அங்குசம் பார்வையில் “அடியே”!

0

அங்குசம் பார்வையில் “அடியே”!

2 dhanalakshmi joseph
தயாரிப்பு: மாலி & மான் வி மூவி மேக்கர்ஸ் பிரபா பிரேம்குமார். டைரக்ஷகன் : விக்னேஷ் கார்த்திக். நடிகர் – நடிகைகள் : ஜி.வி. பிரகாஷ், கௌரி ஜி. கிஷன், வெங்கட் பிரபு, மதும்கேஷ் பிரேம், ஆர்.ஜே. விஜய், டெக்னீஷியன்ஸ் : ஒளிப்பதிவு: கோகுல் பினோய் இசை: ஆஸ்டின் பிரபாகர், எடிட்டிங்: முத்தையன்.பி. ஆர். ஓ:யுவராஜ்.
- Advertisement -

- Advertisement -

பெரிய பாடகியாக வரவேண்டும் என்பது கௌரிகிஷனின் கனவு -லட்சியம். பள்ளிப் பருவத்திலிருந்தே இதற்காக பயிற்சி எடுக்கிறார். அவரின் இந்த லட்சியத்தை ஊக்குவிப்பதற்காக  உங்கள் முதல் ரசிகன் என்ற பெயரில் ஒரு கடிதம் எழுதி கௌரிக்குத் தெரியாம அவர் ஸ்கூல் பேக்கில் வைக்கிறார் சக மாணவனான ஜூ.வி.பி. மனதுக்குள் கௌரியை காதலிக்கவும் ஆரம்பிக்கிறார்,  “உங்கள் ரசிகன்” யார் என்பதும் கௌரிக்கு தெரியாமலேயே பள்ளிப்பருவம் முடிந்து விடுகிறது. திடீரன பெற்றோர் அகால மரணமடைந்ததால் மனம் உடைந்து போன ஜி.வி.பி.க்கு ஆதரவுக்கரம் நீட்டுகிறார் மதும் கேஷ் பிரேம். ஆனால் ஜி.வி.பி. யோ கௌரியின் நினைவிலேயே மூழ்கிக் கிடக்கிறார், ஒரு நாள் தற்கொலைக்கு முயற்சிக்கும் போது பெரிய பாடகியாக வளர்ந்துவிட்ட கௌரியின் பேட்டியை டி.வி. யில் பார்க்கிறார்.
அடியே.
அடியே.
காதலில் விழாவிட்டாலும் முதல் க்ரஷ் “உங்கள் ரசிகள் கடிதம் தான்” ஆனா அந்தக் கடிதத்தை எழுதியவரை இதுவரை தான் பார்த்ததேயில்லை என்பதை ஃபீலிங்குடன் சொல்லி முடிக்கிறார் கெளரி அவரைத் தேடி ஓடுகிறார், பார்க்கிறார். ஆனால் அந்த லெட்டர் எழுதியது தான் தான் என்பதைச் சொல்லும் சங்கர்ப்பம் நழுவிக் கொண்டே போகிறது. இன்னைக்கு சொல்லியே ஆகணும் என்ற முடிவுடன் ஒரு நாள் பைக்கில் போகும் போது விபத்துக்குள்ளாகிறார் ஜி.வி.பி. அதன்பின் நடக்கும் அதகளமும் காமெடி சரவெடியும் தான் அடியே வை அடடா.. .. போட வைக்கிறது.
” பேரலல் யுனிவர்ஸ் & ஆல்டர்நேட் ரியாலிட்டி [ புதுசாத்தான் இருக்கு, நல்லாவும் இருக்கு] ஜார்னரில் பயணிக்கிறது கதை. ஈ.ஸியா புரியும் படியா சொல்லணும்னா, வெங்கட் பிரபு சி.இ.ஓ.வாக  இருக்கும் “ஸ்பேஸ் ரிசர்ச் சென்டரிலிருந்து“ ஒரு புதிய டிவைஸ் காணாமல் போகிறது ஜி.வி. பி. ஆக்சிடெண்டாகும் போது அந்த டிவைஸ் எதேச்சையாக இவரின் கைக்கு மாறுகிறது. அதன் பின்  ஜி.வி. பி.யின் டைம் டிராவல்’ தான் இந்த அடடா. அடியே ?
அடியே.
அடியே.
விஜய்யின் ‘ யோகன் படத்தின் 150- ஆவது நாள்,  ஜனாதிபதி கேப்டன் விஜயகாந்த்  வருகை, டைரக்டர் கௌதம் மேனனாக வெங்கட்பிரபு, கிரிக்கெட் கோச் டைரக்டர் மணிரத்னம் தெலுங்கு நடிகர் சச்சின் டெண்டுல்கர் என வெரைட்டி, வெரைட்டியான ஆல்டர் நேட் ரியாலிட்டி களை ஸ்கிரிப்ட்டில் கொண்டு வந்து, ஃபேன்டஸி காமெடியால் தியேட்டரை அதிர வைக்கிறார் டைரக்டர் விக்னேஷ் கார்த்திக். இண்டர்வெல் பிளாக்கையும் கச்சிதமாகக் தான் கனெக்ட் பண்ணிருக்கார் டைரக்டர். ஆனால் இண்டர் வெல்லுக்குப் பிறகு படம் ஆரம்பித்து இருபது நிமிசங்கள் ஏகப்பட்ட பழைய சீன்கள், ஏகப்பட்ட தடவை வந்து ஆடியன்சை கொஞ்சம் அயர வைக்கிறது. 10 மணிக்கு முன்னால 7 மணிக்கு எப்படி, 8மணிக்கு எப்படி? 2 மணிக்கு எப்படின்று ஜி, வி.பிரகாஷ் யோசிப்பதும் டல்லடிக்க வைக்குது.
4 bismi svs
அதே போல் டைம்டிராவல்களின் போது ஜி.வி.பி,க்கு காதலியாக மனைவியாக வரும் கௌரி கிஷனுக்கு, ஒருவருடன் காதல், இன்னொருவருடன் நிச்சயதார்த்தம் ஆவது போல ஜி.வி.பி . யை ஃபீல் பண்ணு வது, கௌரி கிஷன் கேரக்டரையே டேமேஜ் பண்ணுவது போல இருப்பதை நீங்க ஃபீல் பண்ணுனீகளா டைரக்டர்? அதே போல் நண்பனின் மனைவி கேரக்டரும். ஜி.வி.பியின் பெர்ஃ மென்ஸ் இடை வேளை  டபுள் ஒ.கே. அதுக்குப் பிறகு ஒரே மாடுலேஷன்லேயே இருக்கிறார். ” என்னை அடியேன்னு கூப்டு ” என ஜி.வி.பி.யிடம் சொல்லும் சீன் உட்பட பல சீன்களில் சபாஷ் வாங்குகிறார் கௌரிகிஷன்.

