அலைகழிக்கப்பட்ட நரிக்குறவ இன மாணவனுக்கு ஒரே நாளில் பழங்குடியினருக்கான சாதி சான்றிதழ் வழங்கிய கலெக்டர் !

0

சிவகங்கையில் 12ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற நரிக்குறவ இன மாணவனுக்கு பழங்குடியினருக்கான சாதி சான்றிதழ் வழங்கி மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை.

சிவகங்கை மாவட்டத்தில் நரிக்குறவர் இனத்தவர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வசித்து வரும் நிலையில், சிவகங்கை பழமலை நகர் நரிக்குறவர் குடியிருப்பில் வசித்து வரும் ஜெயபாண்டி என்பவருடைய மகன் தங்கபாண்டி மாவட்டத்திலேயே முதன்முதலாக பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி அடைந்ததோடு மட்டுமல்லாமல், 438 மதிப்பெண்களையும் பெற்றிருந்தார்.

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகம்

இந்த மாணவனை மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி நேரில் அழைத்து பாராட்டி, வாழ்த்து தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இருந்த நரிக்குறவர் சாதியை,பழங்குடியினர் பிரிவுக்கு மாற்றி சமீபத்தில் மத்திய அரசு அரசாணை வெளியிட்டிருந்தது.

இதன் அடிப்படையில், தங்கபாண்டி அரசு கலைக் கல்லூரியில் சேர்வதற்காக சாதி சான்றிதழ் கேட்டு சிவகங்கை வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார். ஆனால் ஒரு வார காலம் ஆகியும் வட்டாட்சியர் அலுவலகத்தில் சாதி சான்றிதழ் கொடுக்கப்படவில்லை என்பதை அறிந்த மாவட்ட ஆட்சியர் உடனடியாக சாதி சான்றிதழ் கொடுக்க நடவடிக்கை எடுத்து இன்று 18.05.2023 நேரில் மாணவன் தங்கபாண்டி மற்றும் அவரது பெற்றோர்களை அழைத்து சான்றிதழை வழங்கினார்.
அதனை பெற்ற மாணவனின் பெற்றோர்கள் மாவட்ட ஆட்சியருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

– பாலாஜி

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடிவர..

Leave A Reply

Your email address will not be published.