பத்து ரூபாய் காயினா ? வித்தியாசமாக யோசிச்ச துணிக்கடை முதலாளி !

0

அங்குசம் இதழ் இணையதளத்தில் E-Book வாசிக்க... இந்த லிங்கை பயன்படுத்துங்கள் - அங்குசம் அச்சு இதழ்.. உங்கள் இல்லம் தேடி வர ஆண்டு சந்தா ரூபாய் 500 மட்டுமே - தொடர்பு எண் - 9488842025

பத்து ரூபாய் காயினா ? பானி பூரி கடைக்காரன் கூட வாங்க மாட்டேன்கிறான்!

மக்கள் கூட்டம்
மக்கள் கூட்டம்

கையில் கொடுத்த மாத்திரத்திலேயே ஏதோ அறுவெறுப்பான பொருள் ஒன்றை கையில் தொட்டது போன்ற உணர்வு நிலையிலிருந்தேதான் பத்து ரூபாய் காயினை கையாண்டு வருகிறார்கள். சென்னை போன்ற பெருநகரங்களில் மட்டுமே அதுவும் ஓரளவு புழக்கத்தில் இருக்கிறது. ”செங்கல்பட்டுக்கு அப்பால இது செல்லாது” என்பது பாமரர்களின் மொழி. ”பர்ஸ்-ல வைக்க முடியல கொஞ்சம் நோட்டா கொடுத்துடுங்களே”  இது டிப்டாப் ஆசாமிகளின் மொழி. ”எல்லோருமே காயினா கொடுத்தா, நான் என்னதான் பன்றது. திரும்பக் கொடுத்தா எவனும் வாங்கித்தொலையவும் மாட்றான்” இது பேருந்து நடத்துனர்களின் வலி.

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க

பெரும்பாலான பேருந்துகளில் பத்து ரூபாய் காயினை வாங்க மறுக்கும் நடத்துனர்களோடு, ரிசர்வ் வங்கியில் ஆரம்பித்து சிறை தண்டனை வரையில் பெரும் சட்டப்பஞ்சாயத்தே நடத்திக்கொண்டிருப்பார்கள் சில பயணிகள். ஆனாலும், பிடித்த பிடியிலேதான் நிற்பார் நடத்துனர்.

என்னதான்  ரிசர்வ் வங்கி ஆயிரம் சுற்றறிக்கை அனுப்பினாலும், காயினை வாங்க மறுத்தால் சிறை தண்டனை என பத்திரிகைகளில் பக்கம் பக்கமாக விழிப்புணர்வு கட்டுரைகளை எழுதினால் எதுவும் இங்கே எடுபடாது.

3
மக்கள் கூட்டம் (2)
மக்கள் கூட்டம் (2)

இதையே கொஞ்சம் வித்தியாசமா செஞ்சா என்னனு யோசிச்சிருப்பாரு போல, திருப்பத்தூர் எக்ஸ்போர்ட் ஷாப்பீ என்ற பெயரில் துணிக்கடையை நடத்திவரும் சத்யா பாலாஜி .

4

பத்து ரூபாய் நாணயங்கள் 5 கொடுத்துவிட்டு ஆளுக்கொரு டீ ஷர்ட், ஷூ, ஜீன்ஸ் உள்ளிட்ட பொருட்களாக வாங்கிக்கொள்ளலாம் என்று அறிவித்த மாத்திரத்தில், டேபிள், சேருக்கு முட்டுக் கொடுத்து வைத்திருந்த பத்து ரூபாய் காயினையெல்லாம் கடத்திக் கொண்டு வந்து கடை வாசல் முன்னே கூடி விட்டார்கள். நாள் ஒன்றுக்கு 60 நபர் வீதம் ஜனவரி, 1 – 5 வரையிலான ஐந்து நாட்களுக்கான குறுகிய கால ஆஃபர் என்பதால் கூட்டம் அலைமோதியது.

எப்படி, பாஸ் இப்படியெல்லாம் என்ற கேள்வியோடு கடை உரிமையாளர் சத்யா பாலாஜி முன்பாக மைக்கை நீட்டினோம். “தமிழகத்தில் பரவலான இடங்களில்  பத்து ரூபாய் காயின் புழக்கத்தில் உள்ள நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் 10 ,ரூபாய் நாணயம்  மாற்ற தக்கதல்ல   என்கிற  தவறான கருத்து வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் நிலவிய வருகிறது. இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வேண்டும் என்ற வகையில் இந்த ஆண்டு 2024  புத்தாண்டை முன்னிட்டு, சமூக வலைதளங்களில் விளம்பரம் வெளியிட்டு இருந்தோம். இதனை அறிந்த   பொதுமக்கள் எங்கள் எக்ஸ்போர்ட் ஷாப்பீ துணி கடை முன்பு குவிந்துவிட்டார்கள்” என்கிறார் மகிழ்ச்சி பொங்க.

மக்கள் கூட்டம் (2)
மக்கள் கூட்டம் (2)

ரிசர்வ் வங்கி இதுவரை வெளியிட்டுள்ள 14 வகையிலான 10 ரூபாய் நாணயங்கள் அனைத்துமே செல்லுபடி ஆகும். அவற்றை செல்லாது என கூறுவதோ; பணப்பரிமாற்றத்தின் போது கொடுக்கவோ வாங்கவோ மறுப்பது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும். இதன்படி மூன்று வருட சிறை தண்டனையும் அபராதமும் விதிக்க வழிவகை செய்கிறது சட்டம்.

”சட்டமெல்லாம் கிடக்கட்டும். முதலில் இந்த பஸ் கண்டக்டர்களுக்கெல்லாம் பயணிகளோடு மல்லுக்கு நிக்காம பத்து ரூபாய் காயின வாங்கனும்னு ஸ்டிரிக்ட்டா கவர்மெண்டு கண்டிசன் போடனும். இ.பி. ஆபிஸ், போஸ்ட் ஆபிஸ்னு கவர்மெண்டு சம்பந்தமான அலுவலகங்கள்ல வேலை செய்யிற ஊழியர்களுக்கு அறிவுரை சொல்லனும். அங்கெல்லாம் வாங்குனாதான், மளிகை கடைகாரன் மத்த கடைகாரங்க வாங்குவாங்க. இப்ப இருக்க நிலைக்கு பாணிபூரி கடைக்காரன் கூட வாங்குவேனாங்கிறான்.” என ரொம்பவே சலித்துக்கொள்கிறார் நபர் ஒருவர்.

மணிகண்டன்.

Furry genius pet hospital

Leave A Reply

Your email address will not be published.