நேர்மையான டி.ஐ.ஜி. சி.விஜயகுமார் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை – நடந்தது என்ன ?

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

நேர்மையான டி.ஐ.ஜி. சி.விஜயகுமார் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை – நடந்தது என்ன ?

கோவை சரக டி.ஐ.ஜி.யாக பணியாற்றி வந்தவர்  சி.விஜயகுமார். கோவை பந்தய சாலை பகுதியில் உள்ள அவரது முகாம் அலுவலகத்தில் (வீட்டில்) இன்று 07.07.2023 காலையில் திடீரென துப்பாக்கி சத்தம் கேட்டுள்ளது.  அப்போது அங்கு ஓடி சென்று பார்த்த காவலர்கள் டி.ஐ.ஜி. சி.விஜயகுமார் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்தனர். இதனையடுத்து சம்பவ இடத்தில் காவல்துறை உயர் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அங்குசம் இதழ்.. இலவசமாக படிக்க...

DIG விஜயகுமார் - தேனி வீடு
DIG விஜயகுமார் – தேனி வீடு

2009ல் நேரடியாக ஐ.பி.எஸ். ஆக தேர்வு செய்யப்பட்டவர்.  தேனி மாவட்டம் போடி அனைக்கரைபட்டியை சேர்ந்தவர் விஜயகுமார் ஐபிஎஸ் . தேனி ரத்தினம் நகரில் விஜயகுமாரின் தாய் தந்தை மற்றும் அவரது தங்கை குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். விஜயகுமாரின் தாய் ராசாத்தி ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியர். தந்தை செல்லையா ஒய்வு வி.ஏ.ஓ. ஆவார். இவருடை மனைவி ஒய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ராஜேந்திரனின் மகள், பல் மருத்துவர் கீதாவாணி. இவருக்கு நந்திதா என்ற ஒரே மகள். பன்னிரண்டாம் வகுப்பை நிறைவு செய்துள்ள நந்திதா, நீட் தேர்வு எழுதி அதில் தேர்ச்சியும் பெற்றுள்ளார்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

கடந்த பத்து நாட்களுக்கு முன்பாக விஜயகுமார் ஐ.பி.எஸ். தேனியில் உள்ள தனது வீட்டிற்கு வந்து தனது தாய் தந்தை ஆகியோரை சந்தித்துச் சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில், சற்றும் எதிர்பார்க்காத வகையில் நேர்ந்துவிட்ட மகனின் மரணச் செய்தியை கேட்டு, கதறி அழுத பெற்றோர்களுக்கு ஆறுதல் சொல்ல முடியாமல் தவிக்கின்றனர், அவரது உறவினர்கள்.  அவரது உறவினர்களுக்கு மட்டுமல்ல; நேர்மையான போலீசு அதிகாரி என்று பெயர் எடுத்த ஒரு உயர் போலீசு அதிகாரியின் துர்பாக்கியமான முடிவை கண்டு தமிழகமே உறைந்துதான் போயுள்ளது.

DIG விஜயகுமார் தன் மனைவியுடன்
DIG விஜயகுமார் தன் மனைவியுடன்

எளிய குடும்பத்தில் இருந்து பிறந்து இவ்வளவு பெரிய உயரத்திற்கு வளர்ந்த இவர், எப்படி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார் என்கிற சம்பவம் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அவரது உடல் கோவை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக, அவரது  உடல் தேனி ரத்தினம் நகரில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டுவரப்பட்டு, மாலையில் உடல் தகனம் செய்யப்படவுள்ளது. அவருடைய உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த காவல்துறை தலைவர் சங்கர் ஜிவால் வருகிறார்.

முதல் கட்ட விசாரணையில், நேற்று 07.07.2023  இரவு, தன்னுடைய பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்ட கன்மேன் ஒருவரது துப்பாக்கியை எடுத்து  டி.ஐ.ஜி.  தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார், என்கிறார்கள் போலீசார்.

கோவை சரகம் என்பது கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, ஆகிய நான்கு மாவட்டங்களை கொண்டதாகும்.  குரூப் 1 தேர்வில் தேர்ச்சி பெற்றவர் பிறகு விடா முயற்சியாக ஐ.பி.எஸ்., தேர்வாகி பின்னர் டி.ஐ.ஜி.யாக பதவி உயர்வு பெற்றவர். 2009 ல் ஐபிஎஸ் பேட்ஜில் பணியில் சேர்ந்தவர் இவர். நீட் தேர்வு மற்றும் சிவசங்கர் பாபா வழக்குகளில் சிறப்பு விசாரணை நடத்தியவர். காஞ்சிபுரம், கடலூர், நாகை, திருவாரூரில் எஸ்.பி.யாக பணியாற்றியவர். கடந்த ஜனவரி மாதம் கோவை டி.ஐ.ஜி.யாக பொறுப்பேற்றார்.

