தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு சட்டத்தை திரும்பப் பெறு ! சேலத்தில் விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் !!

0

தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு சட்டம் 2023 ஐ திரும்பப் பெறுக!

மிழ்நாடு நில ஒருங்கிணைப்பு சட்டம் 2023 திரும்ப பெற வலியுறுத்தி தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் சேலத்தில் மே-17 அன்று நடைபெற்றது. தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சேலம் மாவட்ட செயலாளர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் .

நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடரில் இறுதி நாளில் 17 சட்ட மசோதா  கொண்டு வந்தது எவ்வித விவாதம் இல்லாமல் நிறைவேற்றி உள்ளது. தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு சட்டம் 2023  சட்டத்தின் மூலம் அரசு அறிவிக்கும் சிறப்பு திட்டங்களுக்கு 100 ஹெக்டேர் வரை உள்ள நீர் நிலைகள்,  நீர்வழிப் பாதை உள்ளிட்ட தனியாரிடம் கொடுப்பதற்கு சட்டம் வழிவகை செய்கிறது.

இந்த சட்டத்தை திரும்பப்பெறக்கோரி தமிழகம் முழுவதும் விவசாய சங்கங்களும் அரசியல் கட்சிகளும் கோரிக்கை விடுத்துவரும் நிலையில், , “தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு சட்டம் 2023 திரும்ப பெற வேண்டும் , மத்திய அரசு செறிவு ஊட்டப்பட்ட அரிசி வழங்கும் திட்டத்தை கைவிட வேண்டும்” உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி  தமிழ்நாடு விவசாய சங்கத்தின் சார்பில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

– சோழன் தேவ்.

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடிவர..

Leave A Reply

Your email address will not be published.