நிதி ஆதாரத்தை தடுக்கும் முயற்சி – செய்வதறியாது திகைக்கும் ரத்தத்தின் ரத்தங்கள்!

0

வரக்கூடிய நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக மாபெரும் வெற்றியை பெற வேண்டும் என்று திமுக தலைவர் மு க ஸ்டாலின் திட்டமிட்டிருக்கிறார். மேலும் 6 மாதகால ஆட்சியில் பல்வேறு திட்டங்களை கொண்டு வந்திருக்கிறேன், பல்வேறு புதுமைகளை நிகழ்த்தி இருக்கிறோம். இந்த நிலையில் மக்களின் ஆதரவு நமக்கு இருக்கிறது என்பதை மக்களுக்குக் காட்ட வேண்டிய நேரம். இந்த சூழலில் வரக்கூடிய நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் நாம் அனைத்து மாநகராட்சி மேயர் பதவியையும் கைப்பற்றி இருக்க வேண்டும் என்று ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் அறிவுரை வழங்கி களப்பணியை தீவிர படுத்தியிருக்கிறார் தமிழக முதல்வர்.

ஒருபுறம் திமுக வெற்றிக்கான அனைத்து நடவடிக்கைகளையும் தீவிரமாக எடுத்து வரக்கூடிய அதே நிலையில் திமுகவிற்கு சவாலாக இருக்கக்கூடிய பகுதி என்று திமுக அடையாளம் கண்டு இருப்பது கொங்கு பகுதிகளை.
இதனால் கொங்கு பகுதிகளுக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுக்க முதல் அமைச்சர் அறிவுரை வழங்கியிருக்கிறார். மேலும் கொங்கு பகுதியில் அதிமுகவின் வெற்றிக்கு ஒருபுறம் சமுதாய ரீதியான ஓட்டுக்கள் காரணமாக இருக்கிறது, மற்றொருபுறம் பணம் காரணமாக இருக்கிறது என்று திமுக தலைமைக்கு தகவல் சென்றிருக்கிறது.

இதையடுத்து கொங்குப் பகுதியின் அதிமுக வெற்றிக்கு முக்கிய காரணமாக இருப்பது எஸ் பி வேலுமணி, தங்கமணி என்று சொல்லப்படுவதால் அவர்களை டார்கெட் செய்துள்ளதாம் அரசுத் தரப்பு.

மேலும் இதன் காரணமாகவே தொடர்ந்து ரைட் அடித்து எஸ் பி வேலுமணி, தங்கமணி ஆகிய இருவருக்கான பணப்புழக்கத்தை கட்டுப்படுத்தி இருக்கிறது அரசு தரப்பு. மேலும் அதிமுகவின் பொருளாதாரமாக உள்ள கொங்கு தொழிலதிபர்களை அமைச்சர் செந்தில் பாலாஜி தனித்தனியே சந்தித்து உரையாட தொடங்கி விட்டாராம்.

இப்படி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை எதிர்பார்த்து திமுக தீவிரமாக களம் ஆற்றி வருகிறது. இப்படி அதிமுகவிற்கு ஆதரவாக உள்ள எல்லா வாய்ப்புகளையும் திமுக அடைத்து வருவதால் ரத்தத்தின் ரத்தங்கள் அடுத்து என்ன செய்வதென்று என்ன செய்வதென்று தெரியாமல் குழப்பத்தில் உள்ளார்களாம்.

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடிவர..

Leave A Reply

Your email address will not be published.