திருவிடைமருதூர் தேர்தல் அரசியல் உள்குத்து !

0

திருவிடைமருதூர் தேர்தல் அரசியல் உள்குத்து!

நகர் புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற இன்னும் குறுகிய நாட்கள் மட்டுமே இருப்பதால், தேர்தல் நிலவரம் என்பது ஆங்காங்கே சூடுபிடித்து வருகிறது. இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் ஒன்றியம் ஆடுதுறை பேரூராட்சிக்கு உட்பட்ட மருத்துவக்குடியில் தேர்தலுக்கு ஆளுங்கட்சியிலிருந்தோ, எதிர் கட்சியிலிருந்தோ வேட்பாளர்கள் களம் காணாமல் இருப்பது, கட்சி தலைமை வரை பெரும் அதிருப்தியை உண்டாக்கியுள்ளது.

https://businesstrichy.com/the-royal-mahal/

இதுதொடர்பாக கட்சியின் மூத்த நிர்வாகிகளிடம் பேசினோம்,
மருத்துவக்குடி என்பது வன்னியர்கள் மற்றும் பிள்ளைமார்கள் சமூகத்தினர் அதிகம் இருக்க கூடிய ஒரு பஞ்சாயத்து, இதில் 12 வது  வார்டு தேர்தல் நிலவரம் தான் படும் பாதாளத்திற்கு சென்றுள்ளது.

காரணம், ஆளுங்கட்சியிலிருந்தோ, எதிர் கட்சியிலிருந்தோ யாரும் நிற்பதற்கு முன் வராததுதான்.

பல் கட்டும் சிகிச்சையில் நவீனம் காட்டும் KM DENTAL CLINIC

12 வது வார்டில் தற்போது பாமக சார்பாக ம.க.ஸ்டாலின் களம் காண்கிறார். இவர் மாநில வன்னியர் சங்க துணைத்தலைவராக இருந்து வருகிறார். லோக்கல் ஏரியாவில் கொஞ்சம் மக்களிடையே அறிமுகமான நபர் என்பதால் தேர்தலில் வெற்றி வாய்ப்பை சூட வாய்ப்பு இருப்பதாக பேச்சு அடிப்பட்டு வருகிறது.

 

 

மேலும் அதே 12வது வார்டில் இவரை எதிர்த்து கவுன்சிலருக்கு திமுகவை சேர்ந்த ராமகிருஷ்ணன், அதிமுகவிலிருந்து போட்டியிட்ட சின்னயன், மற்றும் பிஜேபியிலிருந்து போட்டியிட்ட சூர்யா ஆகியோர் தேர்தலில் இருந்து வாபஸ் பெற்றதால் ம.க.ஸ்டாலினுக்கு கூடுதல் பலமாக மாறியிருந்தது.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

ஆனால் தற்போது திமுக வில் இருந்து இந்திரசேனன் எனும் 26 வயதுடைய நபர் 12வது வார்டில் ம.க.ஸ்டாலினுக்கு எதிராக போட்டியிடுகிறார். டிப்ளோமா பட்டதாரியான இவர் மருத்துவக்குடி 12வது வார்டுக்கு உட்பட்ட மெயின்ரோடு, பிடாரன் தெரு, பட்டாரத் தெரு, சூரியன் தெரு, சன்னதி தெரு, காத்தையன் தெரு ஆகிய பகுதிக்கு நல்ல அறிமுகமான நபர். இதனால் ம.க.ஸ்டாலின் பகுதி இளைஞர்களிடையே நல்ல அண்டர்ஸ்டாண்டில் இருந்தாலும், எதிர்த்து நிற்பது இளைஞர் என்பதால் லோக்கல் இளைஞர்கள் கூட்டம் இந்திரசேனன் தரப்புக்கு சற்று தலை சாய்த்துவிட்டதாக பேச்சு அடிப்பட்டு வருகிறது.

 

சரி, ஆளுங்கட்சியிலிருந்து தான் வேட்பாளர் நிறுத்தியாச்சே அப்புறம் ஏன் கட்சித் தலைமை கோவப்படபோகுதுனு கேட்டோம்,

தேர்தலுக்காக அமைக்கப்பட்ட செயல் கட்சியின் உளவு ‘ஏ’ டீம் தலைமையின் காதுக்கு ஒரு விக்ஷயத்தை ஊதியுள்ளது. மருத்துவக்குடியில் தேர்தல் தொடர்பாக கட்சியின் மூத்த நிர்வாகிகள் இதுவரை எந்தவித செயல்பாட்டையும் தொடங்கவில்லை,

காரணம் பெரும்பான்மையான சமூகத்தினர் வன்னியர்கள் என்பதாலும், பாமக சார்பாக போட்டியிடும் ம.க.ஸ்டாலின் வன்னியர் சங்க துணைத் தலைவராக இருப்பதால் தேர்தல் முடிவு அவருக்கு சாதகமாக இருக்கும் என்பதால், யாரும் தேர்தல் பரப்புரைக்கு தயாராகவில்லை.

 

மேலும் ஆளுங்கட்சியோ, எதிர்கட்சியோ எந்த ஒரு தேர்தலிலும் மருத்துவக்குடியில் வெற்றி வாய்ப்பை சூடவேண்டும் என்றால் ம.க.ஸ்டாலின் ஆதரவு இருந்தால் மட்டுமே சாத்தியம் அதனால் இருகட்சிகளின் மூத்த நிர்வாகிகள் தேர்தல் களப்பணியாற்றாமல் இருப்பதாக, அந்த ஏ டீம் திமுகவை சேர்ந்த இரண்டு சீனியர் பொருப்பாளர்களுக்கு தெரியாமல் மகேக்ஷ் பொய்யாமொழிக்கும் கட்சியின் தலைமைக்கு ரகசியத்தை ஊதியுள்ளது. இதனால் கட்சித் தலைமை அடுத்தக்கட்ட நகர்வுக்கு அத்தகவலை அனுப்பிச் சம்மந்தப்பட்ட பொறுப்பாளர்கள் குறித்து விசாரிக்க ஆரம்பித்துவிட்டதாக கூறுகின்றனர்.

மருதுவக்குடியில் சூரியன் உதிக்குமா? அல்லது மாம்பழம் பழுக்குமா? என்கிற நிலை ஏற்பட்டுள்ளது.

 

– இந்திரஜித்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.