காரைக்குடியில் கூலிப்படை வைத்து அப்பாவை கொன்ற மகன் !

0

காரைக்குடியில் கூலிப்படை வைத்து அப்பாவை கொன்ற மகன் !

குடும்ப பிரச்சினை காரணமாக கல்லால் அடித்து ஒருவர் கொலை.மகனை கைது செய்து போலீசார் விசாரணை.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பெரிய கோட்டை ஆவத்தான் குடியிருப்பில் வசித்து வந்தவர் அடைக்கலம் (46). கூலி தொழிலாளி.
இவரது இரண்டாவது மனைவி சிவகாமி.

நேற்று 18.05.2023  இரவு வீட்டில் அடைக்கலம் தூங்கிக் கொண்டிருந்த போது நள்ளிரவு அடையாளம் தெரியாத நபர்கள் அடைக்கலத்தை கல்லால் தலையில் அடித்து கொலை செய்து விட்டு தப்பி ஓடிள்ளனர். அருகில் இருந்த இரண்டாவது மனைவி சிவகாமிக்கும் கத்தியால் குத்தியதில் காயம் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து, அக்கம் பக்கத்தினர் உதவியோடு சாக்கோட்டை காவல் நிலையத்தில் சிவகாமி புகார் அளித்தார்.மேலும், அவரது முதல் மனைவியின் மகன் முருகேசன் மீது சந்தேகம் இருப்பதாகவும் தெரிவித்திருந்த நிலையில்,போலீசார் முருகேசனை பிடித்து விசாரணை நடத்தினர்.

அதில், தந்தையை கூட்டாளிகளுடன் சேர்ந்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டதை அடுத்து முருகேசன் மற்றும் அவரது கூட்டாளியை கைது செய்து போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர். கொலை சம்பந்தமாத மேலும் இருவரை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

-பாலாஜி

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடிவர..

Leave A Reply

Your email address will not be published.