அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

உண்மையை சொல்லனும்னா இதெல்லாம் தண்ட கருமம் பிடிச்ச திட்டங்கள்…

திருச்சியில் அடகு நகையை விற்க

ஏதோ பதவிக்கு வரணும், ஒட்டு வாங்கன்னு ஆசையில அடிச்சி விட்டு பின்னால அதனாலயே தோக்குறதுக்கு காரணமா அமையிற திட்டங்கள்…

2021 ல திமுக மகளிர் உரிமை தொகை, இலவச பயணம் என சில அதிக செலவு பிடிக்கும் திட்டங்களை அறிவிக்காமல் இருந்தாலும் அன்று திமுக தான் வெற்றி பெற்றிருக்கும்.

இந்த வார MAY 6 அங்குசம் இதழில்…

இன்று விஜய் அறிவித்த 2500, இலவச பயணம், 6 சிலிண்டர், தாய்மாமன் சீர் அது இதுன்னு அறிவிச்சிருக்கும் கவர்ச்சிகரமான அறிவிப்பு இல்லை என்றாலும் விஜய் க்கு வாக்குகள் விழுந்திருக்கும்.

தேர்தல் அறிக்கைக்கு வாக்கு விழுவதெல்லாம் கிடையாது. வண்ணத்தொலைக்காட்சி வேண்டுமானாலும் மக்களிடம் ஆதிக்கத்தை செலுத்தியதாக சொல்லலாம்.

2026 யாவரும் கேளீர் ஏப்ரல் மாத இதழ்

இந்த கவர்ச்சி திட்டங்களால், அரசுக்கு அனாவசிய செலவு தான் மிச்சம். ஒவ்வொரு அரசாங்கம் முடியும்போதும் விட்டுப்போகும் கடன் அளவே அதற்கு சாட்சி.

2001 ல ஜெயலலிதா வெற்றி பெற்றதும் முதல் பேட்டியில சொன்னது ஒரு லட்சம் கோடி கடன் இருக்கு. தினமும் 11 கோடி/111 கோடி வட்டி கட்டணும்னு சொன்னாங்க.

இன்னைக்கு 25 வருஷம் கழிச்சி 10 லட்சம் கோடி கடன்னு சொல்றாங்க. வருவாய் ஈட்டி அதன் மூலம் நலத்திட்டங்கள் செய்யணும். கடன் வாங்கி வட்டி கட்டி நலத்திட்டங்கள் செய்தால்.. அந்த வீடும், நாடும் உருப்படாது.

இந்த கவர்ச்சி அறிவிப்பின் மூலம் கிடைக்கும் முழு பலனும் ஒரு குடும்பத்துக்கு கிடைப்பதாகவே எடுத்துக்கொண்டால்…. 5 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 5 லட்சங்கள்.

எல்லா குடும்பத்துக்கும் எல்லா பலன்களும் சேராது. தேவைப்படாது.

அப்படி கிடைப்பதாகவே நினைத்துக்கொண்டாலும் மொத்த செலவு பத்து லட்சம் கோடிகள்.

இவ்வளவு பணம் யாருக்கு போகுது, எதுக்கு போகுது, எதுக்கு போகணும்?

இந்த கவர்ச்சி அறிவிப்பு 3 கட்சிகளும் அறிவித்துள்ளன. கொஞ்சம் முன்ன பின்ன அளவு மாறும்.

டாஸ்மாக் மூலம் காட்டப்படும் 5 ஆண்டு வருவாய் 1.5 முதல் 2 லட்சம் கோடிகள் இருக்கும்.

ஆனால் உண்மை நிலவரம் அது அல்ல. அதற்கு இரு மடங்கு பணம் அரசியல்வாதிகளுக்கு, அதிகாரிகளுக்கு லஞ்சமாக, ஊழலாக, கருப்பு பணமாக போகிறது.

அதே டாஸ்மாக் கால் பாதிக்கப்பட்ட ஒரு குடும்பத்திற்கு நேரடியாக சாராய செலவு மட்டும் 3.5 லட்சங்கள் தாண்டும்.  5 ஆண்டுகளில்.

அதன் மூலம் ஏற்படும் மருத்துவ செலவுகள்… குடிப்பதனால் வேலைக்கு செல்லாமல் இருப்பதினால் ஏற்படும் வருமான இழப்பு என கணக்கிட்டால்.. ஒரு குடும்பத்திற்கு 5 லட்சத்திற்கு மேல் செலவு பிடிக்கும்.