அடியே வின் துடியே… என்றால் அது வெங்கட்பிரபு தான். ரிசர்ச் சென்டர் சி.இ.ஒ. வாகவும், டைரக்டர் கெளதம் மேனாகவும் என மனுசன் பாடிலாங்குவேஜிலும் டயலாக் டெலிவரியிலும் பின்னிட் டாரு மனுசன். “டேய் திடீர்னு ஒண்ணு காணாமப் போறே, இல்லேன்னா கோமாவுல போயிடுறே நான் வாசிம் இல்லடா, வக்கார் யூனிஸ்’_ இது ஆர்.ஜே.விஜய்யின் அதகள காமெடி. “ நான் தொடும் கனவே” பாடலில் இதயத்துக்குள் இதமாக இறங்குகிறது ஜஸ்டின் பிரபாகரின் இசை. பிஜிஎம்மிலும் சூப்பர் ஸ்கோர் பண்ணிவிட்டார். ஒளிப்பதிவாளர் கோகுல் பினோயைவிட எடிட்டர் முத்தையனுக்கும் ஆர்ட் டைரக்ட்ருக்கும் தான் அதிக வேலை.

அடியே கன்ஃபார்மா நியூ ட்ரீட் தான், பட் லைட் கள்ஃபியூஸன் ஃ பிலிங்.

-மதுரை மாறன்

 

5 national kavi
Leave A Reply

Your email address will not be published.