வாசிப்பை உயிர்ப்போடு வைத்த நூலகர்களை கௌரவித்த அமைச்சர் !நூலகர் தின விழா !
பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் திருச்சிராப்பள்ளி மாவட்ட நூலக ஆணைக்குழு சார்பாக நூலகர் தின விழா கொண்டாடப்பட்டது.
கிளை நூலகம் முழுநேர கிளை நூலகம் 2024- 25 ஆம் ஆண்டில் அதிக உறுப்பினர்களை சேர்த்த நூலகர்களுக்கு அதேபோன்று 2024- 25 ஆம் ஆண்டு அதிக புரவலர்களை இணைத்த நூலகர்களுக்கு மற்றும் நன்கொடை வசூல் புதுப்பிக்கப்பட்ட சந்தா வசூல் செய்த நூலகர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் மண்டல குழு தலைவர் மு. மதிவாணன், வாசகர் வட்ட தலைவர் கல்வி உளவியலாளர் அல்லிராணி பாலாஜி, மாவட்ட வருவாய் அலுவலர் பாலாஜி இந்நிகழ்வில் வரவேற்புரை ஆற்றிய மாவட்ட நூலக அலுவலர் இரா. சரவணா குமார். நன்றியுரை தனலட்சுமி முதல் நிலை நூலகர் மாவட்ட மைய நூலகம் மற்றும் திருச்சி மாவட்டத்தைச் சார்ந்த முழு நேர நூலகர்கள் மற்றும் கிளை நூலகத்தின் நூலகர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.