கிட்டத்தட்ட பாதிக்கும் மேலான குடும்பங்கள் அந்த பாதிப்பில் உள்ளன.

இவை எல்லாம் பொருளாதார பிரச்சினைகள். இதன் மூலம் ஏற்படும் குடும்ப, சமூக பிரச்சினைகளை கணக்கிடவே முடியாது.

Sowdambikaa Group Of Schools & Colleges In & Around ...

காந்தி குடும்பத்தில் ஒருவர், கலைஞர் குடும்பத்தில் ஒருவர் என பெரிய குடும்பம் முதல் சின்ன குடும்பங்கள் வரை சாராய பாதிப்பு உள்ளது.

இன்னொரு பக்கம் இந்த கவர்ச்சி திட்டங்களுக்காக… வரிகளை உயர்த்துவது… அதன் மூலம் அந்த பணத்தை மீண்டும் மக்களிடமே பிடுங்குவது. என இதுவும் ஏமாற்று வேலைதான்.

இன்று நம் அனைவரின் வாகனத்திற்கும் சராசரியாக 10000 ரூபாய் ஆன்லைன் fine உள்ளது. அதுவும் வருவாய் ஈட்ட அரசாங்கம் எடுத்துள்ள கொடூர முடிவுகளில் ஒன்று.

எனவே, ஒரு நல்ல அரசாங்கம் செய்ய வேண்டியது… போதை இல்லாத நாடு. தரமான இலவச கல்வி, தரமான இலவச மருத்துவம்.

அதெல்லாம் ஏற்கனவே இருக்குன்னு சொல்லி சால்ஜாப்பு பேசலாம். ஆனா அது உண்மை இல்லை.

தரமான மருத்துவம் அரசு மருத்துவ்னைல இருக்குன்னா, ஏன் தலைவர்கள் அப்போலோ, காவேரி ன்னு ஓடுறாங்க?

குறைந்த பட்சம் எல்லா மாவட்டத்தையும் இலவச scan centre கள் தேவையான அளவு திறக்கலாம்.

தனியார் பள்ளிகளின் கல்வி கட்டணம் கட்டுப்படுத்தலாம். அரசுப்பள்ளிகளை பணம் உள்ளவர்களுக்கு, நிறுவனங்களுக்கு தத்துக்கொடுத்து சுத்தத்தை மேம்படுத்தலாம்.

குடியால் பாதிக்கப்படும் அடித்தட்டு குடும்பங்களுக்கு டாஸ்மாக் மூலம் செலவிடப்படும் பல லட்சங்கள் மிச்சம்.

கல்விக்கட்டணம், மருத்துவக்கட்டணத்திற்கு நடுத்தர மக்கள் செலவிடும் பல லட்சங்கள் அவர்களுக்கு மிச்சமாகலாம்.

கடந்த ஆட்சியில் மாதா மாதம் மின்சாரம் கணக்கிடப்படும் என கூறிய வாக்குறுதி செயல்படுத்தப்படவில்லை. ஆனால் அது ஒன்று மட்டும் தான் சரியான வாக்குறுதி. நேரடியாக மக்களை சென்றடையும். மக்களுக்கு அதிக பாதிப்பு ஏற்படாத வாக்குறுதி. ஆனால் அது கடைசிவரை செய்யப்படவில்லை.

இப்பொழுதும் விஜய் 200 யூனிட் இலவசம் என்பது எல்லாம் வீணான திட்டம்.

நான் உபயோகிக்கிற மின்சாரத்துக்கு நான் கட்டணம் கட்டுறேன். அதை மாதா மாதம் ஆக்கினால் போதும்.

அரசுக்கும் வருவாய் கிடைக்கும். மக்களுக்கும் குறைந்த செலவில் மின்சாரம் கிடைக்கும்.

இப்படியாக சொல்லிக்கிட்டே போகலாம்.

இங்க எதுவுமே சரியில்ல. யாருமே ஒழுங்கு இல்ல.. யாரும் யாருக்கும் பெருசா மாற்று இல்ல. அதான் நெசம்.

எங்க அண்ணன் சீமான் சொன்னாரேன்னு  கிளம்பி வந்துடாதீங்க உறவே.. NTK என்பது சீமான், துரைமுருகன் மற்றும் சிலர் சொகுசாக வாழ நடத்தப்படும் ஒரு அமைப்பு அவ்ளோ தான்.

—   தோழர் ஜே.கே

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.