காரைக்குடியில் பள்ளி மாணவ, மாணவியருக்கான மினி மாரத்தான்!
காரைக்குடியில் பள்ளி மாணவ, மாணவியருக்கான மினி மாரத்தான்!
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தனியார் கட்டட பொறியாளர்கள் சங்கத்தின் சார்பில் மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது. ஐந்தாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை படிக்கும் பள்ளி மாணவ மாணவியருக்கான மினி மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது.
மாணவ, மாணவிகளுக்கு மூன்று கிலோ மீட்டர் தூரம் தனி, தனியாக நடத்தப்பட்ட போட்டி, காரைக்குடி கம்பன் மணிமண்டபத்திலிருந்து புறப்பட்டு அழகப்பா பல்கலைக்கழகம் சென்றடைந்தது.
காரைக்குடி உதவி காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் கொடியசைத்து துவக்கி வைத்த போட்டியில் 250க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். பள்ளி மாணவர்கள் பிரிவில் முதலாவது பரிசு 5001 நன்மாறன் என்ற மாணவனும், மாணவிகள் பிரிவில் முதல் பரிசு 5001 ரூபாயை சிவபதி என்ற மாணவியும் பெற்றனர். போட்டியில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழும் வழங்கப்பட்டது.
-பாலாஜி