ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்ட (UPS) த்தை‌ ஏன் எதிர்க்கிறோம்? – ஐபெட்டோ வா.அண்ணாமலை விளக்கம்!

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்ட (UPS) த்தை‌ ஏன் எதிர்க்கிறோம்? – ஐபெட்டோ வா.அண்ணாமலை விளக்கம் பிரதமர் மோடி அவர்களின் தலைமையில் கூடிய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் – UPS. எவ்வித பிடித்தமும் மேற்கொள்ளாமல் ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம், பணிக்கொடை, கம்முட்டேஷனை (commutation) உரிமையுடன் திரும்ப அளித்துவரும் பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு மாற்றுத் திட்டமாக UPS ஐ ஒருக்காலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்பதை AIFETO- ALL INDIA FEDERATION OF ELEMENTARY TEACHERS ORGANISATIONS சார்பாக மத்திய அரசுக்கு அழுத்தமாக பதிவு செய்கிறோம்.

தில்லியில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தலைமையில் 24.08.2024 அன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு ஊழியர்கள் 23இலட்சம் பேர் பயன்பெறுவார்கள். அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் அமல்படுத்தப்படும்.
நிதி பாதுகாப்பை உறுதி செய்கிறது.

உடனுக்குடன் அங்குசம் வாட்சப் சேனலில்.. சேர.....

1) பிரதமர் மோடி அவர்கள் இந்தத் திட்டம் நிதி பாதுகாப்பை உறுதி செய்கிறது!
தேசிய முன்னேற்றத்தில் கணிசமான பங்களிப்பை வழங்கும் அனைத்து அரசு ஊழியர்களின் கடின உழைப்பால் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம்.

ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் அரசு ஊழியர்களுக்கு கண்ணியத்தையும், நிதி பாதுகாப்பையும் உறுதி செய்கிறது. அவர்களின் நல்வாழ்வு மற்றும் பாதுகாப்பான எதிர்காலத்திற்கான எங்களின் அர்ப்பணிப்பும் அதில் இணைந்துள்ளது என்றார்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

சங்கத்தலைவர்கள் *சந்திப்பு : வரவேற்பும் – எதிர்ப்பும் .

ஒன்றிய அரசு ஊழியர்களின் சில சங்கங்கள் பிரதமர் அவர்களை சந்தித்து ஓய்வூதிய உத்தரவாதம் அளிக்கும் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தினை கொண்டு வந்ததற்கு வரவேற்று நன்றியும் தெரிவித்துக் கொண்டுள்ளார்கள்.
எதிர்ப்பினை தெரிவித்த சங்கங்கள் :

பிரதமரிடம் எவ்வித பங்களிப்பும் பெறாமல் சிவில் சர்வீஸ் விதிகளின்படி ஊழியர்களுக்கு ஓய்வூதியத்தித்தினை வழங்குகிற பழைய ஓய்வூதியத் திட்டத்தில் உள்ள சிறப்பான அம்சங்கள் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தில் UPS- UNIFIED PENSION SCHEME -ல் இல்லை. மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்கள்.

அதேசமயம் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் கொண்டு வருவதற்கான வாய்ப்புகள் இல்லை என மறுத்த ஒன்றிய பா.ஜ.க. அரசு தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் உத்தரவாதம் மற்றும் அதனுடன் தொடர்புடைய நிதி தாக்கங்களை மதிப்பீடு செய்ய கடந்த ஆண்டு நிதித்துறை செயலாளர் டி. வி. சோமநாதன் அவர்கள் தலைமையில் குழு அமைத்தது.

சர்வதேச ஓய்வூதிய முறைகள் மற்றும் ஆந்திர அரசின் ஓய்வூதியக் கொள்கைகளை இக்குழு ஆய்வு செய்து பல்வேறு பரிந்துரைகளை அரசுக்கு வழங்கியுள்ளதின் அடிப்படையில் புதிய ஓய்வூதியத் திட்டத்திற்கு மத்திய அரசு வழங்கியுள்ளது என ஒன்றிய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.

மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறுகையில் இத்திட்டத்தின் விவரங்களை இறுதி செய்ய ரிசர்வ் வங்கி மற்றும் உலக வங்கி உள்ளிட்ட பல உயர் அமைப்புகளுடன் 100 கூட்டங்களை நடத்திய குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது.
பழைய ஓய்வூதியத் திட்டம் OPS, தேசிய ஓய்வூதியத் திட்டம் -NPS, ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் UPS
பயன்களையும் -பாதிப்பினையும் ஒப்பிட்டுப் பார்க்கலாம்….

1) பழைய ஓய்வூதியத் திட்டம் (OPS):-

பழைய ஓய்வூதியத் திட்டம் எவ்வித பங்களிப்பும் செலுத்தாமல் ஓய்வூதியம் 50%+ அகவிலைப்படி, பணிக்கொடை withdrawl of commuted corpus whole amount of GPS.

GPF உண்டு. ஆண்டுக்கு இரண்டு முறை அகவிலைப்படி உயர்வின்போதும் ஓய்வூதியம் உயரும். ஆண்டுக்கு ஒருமுறை GPF- ல் கடன் பெறலாம். பகுதி நேர முன்பணமும் பெறலாம்.

விருப்ப ஓய்வில் சென்றாலும் ஓய்வூதியம் பெறலாம். குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.9000 + அகவிலைப்படி குடும்ப ஓய்வூதியம் 60% அடிப்படை ஊதியத்தில் அல்லது ஓய்வூதியத்தில் 30%.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

2) தேசிய ஓய்வூதியத் திட்டம் (NPS):-
2004 ஏப்ரல் முதல் பிரதமர் வாஜ்பாய் காலத்தில் அமல்படுத்தப்பட்ட புதிய ஓய்வூதியத் திட்டம் பிறகு தேசிய ஓய்வூதியத் திட்டமாக மாறியது. National Pension System.

ஓய்வூதியம் உறுதி படுத்தப்படவில்லை. உறுப்பினர்களின் பங்களிப்பு 10% மத்திய அரசு 14% பங்களிப்பு.
ஓய்வு பெறும்போது மத்திய அரசு பங்களிப்புத் தொகையுடன் சேர்த்து வரும் மொத்தத்தொகையில் 60 விழுக்காட்டினை வட்டியுடன் வரி இல்லாமல் சேர்த்து வழங்கப்படும். மீதமுள்ள 40%:தொகையினை பங்குச் சந்தையில் செலுத்தப்பட்டு வரும் வட்டியினை சேர்த்து குறைந்தபட்சம் ஓய்வூதியம் வழங்கப்படும்.

அகவிலைப்படி உயர்வுக்கேற்றவாறு ஓய்வூதியம் உயராது. சேர்த்து வைத்த பணத்தில் கடன்பெற முடியாது.
ஓய்வு பெறும்போது பணிக்கொடையினை மத்திய அரசு உரிய விதிமுறைகளுடன் வழங்கும்.
இறந்து போனாலும் பணிக்கொடையினை மத்திய அரசு வழங்கி வருகிறது.

விருப்ப ஓய்வில் செல்லுபவர்களுக்கு NPS திட்டத்தில் சேர்த்து வைத்த பணத்தில் 20% வழங்கப்படும். 80% சேமிப்பில் வைத்து ஓய்வூதியம் வழங்கப்படும்.3) ஒருங்கிணைந்த ஓய்வூதியத்திட்டம் UPS :- ஓய்வூதியம் 50%+ அகவிலைப்படி உறுப்பினர்களின் பங்களிப்புத்தொகை 10%
அடிப்படை ஊதியம் + அகவிலைப்படி.

மத்திய அரசு விதிகளின்படி பணிக்கொடை 25 லட்சம் உண்டு. சேர்த்து வைத்த பணத்தில் கடன்பெறுவது தொடர்பாக குறிப்பிடப்படவில்லை… GPF இல்லை.

