துறையூர் அருகே மருத்துவக் கல்லூரி மாணவர் தற்கொலை!

0
dear movie banner

துறையூர் அருகே மருத்துவக் கல்லூரி மாணவர் தற்கொலை!

துறையூர் அருகேயுள்ள பெருமாள்மலை அடிவாரம் பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன் மகன் சண்முகம்(51). இவரது மகன் லிங்கேஸ்வரன்(20). இவர் பாண்டிச்சேரியில் உள்ள மகாத்மாகாந்தி மருத்துவக் கல்லூரியில் இரண்டாமாண்டு மருத்துவம் பயிலுகிறார். கல்லூரி விடுமுறை விட்டதால் 10 நாட்களுக்கு முன்பு வீட்டு வந்தார்.

Happy homes

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சாப்பிட்டு விட்டு மாடியிலிருந்த ரூமில் தூங்கச் சென்றார். நேற்று காலை 10.30 மணி வரை வராததால் அவரது தாயார் மாடிக்கு சென்று பார்த்த போது மின் விசிறியில் நைலான் கயிற்றில் சுருக்கு மாட்டி தூக்கில் தொங்கினார். உடனே லிங்கேஸ்வரனை கயிற்றிலிருந்து இறக்கி அருகிலிருந்த அரசு மருத்துவமனைக்கு பெற்றோர்கள் எடுத்துச் சென்றனர்.

- Advertisement -

- Advertisement -

அங்கு பணியிலியிருந்த அரசு மருத்துவர் லிங்கேஸ்வரனை பரிசோதித்து விட்டு அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறினார். இதையடுத்து சண்முகம் கொடுத்த புகாரின் பேரில் துறையூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து லிங்கேஸ்வரனின் சடலத்தை உடற்கூராய்வு செய்திட அனுப்பினர்.

மேலும் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர் . எம்பிபிஎஸ் இரண்டாமாண்டு படிக்கும் மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

-ஜோஸ்

3 kavi national
Leave A Reply

Your email address will not be published.