ரயில் விபத்தை தவிர்த்த ஊழியருக்கு பாராட்டி ரொக்கப் பரிசும் சான்றிதழும் !

0

ரயில் விபத்தை தவிர்த்த ஊழியருக்கு பாராட்டு

ரயில் பாதைகள் சரியாக இருக்கிறதா என சோதனை செய்ய ரயில் பாதை பராமரிப்பு பணியாளர் தினந்தோறும் தனக்கு ஒதுக்கப்பட்ட பகுதியில் நடந்து சென்று ஆய்வு செய்வார். இதுபோல் பணியில் இருந்த சிவகாசி பகுதி ரயில் பாதை பராமரிப்பு பணியாளர் கருப்பசாமி நவம்பர் 20 அன்று காலை 06.45 மணிக்கு ரயில் பாதைகளை இணைத்து இருந்த பற்றவைப்பு விடுபட்டு தண்டவாளங்களில் இடைவெளி இருப்பதை கண்டுபிடித்தார்.

அந்த நேரத்தில் அன்று சிவகாசியில் இருந்து 06.00 மணிக்கு புறப்பட வேண்டிய சிலம்பு விரைவு ரயில் காலை 06.37 மணிக்கு தாமதமாக புறப்பட்டு ஸ்ரீ வில்லிபுத்தூர் நோக்கி வந்து கொண்டிருந்தது. உடனே ரயில் வரும் திசை நோக்கி ஓடி சிவப்பு கொடியை காண்பித்து ரயிலை நிறுத்தி விபத்தை தவிர்த்தார். இவரது ஒப்பற்ற பணியை பாராட்டி கோட்ட ரயில்வே மேலாளர் பத்மநாபன் அனந்த் ரூபாய் 3000 ரொக்கப் பரிசும் சான்றிதழும் வழங்கி பாராட்டினார். முதுநிலை கோட்ட பொறியாளர்கள் நாராயணன், பிரவீனா, கோட்ட பாதுகாப்பு அதிகாரி முகைதீன் பிச்சை ஆகியோரும் கருப்பசாமியின் நற்செயலை பாராட்டினர்.

– சாகுல் 

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடிவர..

Leave A Reply

Your email address will not be published.