“சிறுநீர்ப்பாதை தொற்று” – வெஸ்டர்ன் டாய்லெட்

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

சமீபத்தில் கிளினிக்கில் என்னை சந்தித்த சகோதரி ஒருவருக்கு இருந்த பிரச்சனை இங்கு பலருக்கும் இருக்கும் என்பதால் விழிப்புணர்வுக்காக பகிர்கிறேன்.

சகோதரிக்கு இருந்த பிரச்சனை சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல், அடிவயிற்று வலி, அடிக்கடி குளிர் காய்ச்சல்  அவருக்கு “சிறுநீர்ப்பாதை தொற்று” ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitche

அவரிடம் காரணம் கேட்ட போது, சகோதரி அவர்கள், துணிக் கடையில் கடந்த சில மாதங்களாகப் பணிபுரிந்து வருகிறார். அங்கு இருப்பது ஒரு வெஸ்டர்ன் டாய்லெட். இவருடன் பல ஆண்களும் பணிபுரிகிறார்கள்.சிறுநீர் கழிக்கும் இச்சை ஏற்படும் போது

சிறுநீர்ப்பாதை தொற்று
சிறுநீர்ப்பாதை தொற்று

அங்குசம் தற்போதைய இதழ்.. படிக்க..

அதே வெஸ்டர்ன் டாய்லெட்டை பயன்படுத்த வேண்டியுள்ளது என்றும், அந்த டாய்லெட் அசுத்தமாக இருப்பதாகவும், அதை இவர் இயன்ற அளவு சுத்தம் செய்வதாகவும் கூறினார்.

அந்த வெஸ்டர்ன் டாய்லெட்டில் அமர்ந்து சிறுநீர் கழிக்க வேண்டியிருப்பதால் அவ்வப்போது சிறுநீர்பாதை தொற்று / எரிச்சல் / நமைச்சல் / அரிப்பு ஏற்படுவதாகக் கூறினார்.

அதற்கு நான் கூறிய அறிவுரை

“சகோதரி, நீங்க அமேசான் போன்ற ஆன்லைன் தளங்கள்ல  “பெண்களுக்கான சிறுநீர் கழிக்கும் கப்” ரூபாய் இருநூறுக்கும்  கம்மியா விக்குது.. அதை வாங்கி வச்சுக்கிட்டு எளிதா பயன்படுத்தலாம்.

சிறுநீர் கழிக்கும் கப்
சிறுநீர் கழிக்கும் கப்

அதை உபயோகித்து சுத்தம் குறைவான வெஸ்டர்ன் டாய்லெட்டுகள்ல உட்கார்ந்து சிறுநீர் கழிக்கும் தேவை இல்லாம ஆண்களைப் போல நின்று கொண்டு சிறுநீர் கழிக்கலாம். இதனால உங்களுக்கு தொற்று ஏற்படும் வாய்ப்பு குறைஞ்சுடும். முயற்சி பண்ணிப் பாருங்க” என்றேன்.

அவரும் அதை ஆமோதித்து விடை பெற்றார்.

நமக்கு ஏற்படும் நோய்கள்  அது தொற்று நோயாகட்டும், தொற்றா நோயாகட்டும் அவற்றை உண்டாக்குவதில் நாம் அன்றாட வாழ்வியலில் நாம் செய்யும் விஷயங்களுக்கென ஒரு பங்கு இருக்கும். அதையும் நாம் சரி செய்தாக வேண்டும்.

இந்தப் பெண்மணியைப் பொருத்தவரை அவர் பணிபுரியும் இடத்தில் இருக்கும் சுத்தம் குறைவான கழிப்பறை அதிலும் அமர்ந்து சிறுநீர் கழிக்க வேண்டிய நிலையில் இருக்கும் வெஸ்டர்ன் டாய்லெட் இருப்பதால் எளிதில் சிறுநீர்ப்பாதை தொற்றுக்கு உள்ளாகிறார் என்பதை அறிந்த பிறகு அவரது இந்த சிக்கலை சரிசெய்யும் வழியை அவர் கடைபிடிக்காவிடில் மீண்டும் மீண்டும் தொற்று ஏற்படும் நிலை வரும்.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

இந்த பெண்கள் சிறுநீர்கழிக்க உதவும் கப் – மீண்டும் உபயோகிக்கத் தக்க வகையில் சிலிகான் கொண்டு செய்யப்பட்டுள்ளது. விலையும் மலிவு.

இதை பணியிடங்களிலும் பயணங்களிலும்  பெண்கள் உபயோகிக்க முடியும். இன்னும் மூட்டுத் தேய்மானம் கொண்ட முதிய பெண்மணிகள், அமர்ந்து சிறுநீர் கழிக்க இயலாத நிறைமாத  கர்ப்பிணிகள் உபயோகிக்க முடியும்.

இன்னும் பணிபுரியும் பணியிடங்களில் சிறுநீர் கழிக்கும் கழிப்படங்களே  இல்லாமல் இருக்கும் சூழ்நிலையும் உள்ளது.

ஆண் பெண் இருபாலரும் உபயோகிக்கத் தக்க சிறுநீர் சேகரிக்கும் கொள்கலனுடன் கூடிய மலிவு விலை மருத்துவ உபகரணங்கள் ஆன்லைனில்  கிடைக்கின்றன. இவற்றை உபயோகித்து சிறுநீர் கழிக்க முடியும். பயணங்களின் போதும் எளிதாக உபயோகிக்க முடியும்.

வெஸ்டர்ன் / இந்தியன் டாய்லெட்
வெஸ்டர்ன் / இந்தியன் டாய்லெட்

பலரும் சிறுநீர் கழிக்க சரியான சூழல் இல்லாததால் சிறுநீர் இச்சையை அடக்குவதும்  அதனுடன் சரியாக நீர் அருந்தாமலும்  பல மணிநேரங்கள் பணி புரிகின்றனர். இது காலப்போக்கில்  மருத்துவ சிக்கல்களைத் தோற்றுவிக்கும்.

பெண்களைப் பொருத்தவரை பொது இடங்களில் சிறுநீர் கழிக்க வெஸ்டர்ன் / இந்தியன் ஆகிய வாய்ப்பு இருப்பின் – இந்தியன் டாய்லெட்டைத் தேர்ந்தெடுக்கவும்.

வெஸ்டர்ன் டாய்லெட் இருக்கும் இடங்களில் சுத்தம் குறைவான சூழல்களில் பயணங்களில் இந்த சிறுநீர் கழிக்கும் உபகரணங்கள் உபயோகமாக இருக்கும். பயன்படுத்தி பாதுகாப்பாக சிறுநீர் கழிக்க முடியும். சிறுநீர்ப்பாதை தொற்று ஏற்படுவதை தடுக்க முடியும்.

நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்

வாய்நாடி வாய்ப்பச் செயல்   –  திருக்குறள்

நோய் என்ன? நோய்க்கான காரணம் என்ன? நோய் தீர்க்கும் வழி என்ன? இவற்றை முறையாக ஆராய்ந்து சிகிச்சை செய்ய வேண்டும்.

 

Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா

பொது நல மருத்துவர்

சிவகங்கை

Saravana Multispeciality Hospital Pvt. Ltd., Madurai,

Leave A Reply

Your email address will not be published.