பாமகவின் தலைவராகும் அன்புமணி ராமதாஸ் ?
பாமகவில் அன்புமணி ராமதாசை முன்னிலைப் படுத்தும் முயற்சி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதேசமயம் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் மிகப்பெரிய தோல்வியைச் சந்தித்த பாமக-வை வலுப்படுத்த முயற்சிகயாக நிறுவனர் ராமதாஸ் தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் கட்சி நிர்வாகிகளை தொடர்பு சந்தித்து வருகிறார். மேலும் நிர்வாகிகளை சந்திக்கும் நிகழ்ச்சிகளில் கடுமையாக நிர்வாகிகளை விமர்சித்தும், எச்சரித்தும் வருகிறார்.
அதேநேரம் ராமதாஸின் வயது மூப்பின் காரணமாகவும், உடல்நிலை காரணமாகவும் தீவிர அரசியலில் பெரிய அளவில் ஈடுபட முடியாத நிலை உள்ளது. அதேநேரத்தில் அன்புமணி இளைஞர் அணியின் தலைவராக இருப்பதால், கட்சியின் நிர்வாக முடிவுகளில் பெரிதாக தலையிட முடியவில்லையாம்.
இந்த நிலையில் டிசம்பர் 29ம் தேதி கட்சியினுடைய பொதுக்குழு கூட உள்ளது. அதில் அன்புமணி ராமதாஸுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று பாமக வின் சட்டமன்ற உறுப்பினர்களும், மாவட்டச் செயலாளர்களும் தலைமையிடம் பேச தொடங்கியுள்ளனர்.மேலும் ஒரு சில மாவட்டச் செயலாளர்களும், எம்எல்ஏக்களும் பாமக தலைவராக உள்ள ஜி.கே.மணியை சந்தித்து நீங்கள் நீண்ட ஆண்டுகாலம் தலைவராக இருந்து விட்டீர்கள் கட்சியை பலப்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது. அதனால் அன்புமணி ராமதாஸுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் நீங்கள் தலைவர் பதவியை அன்புமணி ராமதாசுக்கு விட்டுக் கொடுக்க வேண்டும் என்று கூறியிருக்கின்றனர்.
இதைக் கேட்டுக் கொண்ட ஜிகே மணி “ஐயா கிட்டபோய் சொல்லுங்க அன்புமணி ராமதாசை தலைவராக ஜிகே மணி சம்மதித்து விட்டார் என்று” இவ்வாறு கூறி விட்டு அந்த இடத்தை விட்டுச் சென்று விட்டாராம் ஜி கே மணி.