குழந்தைகளுக்கு நடைபெறும் வன்கொடுமையை எதிர்த்து விழிப்புணர்வு பேரணி !
திருச்சி 9.8.24 குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் வன்கொடுமையை எதிர்த்து விழிப்புணர்வு பேரணி..
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே குழந்தைகளுக்கு எதிரான வன்முறை குறித்த ‘விழித்திரு, என்றென்றும், எப்பொழுதும்” எனும் விழிப்புணர்வு பேரணி ரோட்டரி மாவட்டம் 3000ன் திருச்சி மண்டலத்திலுள்ள அனைத்து ரோட்டரி சங்கங்கள் ஜோசப் கண் மருத்துவமனை, GVN Riverside மருத்துவமனை மற்றும் பாரதிதாசன் பல்கலைகழக நாட்டுநலப் பணி இயக்கம் இணைந்து நடத்தினர்.
இந்த பேரணியில் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்ட திருச்சி மாவட்ட காவல் ஆணையர் காமினி, ரோட்டரி மாவட்ட ஆளுநர் Rtn. ஆனந்தஜோதி மற்றும் பாரதிதாசன் பல்கலைகழக நாட்டு நலப்பணிதிட்ட ஒருங்கிணைப்பாளர் இலஷ்மிபிரபா ஆகியோர் கொடி அசைத்து தொடங்கி வைத்தனர்.
மேலும் இந்தப் பேரணையில் 300-க்கும் மேற்பட்ட மான மாணவிகள் கலந்து கொண்டு குழந்தைகளுக்கு எதிராக வன்கொடுமைக்கு விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தயபடி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து தென்னூர் உழவர் சந்தை வரை இந்த பேரணி நடைபெற்றது.
மேலும் குழந்தைகளுக்கு மனம், பாலியல் சீண்டல்கள் மற்றும் ஓதுக்கிவைத்தல் ஆகிய நான்கு துன்புறுத்தல்களும் தண்டனைக்குரிய குற்றமாகும் அவ்வாறு துன்புறுத்துவோர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு அபராதத்துடன் கூடிய சிறைதண்டனை அனுபவிக்க நேரிடும் என்ற கருத்து எடுத்துரைக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் ரோட்டரி மாவட்ட சிறப்பு திட்ட செயலாளர் Rtn. முரளி, நிர்வாக செயலாளர் Rtn. S.R. செந்தில்குமார், திட்ட தலைவர் Rtn., இராணி ரோஸ்லின் அனைத்து ரோட்டரி மாவட்ட செயலாளர்கள், துணை ஆளுநர்கள், தலைவர்கள், செயலாளர்கள், ஜோசப் கண் மருத்துவமனை நிர்வாக அதிகாரி Rtn. சுபாபிரபு, GVNRiverside மருத்துவமனை இயக்குநர் Rtn.Dr. செந்தில்குமார் ஆகியோர் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை மண்டல ஒருங்கிணைப்பாளர்கள் Rtnகேசவன், Rtn. எட்வின், Rtn. ஜானகி இராஜசேகர் மூவரும் செய்திருந்தனர்.