதிகள் நிலை உயர, அவர்களின் உரிமைகள் காக்கப்படும் வகையில் மேம்பாடு அடையும் வகையில் ஊடகவியலாளர்கள் செய்திகளை அறத்தோடு வெளியிடவேண்டும். அப்படி செய்திகளை வெளியிடும் ஊடகவியலாளர்கள் இந்தியப் புலனாய்வுத் துறையால் கண்காணிக்கப்படலாம். சில நேரங்களில் பாதிப்பும் ஏற்படும். அந்த நிலையிலும் எல்லாவற்றையும் தாங்கிக் கொண்டு அறத்தோடு ஊடகவியலாளர்கள் அகதிகளின் பக்கம் நிற்கவேண்டும்” என்று குறிப்பிட்டார்.

 

மூத்த ஊடகவியலாளரும் தமிழ்நாடு அரசின் இலங்கை தமிழர்களின் மறுவாழ்வு குழு உறுப்பினர் கோவி.லெனின் பேசும்போது,“உலக அரங்கில் அகதிகள் பிரச்சனையை ஒவ்வொரு நாடும் தங்களின் சட்டத்திட்டங்களின்படியே கையாளுகின்றன. தமிழ்நாட்டில் இலங்கை அகதிகள் மறுவாழ்வு என்பது அவர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வண்ணம் உள்ளது. 1983ஆம் ஆண்டு தொடங்கி இன்றுவரை இலங்கை அகதிகள் உள்ளனர். ஒன்றிய அரசின் நிதியுதவியை எதிர்நோக்காமல் முதல் அமைச்சர் பொறுப்பிலிருந்து எம்.ஜி.இராமச்சந்திரன் தொடங்கி, கலைஞர், செல்வி.ஜெயலலிதா இன்றைய முதல் அமைச்சர் ஸ்டாலின் வரை அகதிகள் உரிமையோடு வாழ எல்லா உதவிகளையும் செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றது.

தற்போது இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து பல இலங்கைத் தமிழர்கள் தமிழ்நாட்டிற்கு வந்துள்ளனர். அவர்கள் அகதிகள் என்ற வரையறைக்குள் வரமாட்டார்கள் என்றாலும் அவர்கள் அனைவரையும் தமிழ்நாடு அரசு திருப்பி அனுப்பவில்லை. அவர்கள் அனைவரும் மண்டபம் முகாமில் விசாரிக்கப்பட்டு, அவர்களின் மீது சட்டவிரோத குடியேற்றம் என்ற வகையில் மண்டபம் முகாமில் தங்கவைக்கப்பட்டு, அவர்களுக்குத் தங்குமிடம், உணவு வழங்கப்பட்டு வருகின்றது. நாடு திரும்பாத இலங்கை தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்குவது தொடர்பாக ஒன்றிய அரசோடு கலந்தாய்வு செய்யப்பட்டு வருகின்றது.

 

இதனால் இலங்கைத் தமிழர்கள் இரட்டைக் குடியுரிமை கொண்டவர்கள் என்று கருதிவிடக்கூடாது. அகதிகள் உரிமையுடன் வாழ 400 சதுர அடியில் அவர்களுக்குத் தமிழ்நாடு அரசு வீடுகள் கட்டித்தருவதற்குத் திட்டங்களைத் தீட்டி வருகின்றது. அகதிகள் அனைவரும் எங்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பு வேண்டாம். சமத்துவபுரம்போல் தனித்தனி வீடுகள் அமைத்துத்தரவேண்டும் என்ற கோரிக்கை வைத்துள்ளனர். தமிழ்நாடு அரசு நிதி ஆதாரங்களையும் கைவசம் உள்ள நில ஆதாரங்களின் அடிப்படையில் விரைந்து முடிவுகள் எடுக்க ஆலோசித்து வருகின்றது. தற்போதைய தமிழ்நாடு அகதிகளின் பிள்ளைகள் படிப்பதற்கு நிதியுதவி செய்து வருகின்றது. வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வேண்டும் என்று இலங்கை அகதிகள் கோரிக்கை வைத்துள்ளனர். அதையும் தமிழ்நாடு அரசு தன் பரிசீலனையில் வைத்துள்ளது. இந்நிலையில், அகதிகள் வாழ்வு மேம்பாடு அடையும் வண்ணம் ஊடகவியலாளர்கள் தங்களின் ஊடகங்களின் வழியாக செய்திகளை மக்களுக்கும் அரசுக்கும் தெரிவிக்கவேண்டும்” என்று குறிப்பிட்டார்.

பகல் 2.00 மணியளவில் பயிலரங்கம் நிறைவு பெற்றது. பயிலரங்கில் நிகழ்த்தப்பட்ட உரை தொடர்பாக பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டன. அவற்றிற்கு உரைநிகழ்த்தியவர்கள் உரிய பதிலை வழங்கினர். பயிலரங்கில் கலந்துகொண்ட ஊடகவியலாளர்களுக்குச் சான்றிதழ் வழங்கப்பட்டது.

– ஆசைத்தம்பி

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.