அதிமுக எங்களுடன் கூட்டணி வைத்துக்கொள்ளலாம் – நாம் தமிழர் அதிரடி அறிவிப்பு !

0
dear movie banner

அதிமுக எங்களுடன் கூட்டணி வைத்துக்கொள்ளலாம் – நாம் தமிழர் அதிரடி அறிவிப்பு

பாஜக கூட்டணியிலிருந்து அதிமுக விலகிவிட்டது என்ற அறிவிப்பைத் தொடர்ந்து, பாஜகவின் கூட்டணியிலிருந்த புதிய தமிழகம், புதிய நீதிக் கட்சி, தமாக போன்ற கட்சிகள் அதிமுகவோடு கூட்டணி இல்லை என்று உறுதியாகத் தெரிவித்துவிட்டன. அதிமுகவோடு புரட்சிபாரதம் என்ற ஒரு கட்சி மட்டுமே கூட்டணியில் உள்ளோம் என்று அறிவித்துள்ளது.

Happy homes

‘அதிமுக நாடாளுமன்றத் தேர்தலில் மொககூட்டணி அமைக்கும்’ என்று முன்னாள் அமைச்சர் கூறிவருகிறார். ஆனால் அதிமுக கூட்டணிக்குக் கட்சிகள் வருவதாக எந்த அறிகுறியும் தெரியவில்லை. திமுக கூட்டணியை உடைத்து அதிமுக கூட்டணி அமைக்கும் என்ற எதிர்பார்ப்பும் பொய்த்துபோய்விட்டது. திமுக கூட்டணியில் உள்ள மதிமுக, விசிக, இடதுசாரிகள், முஸ்லீம் லீக் போன்ற கட்சிகள் அதிமுகவோடு கூட்டணி இல்லை என்று தெளிவாகத் தெரிவித்துவிட்டன. பாமகவும் அதிமுகவோடு கூட்டணி இல்லை என்றும் பாஜகவோடு கூட்டணி தொடர்கிறது என்று அறிவித்துவிட்டது.

- Advertisement -

- Advertisement -

இந்நிலையில் அதிமுகவின் மிகுந்த எதிர்பார்ப்பாக நாம் தமிழர் கட்சி மட்டுமே உள்ளது. இந்தக் கட்சிக்குக் கடந்த சட்டமன்றத் தேர்தலில் சுமார் 7% வாக்கு வங்கி உள்ளது. வரும் தேர்தல்களில் இந்த வாக்கு சதவீதம் உயரவே வாய்ப்பு உள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதன் அடிப்படையில் அதிமுக கூட்டணிக்காக நாம் தமிழர் கட்சியை அணுகியுள்ளது.

இதைக் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர் சந்திப்பில் வெளிப்படையாகவே கூறியுள்ளார். மேலும்,“தேசிய அளவில் காங்கிரஸ்-பாஜகவை நாங்கள் சமமாகத்தான் பார்க்கிறோம். அதுபோலவே மாநில அளவில் திமுக-அதிமுகவையும் நாங்கள் அப்படித்தான் சமமாகத்தான் பார்க்கிறோம். திராவிடக் கட்சிகளை ஒழிப்பது என்ற இலட்சியத்திலிருந்து நாங்கள் ஒருபோதும் பின்வாங்க மாட்டோம். அதிமுகவோடு கூட்டணி இல்லை” என்று கூறியுள்ளார்.

நாம் தமிழர் கட்சியைக் கூட்டணியில் இணைக்க அதிமுக தரப்பில் 5 மக்களவைத் தொகுதிகளையும் தேர்தல் செலவுகளையும் பார்த்துக் கொள்கிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிமுக நாம் தமிழர் கட்சிக்குக் கொடுக்க முன்வந்துள்ள தொகுதிகள்

1. கன்னியாகுமரி 2.இராமநாதபுரம் (மோடி போட்டியிட்டால் சீமான் போட்டி) 3.வடசென்னை 4.மத்திய சென்னை 5.கடலூர் என்பதாகும். அதிமுக தரப்பில் பத்திரிக்கையாளர் கலை என்பவர் நாம் தமிழர் கட்சியிடம் கூட்டணிக்கான முதல்கட்டப் பேச்சுவார்த்தையைத் தொடங்கியுள்ளார்.

3 kavi national

தொடர்ந்து, தோல்வியைச் சந்தித்து வரும் நாம் தமிழர் கட்சித் தொண்டர்கள் கூட்டணி இருந்தால் நல்லது என்ற மனநிலைக்கு வந்துள்ளதாகவும் தெரிகின்றது. தனித்துப்போட்டியிட்டு வாக்கு வங்கியை 20% என்ற அளவில் உயர்த்திக் கொண்டு கூட்டணி அமைத்தால் மிகஎளிதாக வெற்றிப் பெறலாம் என்பது சீமானின் எண்ணம். 5 சீட்டு, தேர்தல் செலவு என்பதையும் விட்டுவிடக்கூடாது என்றும் சீமான் எண்ணுகிறார்.

7 bismi bise almathina
எடப்பாடி பழனிச்சாமி - சீமான்
எடப்பாடி பழனிச்சாமி – சீமான்

நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை பொறுப்பாளர் இடும்பாவனம் கார்த்திக் அதிமுகவோடு கூட்டணி குறித்துக் கருத்து தெரிவிக்கும்போது,“நாம் தமிழர் கட்சி எப்போதும் எல்லா தேர்தல்களிலும் தனித்துத்தான் போட்டியிடும் என்பது கட்சியின் சட்டத்திட்ட விதிகளில் தெளிவாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாங்கள் கூட்டணி வைத்துக்கொள்ளக்கூடிய அளவிற்குத் தேசிய அளவிலும் மாநில அளவிலும் எந்தக் கட்சிக்கும் தகுதியில்லை என்பதில் தெளிவாக இருக்கிறோம். அதிமுகவோடு நாங்கள் ஒருபோதும் கூட்டணி வைத்துக்கொள்ள மாட்டோம். வேண்டுமானால், எங்கள் தலைமையில் ஒரு கூட்டணி கட்சியாக அதிமுக சேர்ந்துகொள்ளலாம்” என்று அதிரடியாகத் தெரிவித்தார். இதற்கு அதிமுக தரப்பிலிருந்து இதுவரை எந்தப் பதிலும் தெரிவிக்கப்படவில்லை. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்கூட மௌனம் காக்கிறார் என்பது ஆச்சரியமாகவே உள்ளது.

யானை சேற்றில் சிக்கினால் நரிக்குக் கொண்டாட்டம் என்பதுபோல், 66 சட்டமன்ற உறுப்பினர்கள், சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் என்ற தகுதியோடு, கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பதுபோல் உள்ள அதிமுகவை ஒரு சட்டமன்ற உறுப்பினர்கள்கூட இல்லாத நாம் தமிழர் கட்சி சீண்டிப் பார்க்கிறது என்றால் இதுதான் தேர்தல் அரசியலோ……?

– ஆதவன்

3 kavi national
Leave A Reply

Your email address will not be published.