அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

தண்ணீர் தாகத்திற்கா? இலாபத்திற்கா?

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

கோவையைப் போலவே, சேலம் மாநகரின் குடிநீர் வழங்கும் திட்டமும் சூயஸ் நிறுவனத்தின் கைகளுக்குள் சென்று விட்டது. உலக நிதி நிறுவனங்களின் கடன்களைப் பெறும்போது இதுபோன்ற தனியார் நீர் நிறுவனங்கள் அனுமதிக்கப்பட வேண்டும் என்பது எழுதப்படாத விதியாக இருக்கிறது என்பதை முன்பே குறிப்பிட்டிருந்தேன்.

இனி அடுத்து சூயஸ் நிறுவனத்தின் சேவையைப் புகழும் காட்சிகள் அரங்கேறலாம். ஏனெனில், முன்பு கோவையில் சூயஸ் அறிமுகமானபோது அப்போதைய ஆணையர், ” சூயஸ் கால்வாயை வெட்டிய புகழ் பெற்ற நிறுவனம்தான் சூயஸ் நிறுவனம்” என்று புகழாரம் சூட்டினார். இந்த விக்கிபீடியா தகவல் யாருக்குத்தான் தெரியாது?

இந்த வார August 12 அங்குசம் இதழில்…

ஆனால், கடந்த 2009 ஆம் ஆண்டில் ஐரோப்பிய யூனியனால் அந்நிறுவனத்துக்கு ஏன் 553 மில்லியன் யூரோ அபராதம் விதிக்கப்பட்டது என்பதை மட்டும் கூறமாட்டார்கள். அடுத்து, “இந்த சூயஸ் நிறுவன சேவை நாட்டுக்குத் தேவை” என்கிற ரீதியில் வசனங்களை நாம் எதிர்க்கலாம்.  அதற்கு முன்பு அந்தச் சேவை முன்னேறிய நாடான ஜப்பானில் எப்படி இருந்தது நீரியல் எழுத்தாளர் மாட் பார்லே விவரிப்பதைப் பார்த்து விடுவோம்.

ஜப்பானின் கியாட்டோ நகரில் கடந்த 2003 மார்ச்சில் உலக நீர் மன்ற மாநாடு ஐந்து நட்சத்திர விடுதி ஒன்றில் நடைப்பெற்றது. அப்போது அங்குப் பணிபுரியும் ஒரு தொழிலாளி மேடையில் ஏறினார். அவருடைய கைகளில் இரண்டு நீர்ப்புட்டிகள் இருந்தன. ஒரு புட்டியில் இருந்த நீர் தூய்மையாக இருந்தது. அது அவர் பணியாற்றும் நட்சத்திர விடுதியின் நீர். மற்றொரு புட்டிநீர் மங்கிய நிறத்திலும் கெடுமணத்துடனும் இருந்தது. அது அவர் வசிக்கும் குடியிருப்புப் பகுதியிலிருந்து  கொண்டு வரப்பட்டது. தொழிலாளி மேடையில் அமர்ந்திருந்த சூயஸ். நிறுவனத் தலைமை நிர்வாக அதிகாரியான திரு. ழீன் லூயி சாஸ்ஸாட் என்பவரைப் பார்த்துக் கேட்கிறார்.

திருச்சி உறையூரில் புதிய உதயம்...

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

“இந்த இரண்டுமே சூயஸ் நிறுவனத்தால் வினியோகிக்கப்படும் நீர்தான். இவற்றில் எங்கள் பகுதிக்கு உங்கள் நிறுவனம் வினியோகிக்கும் இந்தக் கலங்கிய நீரை நீங்கள் இப்போது குடிக்கிறீர்களா?”

சூயஸ் தலைவர் உடனே மறுத்து விட்டார்.

வாழ்க சூயஸ் நிறுவன சேவை!

எழுத்தாளர் நக்கீரன்.

 

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.