காற்றில் கரைந்த ஆனந்த ராகம் – பாடகி உமா ரமணன் !

0

காற்றில் கரைந்த ஆனந்த ராகம் ! பிரபல பாடகி உமா ரமணன் காலமானார். அவருக்கு வயது 69. கடந்த சில மாதங்களாக உமா ரமணன் உடலநலம் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று 02.05.2024 இரவு காலமானார். இவரது கணவர் ரமணனும் பிண்ணனி பாடகர் தான். சன் டிவியில் ஒளிபரப்பான சப்த ஸ்வரங்கள் நிகழ்ச்சியின் தொகுப்பாளராக இருந்துள்ளார். அதோடு ‘பாய்ஸ்’ உள்ளிட்ட சில திரைப்படங்களிலும் அவர் நடித்துள்ளார். உமா ரமணனின் திடீர் மறைவிற்கு திரை உலகத்தினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

உமா ரமணன், 1980-ஆம் ஆண்டு வெளியான ‘பன்னீர் புஷ்பங்கள்’ திரைப்படம் மூலமாக தமிழ் சினிமா துறையில் காலடி எடுத்து வைத்தார். அப்படத்தில் இடம்பெற்ற ‘ஆனந்தராகம்’ பாடல் அவரை பட்டிதொட்டி எங்கும் பிரபலப்படுத்தியது எனக்கூறலாம்

உமா ரமணனின் மறைவு இசை ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அவரது இறுதிச்சடங்கு இன்று நடைபெறுகிறது. உமா ரமணனின் மறைவுக்கு இசை ரசிகர்கள், திரைப்பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

4 bismi svs

உமா ரமணன் பாடிய சில சூப்பர் ஹிட் பாடல்கள்

- Advertisement -

01. பூங்கதவே தாழ் திறவாய்… – நிழல்கள்
02. ஆனந்த ராகம்… – பன்னீர் புஷ்பங்கள்
03. பூபாளம் இசைக்கும்… – தூரல் நின்னு போச்சு
04. செவ்வந்தி பூக்களில் செய்த வீடு… – மெல்ல பேசுங்கள்
05. கஸ்தூரி மானே… – புதுமைப் பெண்
06. நீ பாதி நான் பாதி… – கேளடி கண்மணி
07. ஆகாய வெண்ணிலாவே… – அரங்கேற்ற வேளை
08. பொன் மானே கோபம் ஏனோ… – ஒரு கைதியின் டைரி
09. கண்மணி நீ வர காத்திருந்தேன் – தென்றலே என்னை தொடு
10. ராக்கோழி கூவையில… ஒரு தாயின் சபதம்
11. ஏலேழம் குயிலே… – பாண்டி நாட்டு தங்கம்
12. பூத்து பூத்து குலுங்குதடி… கும்பக்கரை தங்கையா
13. பூங்காற்று இங்கே வந்து… வால்டர் வெற்றிவேல்
14. வெள்ளி நிலவே வெள்ளி நிலவே… – நந்தவன தேரு
15. கண்ணும் கண்ணும் தான்… – திருப்பாச்சி

– கேஎம்ஜி

5 national kavi
Leave A Reply

Your email address will not be published.