அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

தொகுதி மறுசீரமைப்பு கூட்டம் ! நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டது யார்? அம்பலப்பட்ட தவெக !

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

கடந்த மார்ச் மாதம் தொகுதி சீரமைப்பு சட்டமுன்வடிவு நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட உள்ளது என்ற அறிவிப்பை அறிந்தவுடன், தேர்தல் பிரச்சாரம் தொடர்பாகச் சேலத்தில் இருந்த அப்போதைய முதல்வர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சட்டமுன்வடிவின் நகலைத் தீயிட்டுக் கொளுத்தினார். “தொகுதி சீரமைப்பு என்பது மக்கள் தொகை அடிப்படையில் இருக்கக்கூடாது. ஏற்கனவே நடைமுறையில் உள்ள 7.1 அல்லது 7.2 விழுக்காட்டின்படி எல்லா மாநிலங்களுக்கும் சீரமைப்பு நடைமுறைப்படுத்த வேண்டும்” என்று செய்தியாளர்களிடம் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்தார்.

இது குறித்து அதிமுக எந்தக் கருத்தும் சொல்லாமல் மௌனம் காத்தது. திமுக கூட்டணி கட்சிகள் திமுகவின் முடிவுக்கு ஆதரவு தெரிவித்தன. தவெக சார்பில் அந்தக் கட்சியின் தலைவர் விஜய் வெளியிட்ட அறிக்கையொன்றில்,“நாடாளுமன்ற /சட்டமன்ற உறுப்பினர்களின் பற்றாக்குறை என்பது ஒரு மக்கள் பிரச்சனையே இல்லை. அதைவிட மி முக்கியமான ஜனநாயகம் சார்ந்த பல பிரச்சனைகள் நாட்டில் இருப்பதை …. விவரித்திருக்கிறேன். அவற்றைக் களைவதுதான் நம் முதன்மைப் பணியாக இருக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார். மறுசீரமைப்பு தொடர்பாகத் தற்போதைய அமைச்சர் நிர்மல்குமார் குறிப்பிடும்போது,“திமுக-பாஜக இணைந்து நடத்தும் நாடகம்” என்று எள்ளி நகையாடினார்.

இந்த வார August 12 அங்குசம் இதழில்…

மு.க.ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின்

மறுசீரமைப்பு மசோதா, 2026 (The Delimitation Bill, 2026) மற்றும் அரசியலமைப்பு (131-வது திருத்த) மசோதா ஆகியவை 2026 ஏப்ரல் 16 அன்று மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டன.  இம்மசோதாக்கள் மீதான விவாதம் முடிவடைந்து, 2026 ஏப்ரல் 17 அன்று மக்களவையில் வாக்கெடுப்பு நடைபெற்றது. வாக்கெடுப்பில் 3இல் 2 பங்கு வாக்குகளை அரசு பெறவில்லை என்பதால் சட்டமுன்வடிவு தோல்வி அடைந்தது.

திருச்சி உறையூரில் புதிய உதயம்...

வாக்கெடுப்பில் பேசிய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் பேசும்போது,“ எல்லா மாநிலங்களுக்கும் தொகுதி உயர்வு என்பது ஒரே சீராக இருக்கவேண்டும். எல்லா மாநிலங்களும் ஒத்துக்கொள்ளும் வகையில் தொகுதி சீரமைப்பு இருக்கவேண்டும். மக்கள் தொகை அடிப்படையில் மறுசீரமைப்பு இருப்பது நாட்டின் வளர்ச்சிக்கு உதவாது” என்று தெளிவாகக் கூறினார். உடனே உள்துறை அமைச்சர் அமித்ஷா எல்லா மாநிலங்களுக்கும் 50% தொகுதி உயர்வு தருகிறோம். அனைத்துக் கட்சிகளும் வாக்களிக்கவேண்டும்” என்று வேண்டுகோள் வைத்தபோது திமுக உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும்,“மசோதாவில் எழுத்து வடிவில் நீங்கள் சொன்ன கருத்து இருக்கவேண்டும். வாய்மொழியாகச் சொல்லும் எதையும் ஏற்கமாட்டோம்” என்று ஒருமித்துக் குரல் எழுப்பினர்.

 கே.சி.வேணுகோபால்
கே.சி.வேணுகோபால்

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

தற்போது நடைபெற்றுவரும் நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் ஆகஸ்ட் 13ஆம் நாள் முடிவடைகின்றது. இந்தக் கூட்டத் தொடரில் ஒன்றிய அரசு தோல்வி அடைந்த தொகுதி மறுசீரமைப்பு சட்டமுன்வடிவை மீண்டும் தாக்கல் செய்யும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இதற்கான முறையான அறிவிப்பு இதுவரை வெளியிடப்படவில்லை. இந்நிலையில் தமிழ்நாட்டில் கடந்த 8ஆம் நாள் முதல் அமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் தமிழ்நாடு நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக , அதிமுக, தேமுதிக, பாமக போன்ற கட்சிகள் கலந்துகொள்ளவில்லை. தவெக கூட்டணியில் உள்ள காங்கிரஸ், விசிக, சிபிஐ, சிபிஎம், ஐயூஎம்எல் போன்ற கட்சிகள் கலந்துகொண்டன. தவெகவிற்கு மக்களவையிலும் மாநிலங்களவையில் ஒரு உறுப்பினர்கூட இல்லை.

