நாளை மீண்டும் திருச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம்…?

இந்த வார அங்குசம் இதழ் படிக்க..

தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு வருகிற 23ஆம் தேதி நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள் இறுதி கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில் நாளை மாலை பிரதமர் நரேந்திர மோடி கோவையில் பிரச்சாரம் செய்ய உள்ளார்.

அதன் பின்னர் இரவு 7 மணி அளவில் மேட்டுப்பாளையத்தில் நடைபெறும் பிரச்சார பொதுக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். மேட்டுப்பாளையம், ஊட்டி, கூடலூர், குன்னூர், கவுண்டம்பாளையம் , தொண்டாமுத்தூர் ஆகிய தொகுதிகளை சேர்ந்த வேட்பாளர்களை ஆதரித்து பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் பிரச்சாரம் செய்கிறார்.

திருச்சியிலிருந்து முதல் இன்டர்நேஷனல் ரோட்டரி இயக்குநர்…

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

பின்னர் பிரச்சாரத்தை முடித்துக்கொண்டு முடித்துவிட்டு முதலமைச்சர் மு க ஸ்டாலின் திருச்சி வந்து இரவு தங்குகிறார்.திருச்சி கிழக்கு தொகுதியில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் காலை 6:00 மணி முதல் 10 மணி வரை பிரம்மாண்ட ரோடு ஷோ மூலம் மக்களை சந்தித்து பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார்.அப்போது வீதி வீதியாக சென்று திமுக வேட்பாளருக்கு பொதுமக்களை நேரில் சந்தித்து ஆதரவு திரட்டுகிறார்

திருச்சி மாநகர போலீசார் அனுமதியும் வழங்கியுள்ளனர் மீண்டும் முதல்வர் மு க ஸ்டாலின் திருச்சியில் ரோடு ஷோ மூலம் மக்களை சந்திப்பதால் திமுக மற்றும் கூட்டணி கட்சித் தொண்டர்கள் கடும் உற்சாகத்தில் உள்ளனர். ஆனால் திமுக தரப்பில் முதல்வர் வருகையை உறுதி செய்யவில்லை. இன்று மாலை அவரது வருகை தொடர்பான உறுதியான தகவல் கிடைக்கும் என கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.