தற்கொலைக்கு என்ன காரணமாக இருக்கும்? என்ற விசாரணை தீவிரமாகியுள்ளது. நான்கு மாவட்டங்களை கட்டுப்படுத்தக்கூடிய ஒரு ஐ.பி.எஸ். அதிகாரி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் போலீசார் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், கோவை சரக டி.ஐ.ஜி. விஜயகுமார் தற்கொலை குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில், “கோவை சரக காவல்துறை துணைத் தலைவர் விஜயகுமார் இ.கா.ப., இன்று அகால மரணம் அடைந்தார் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்தேன்.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

டி.ஐ.ஜி. சி.விஜயகுமார்
டி.ஐ.ஜி. சி.விஜயகுமார்

விஜயகுமார் தனது பணிக்காலத்தில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட பல்வேறு பணிப் பொறுப்புகளில் சிறப்பாகப் பணியாற்றி தமிழ்நாடு காவல்துறைக்குப் பெருமை சேர்த்தவர். அவருடைய இந்த மரணம் தமிழ்நாடு காவல் துறைக்குப் பேரிழப்பாகும். அவருடைய குடும்பத்தாருக்கும் காவல்துறையைச் சேர்ந்த நண்பர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

”கோவை சரக டி.ஐ.ஜி. விஜயகுமார் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தின் பின்னணி குறித்து தீவிரமாக விசாரணை நடத்த வேண்டும்” என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். ”இச்சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும்” என பா.ஜ.க. துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்நிலையில், தமிழக டி.ஜி.பி. சங்கர் ஜிவால், கோவை சரக டி.ஐ.ஜி. விஜயகுமார் தற்கொலை குறித்து தெரிவிக்கையில், “டி.ஐ.ஜி. விஜயகுமார் மன அழுத்தத்தில் இருந்து வந்துள்ளார். மேலும், மன அழுத்தத்திற்கு நிவாரணம் அளிக்கும் வகையில் மருந்துகள் எடுத்து வந்துள்ளார். இந்நிலையில் விஜயகுமார் காலையில் நடைப்பயிற்சி மேற்கொண்ட பிறகு தற்கொலை செய்து கொண்டதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தற்கொலை செய்து கொண்டதற்கு பணிச்சுமை காரணம் அல்ல” எனத் தெரிவித்துள்ளார்.

DIG விஜயகுமார் தன் மனைவியுடன்
DIG விஜயகுமார் தன் மனைவியுடன்

யார் இந்த விஜயகுமார் ஐபிஎஸ்? திறம்பட கையாண்ட வழக்குகள்!

இன்று காலை தற்கொலை செய்து கொண்ட கோவை சரக டி.ஐ.ஜி. விஜயகுமார், சி.பி.சி.ஐ.டி. – எஸ்.பி.யாக இருந்தபோது சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கின் விசாரணை அதிகாரியாக இருந்தது உள்பட பல்வேறு முக்கியமான வழக்குகளில் சிறப்பாக செயல்பட்டவர்.

மேலும், சுரானா வழக்கில் சி.பி.ஐ. வசம் இருந்த 103 கிலோ தங்க நகைகள் மாயமான விவகாரத்திலும் விசாரணை அதிகாரியாக விஜயகுமார் செயல்பட்டார். அதன் பின்னர் அண்ணா நகர் துணை ஆணையராக பணியாற்றியபோது, அரும்பாக்கத்தில் பட்டப்பகலில் பெட் வங்கியில் நடந்த 20 கோடி மதிப்பிலான தங்க நகைகள் கொள்ளை வழக்கை திறம்பட கையாண்டு ஒரே நாளில் குற்றவாளியைக் கைது செய்து பாராட்டைப் பெற்றார்.

கடந்த ஜனவரி மாதம் டி.ஐ.ஜி.யாக பதவி உயர்வு பெற்ற விஜயகுமார், கோவை சரக டி.ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டு பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில், கடந்த சில நாட்களாக டி.ஐ.ஜி. விஜயகுமார் மன உளைச்சலில் இருந்து வந்ததால் உயர் அதிகாரிகள் மூலம் அவருக்கு கவுன்சிலிங் வழங்கப்பட்டு வந்ததாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், சென்னையில் உள்ள அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் விஜயகுமாருடன் கடந்த மூன்று நாட்களாக இருந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மன உளைச்சலில் இருந்த விஜயகுமாருக்கு சில நாட்கள் விடுமுறையும் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு நாட்களாக தூக்கமில்லாமல் மன உளைச்சலில் இருந்துள்ளார். இன்று அதிகாலை திடீரென துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். குடும்பப் பிரச்னை காரணமாக டி.ஐ.ஜி. விஜயகுமார் தற்கொலை செய்து கொண்டதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனை நேரில் சென்று விசாரிக்க சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி. அருண் கோவைக்கு விரைந்துள்ளார்.

அங்குசம் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள...

Leave A Reply

Your email address will not be published.