முதல்வர் விஜய் தலைமையில் நடைபெற்ற தொகுதி சீரமைப்பு கூட்டத்தின், “மறுசீரமைப்பு என்ற பெயரில் தொகுதிகளின் எண்ணிக்கை உயர்த்த வேண்டாம். நாடாளுமன்றத்தில் இப்போதுள்ள 543 உறுப்பினர்கள் என்ற தற்போதைய நிலை தொடரவேண்டும்” என்று முடிவெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. திமுக மற்றும் அதிமுக கட்சிகள் கலந்துகொள்ளாமல் இருந்ததற்குக் காங்கிரஸ் கட்சியின் ப.சிதம்பரம் வருத்தம் தெரிவித்தார். விசிக தலைவர் பேசும்போது, “கூட்டத்தைப் புறக்கணித்த திமுக மற்றும் அதிமுக தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான நிலைப்பாட்டைத்தான் எடுப்பார்கள்” என்று நம்பிக்கை தெரிவித்தார். தவெக சார்பில் கருத்து தெரிவித்த அமைச்சர் நிர்மல்குமார், “திமுக,அதிமுக கட்சிகள் கூட்டத்தைப் புறக்கணித்ததன் மூலம் பாஜகவுக்கு அவர்கள் ஆதரவு நிலை எடுப்பார்கள்” என்று கூறினார்.

vijay
vijay

தொகுதி சீரமைப்பு கூட்டத்தின் முடிவு குறித்துக் கருத்து தெரிவித்த மக்களவை திமுக தலைவர் கனிமொழி, “தொகுதி மறுசீரமைப்பு மசோதா மீது எங்களின் கருத்தை நாங்கள் மார்ச்சு மாதம் தெரிவித்து, ஏப்ரல் மாதம் நடைபெற்ற வாக்கெடுப்பில் தோல்வி அடையச் செய்துவிட்டோம். எங்களின் நிலைப்பாட்டில் தற்போது எந்த மாற்றமும் கிடையாது. தொகுதி சீரமைப்பின் வழியாகத் தொகுதிகளின் எண்ணிக்கை உயர்த்தப்படும்போது எல்லா மாநிலங்களுக்கும் சமமான உயர்வு வழங்கப்படவேண்டும் என்பதுதான் எங்களின் வேண்டுகோள். திமுகவின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை” என்று கூறினார்.

இது குறித்து அரசியல் ஆய்வாளர் ஜீவசகாப்தன் கருத்து தெரிவிக்கும்போது, “திமுக பாஜக ஆதரவு நிலை எடுக்கும் என்பதற்கு எந்த அடிப்படையும் இல்லை. திமுக தன் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளவில்லை. தொகுதி சீரமைப்பைப் பற்றி எங்களுக்குக் கவலையில்லை என்ற விஜய் ஜோசப் தன் நிலையை மாற்றிக்கொண்டு 543 தொகுதியை நீடிக்கவேண்டும் என்று கூறியுள்ளார். எல்லாரும் ஒத்துக்கொள்ளக்கூடிய தொகுதி மறுசீரமைப்பு ஏற்றுக்கொள்கிறோம் என்று நாடாளுமன்றத்தில் அறிவித்த காங்கிரஸ் கட்சிதான் தன்னுடைய நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டுள்ளது. காவிரி பிரச்சனையைவிடத் தொகுதி மறுசீரமைப்புதான் தமிழ்நாட்டுக்கு முக்கியப் பிரச்சனை என்று காங்கிரஸ் கருதியிருந்தால், இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகளைக் கூட்டித்தானே காங்கிரஸ் முடிவை அறிவித்திருக்க வேண்டும். தமிழ்நாட்டில் எடுக்கப்பட்ட தற்போதைய முடிவை உ.பி. இராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், மராட்டிய மாநிலக் காங்கிரஸ் கட்சிகள் ஏற்றுக்கொள்ளுமா? காங்கிரஸ் காவிரியில் தமிழ்நாடு கவனம் செலுத்தக்கூடாது என்பதற்காக நடத்தப்பட்ட நாடகம்தான் தொகுதி மறுசீரமைப்பு கூட்டம் என்ற நாடகம்” என்று விவரித்தார்.

தொகுதி சீரமைப்பு சட்டமுன்வடிவு குறித்தும் அதில் உள்ள சரத்துகள் குறித்தும் எந்தத் தகவலும் வெளியிடப்படாத சூழ்நிலையில், தமிழ்நாட்டில் முதல்வர் விஜய் தலைமையில் நடைபெற்ற தொகுதி மறுசீரமைப்பு கூட்டம் காங்கிரஸ் கட்சியின் வற்புறுத்துதலில் நடத்தப்பட்டதாகவே எண்ணத் தோன்றுகின்றது.

—              ஆதவன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.