பயணியர் விடுதியில் இருந்த 7 தேக்கு மர கட்டில் காணபோன விவகாரம் !

0

பயணியர் விடுதியில் இருந்த 7 தேக்கு மர கட்டில் காணபோன விவகாரம்.

குச்சனூர் பேரூராட்சி செயல் அலுவலர் மற்றும் கிளார்க் ஆகிய இருவர் சேர்ந்து முறைகேடு செய்தது சிறப்பு தணிக்கையில் கண்டுபிடிப்பு.

தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா குச்சனூர்பேரூராட்சி செயல் அலுவலர் சசிகலா மற்றும் கிளர்க் ஆரோக்கியசாமி ஆகிய இருவர் மீது, குச்சனூர் பேரூராட்சி பயணியர் தங்கும் விடுதியில், 7 தேக்கு மர கட்டில் காணபோன விவகாரத்தில், சிறப்பு தணிக்கை மூலம் கட்டில்களை வீட்டிற்கு எடுத்து சென்றது கண்டு பிடிக்கப்பட்டது. இவர்கள் மீது கடந்த ஓர் ஆண்டு காலமாக உரிய ஆவணங்கள் இருந்தும் நடவடிக்கை எடுக்காத காரணத்தால் மாவட்ட ஆட்சித்தலைவரிடம் புகார் அளிக்கப்பட்டது.

குச்சனூர் பேரூராட்சி பயணியர் தங்கும் விடுதியில் தேக்கு மர 7 கட்டில்கள் உள்ளிட்ட இதர பொருட்கள், தொண்டு நிறுவனம் வழங்கியது.அப்படி வழங்கப்பட்ட தேக்கு மர 7 கட்டில்கள் காணவில்லை என்று சமூக ஆர்வலர் ராஜ்கபூர் புகார் தெரிவித்தார். இதனை தொடர்ந்து சிறப்பு தணிக்கை மூலம் கண்டுபிடிக்கப்பட்டது.

சமூக ஆர்வலர் ராஜ்கபூர்
சமூக ஆர்வலர் ராஜ்கபூர்

மேலும் பேரூராட்சி சார்பில் கட்டில் காணவில்லை என சின்னமனூர் காவல் நிலையில் புகார் தெரிவிக்கப்பட்டது.பேரூராட்சி நிர்வாகம் பயணியர் விடுதி மராமத்து பணி நடப்பதால் அருகில் உள்ள பள்ளி 7 கட்டில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.பள்ளி தலைமை ஆசிரியர் அளித்த கடிதத்தில் பள்ளி வளாகத்தில் கட்டில்கள் இங்கு வைகப்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.மேலும் செலவினம் வழங்கியதில் குறுக்குக் கோடிடம் படாமல் காசோலை வழங்கியதில் முறைகேடு

திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தில் கிரீன் சர்வீஸ் டிரஸ்ட் சம்பளம் வழங்கியதில் 1,14,228 முறை கேடு.சுகாதார பொருட்கள் கொள்முதல் செய்ததில் முறைகேடுகள் தணிக்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே பல்வேறு முறைகேடுகள் செய்து வரும் செயல் அலுவலர் சசிகலா, கிளார்க் ஆரோக்கியசாமி ஆகிய இருவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேனி மாவட்ட ஆட்சி தலைவர் முரளி தரனிடம், சமூக ஆர்வலர் ராஜ்கபூர் புகார் தெரிவித்தார்.

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடிவர..

Leave A Reply

Your email address will not be published.