அகவிலைப்படி உயரும் போதெல்லாம் ஓய்வூதியமும் உயரும். ஆண்டுக்கு இரண்டு முறை.
பணிக்காலத்தில் ஆசிரியர் (அ) அரசு ஊழியர் ஒருவர் சேமித்து வைத்திருந்த தொகை சுமார் 1 கோடியாக இருந்தாலும் கூட அந்தத்தொகை முழுவதும் பென்ஷனுக்காக மட்டுமே பயன்படுத்தப்படும். திருப்பித்தர மாட்டாது.

ifecto annamalai
ஐபெட்டோ வா.அண்ணாமலை

மொத்த ஓய்வூதிய பலன் :-

ஓய்வு பெறும்போது கிராஜுவிடி எனப்படும் பணிக்கொடையுடன் கூடுதலாக ரொக்கப் பலனும் கிடைக்கும். பணி ஓய்வின்போது பெற்ற மாதசம்பளத்தில் அடிப்படை ஊதியம் மற்றும் DA., ஆகியவற்றில் 10-ல் ஒரு பங்கு ரொக்கப் பலனாக கிடைக்கும். நிறைவு செய்த ஒவ்வொரு ஆறு மாத பணியின் அடிப்படையில் இது வழங்கப்படும். இதனால் உறுதி செய்யப்பட்ட ஓய்வூதியம் குறையாது.

தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் ஒன்றிய அரசு பங்களிப்பு 14% வழங்கப்பட்டநிலையில் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தில் 18.5 சதவீதமாக அதிகரிக்கப் பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
விருப்பம் அளித்தல் :-

தேசிய ஓய்வூதியத் திட்டம் அல்லது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் இரண்டில் ஒன்றை தேர்வுசெய்ய ஊழியர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும். இந்தப் புதிய திட்டம் ஏப்ரல் 1, 2025 முதல் அமலுக்கு வரும். ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தின் பலன்கள் நிலுவைத் தொகையுடன் மார்ச் 31, 2025வரை ஓய்வு பெற்றவர்களுக்கும் பொருந்தும்.

பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்தப்பட வேண்டுமென்று கடந்த 20 ஆண்டுகளாக டெல்லி ஜந்தர்மந்தரில் பேரணி, ஆர்ப்பாட்டம், நாடாளுமன்ற முற்றுகை என தொடர்ந்து போராடி வருகிறோம். ஆனால் மேற்கு வங்கத்தில் பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர்ந்து அமலில் இருந்து வருகிறது.

ராஜஸ்தான், சட்டிஸ்கர், பஞ்சாப் போன்ற மாநிலங்களில் பழைய ஓய்வூதியத் திட்டத்தினை அமல்படுத்த தொடங்கி விட்டனர். ஐந்து மாநில சட்டசபை தேர்தல் வரவிருக்கும் சூழ்நிலையில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் அவர்கள் தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் நாங்கள் பழைய ஓய்வூதியத்திட்டத்தினை மீண்டும் அமல்படுத்துவோம் என்று கூறியுள்ளார்.

மத்திய அரசின் கவனத்தை பெரிய அளவில் ஈர்க்கும் வண்ணம் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தினை மாற்றியமைத்திட அனைத்து மாநிலங்களும் ஒன்றிணைந்த ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், தொழிற்சங்கங்களின் போராட்டத்தினை டில்லியை மையப்படுத்தியும், மாநில தலைநகரை மையப்படுத்தியும் தொடர்ந்து களம் காண்போம்.
வெற்றி கிட்டும்வரை களப்போராட்டங்களில் கரம் கோர்த்து நிற்போம்.

வா.அண்ணாமலை,
ஐபெட்டோ அகில இந்தியச் செயலாளர்,
தமிழக ஆசிரியர் கூட்டணி.

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.