அங்குசம் பார்வையில் “பாட்னர்“

0

இங்கே கிளிக் பண்ணுங்க.. - வேலை பெறுவது எளிது..

அங்குசம் பார்வையில் “பாட்னர்“

தயாரிப்பு : ‘ராயல் ஃ பார்ச்சுளா கிரியேஷன்ஸ் கோலி சூர்யபிரகாஷ்: டைரக்ஷஷன்: மனோஜ்தாமோதரன். நடிகர் நடிகைகள்: ஆதி, ஹன்சிகா, யோகிபாபு, பாலக் லால்வானி முனீஸ்காந்த், ரவிமரியா, ரோபோ சங்கர், தங்கதுரை, பாண்டியராஜன் டெக்னீஷியன்கள் : ஒளிப்பதிவு : ஷபீர் அகமது, இசை: சந்தோஷ் தயாநிதி, பி. ஆர், ஓ. யுவராஜ்.
விஞ்ஞானி பாண்டியராஜன் ஆணை பெண்ணாகவும் பெண்ணை ஆணாகவும் மாற்றும் டெக்னிக்கை கண்டுபிடித்து, அதை ஒரு “ஜிப்பு”க்குள் போட்டு, சேஃப்டி லாக்கரில் வைத்து விடுகிறார். பாண்டியராஜனிடம் வேலை பார்க்கும் தனது கையாள் மூலம் ஸ்மெல் பண்ணும் ஜான்விஜய், காஸ்ட்லியான அந்த டெக்னிக்கை அபேஸ் பள்ள அமெரிக்காவிலிருந்து வருகிறார். கந்துவட்டிக்காரனிடம் தனது தங்கச்சியை அடமானம் வைத்து விட்டு, யோகிபாபுவைத் தேடி சென்னைக்கு வருகிறார் ஆதி. டுபாக்கூர் ஐ.டி. கம்பெனியில் வேலை பார்க்கிறார் யோகிபாபு. இவரின் ஃபிராடு ஹெச், ஆர். முனீஸ்காந்த்,  காஸ்லியான டெக்னிக்கை அபேஸ் பண்ண முனீஸ்காந்தைத் தேடிவருகிறார் ஜான் விஜய், முனீஸ் காந்தை கழட்டிவிட்டுவிட்டு ஆதியும் யோகிபாபுவும் ஜான் விஜய்யிடம் டீல் பேசி களத்தில் இறங்குகிறார்கள். அந்த “ஜிப்” பை கேட்ச் பண்ணினார்களா? என்பதுதான் ‘பாட்னர் !
ஆதியும் யோகிபாபுவும் தான் பாட்னர் இரண்டு மணிநேரப் படத்தில் ஒன்றுரை மணி நேரம் சிவகாசி ஒரிஜினல் பட்டாசு மாதிரி காமெடிப் பட்டாசு கலகலப்பூட்டுது. லைட்வெயிட்டான கதைக்குள் பக்கா காமடியை ஸ்கிரிப்ட்டாக கொண்டு வந்து குதுாகலப்படுத்துகிறார் டைரக்டர் மனோஜ் தாமோதரன் இந்த மாதிரி ஸ்கிரிப்ட்டுக்கு கிரேசிமோகன் இருந்திருந்து வசனம் எழுதியிருந்தா “பாட்னர்” சும்மா அதிருதுல்ல ரேஞ்சுல இருந்திருக்கும். அந்தளவுக்கு காமெடி நடிகர்கள் பட்டாளமே இந்தப் படத்துல இருக்கு. யோகிபாபுவின் டைமிங் அடி, ரவிமரியா, ரோபோ சங்கர், தங்க துரையின் ஆன் திஸ்பாட் எதிரடி என எக்கச்சக்க சீன்கள் எக்ஸ்-பிரஸ் வேகம். அதிலும் யோகிபாபு, ஹன்சிகாவாக மாறிய பின் எகிறியடிக்குது படம் அட காமெடில தாங்க.

தற்போது விற்பனையில் அங்குசம் இதழ்...

4

சினிமாவுக்குள் எண்ட்ரியானப்ப எப்படி இருந்தாரோ, அப்படியேதான் இருக்கார் ஆதி. சினிமாவுல நல்லா கான்சன்ட்ரேட் பண்ணுங்க ஆதி. கொஞ்சமாவது நல்லா வரலாம். டோட்டல் காமெடியை நம்பி களம் இறங்கும் இந்த மாதிரியான படங்களுக்கு ஒளிப்பதிவாளரும் இசையமைப்பாளரும் ரொம்பவும் மெனக்கிட்டு வேலை பார்ப்பதில்லை. அதான் இந்தப் படத்திலும் நடந்திருக்கு.

“பாட்னர்” ஜாலிக்கு கேரண்டி

செம்ம சூப்பரான திரைப்படம்..

-மதுரைமாறன்

 

5
Leave A Reply

Your email address will not be published.