அங்கும் பார்வையில் ‘பர்த் மார்க் ‘

0

சேப்பியன்ஸ் எண்டெர்டெயின்மெண்ட் தயாரிப்பில் விக்ரம் ஸ்ரீதரன் டைரக்ஷனில் உருவாகியுள்ளது ‘ பர்த் மார்க் ‘. இந்த 23–ஆம் தேதி ரிலீஸ் ஆகியிருக்கும் இந்தப் படத்தை நாமும் பார்த்தோம். அதைப் பற்றி நாம தான் எழுதணும்னு நினைத்தோம். ஆனால் என்ன எழுதுறது, எப்படி எழுதுறது ன்னு புரியல, தெரியல. அதனால படத்தின் டைரக்டர் விக்ரம் ஸ்ரீதரன், ஹீரோ ஷபீர் கல்லாரக்கல் ஆகிய இருவரும் பிரஸ்மீட்டில் சொன்னதை சொல்லிட்டா பொல்லாப்பு இருக்காது. தொடர்ந்து படிங்க.

அங்கும் பார்வையில் 'பர்த் மார்க் '
அங்கும் பார்வையில் ‘பர்த் மார்க் ‘

https://businesstrichy.com/the-royal-mahal/

முதலில் டைரக்டர் விக்ரம் ஸ்ரீதரன்”குழந்தைப் பிறப்பு முறை பற்றி இந்தப் படம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம். ’பர்த் மார்க்’ என ஆங்கிலத்தில் தலைப்பு வைக்கக் காரணம் கதையோடு சேர்ந்து வந்த விஷயம் என்பதால் தான். கார்கில் போருக்குப் பிறகு 1999-ல் நடக்கும் கதையாக இது உருவாக்கப்பட்டுள்ளது. அப்போதிருக்கும் மனநிலையைதான் ஷபீரின் டேனி கதாபாத்திரம் திரையில் பிரதிபலித்திருக்கும்.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

மிர்னாவும் ஜெனி என்ற கர்ப்பிணிப் பெண்ணாக சிறப்பான நடிப்பைக் கொடுத்திருக்கிறார். நிஜமான கர்ப்பிணியின் வயிறு, அதன் எடை போலவே உண்மையான புராஸ்தெடிக் வயிறு மிர்னாவுக்கு செய்து கொடுத்தோம். அதை வைத்துக் கொண்டே அவர் படம் முழுக்க நடந்து, ஓடி நடித்திருப்பார். அது பெரிய விஷயம். போர் வீரனுடைய மனநிலை மற்றும் கர்ப்பிணி பெண்ணின் மாற்றங்கள் என அனைத்தையும் முறையாக ரிசர்ச் செய்துதான் உருவாக்கி இருக்கிறோம்.இதற்கே எங்களுக்கு ஒரு வருடம் ஆனது. படத்திற்கு விஷால் சந்திரசேகரின் இசை மிகப்பெரிய பலம். படம் பார்த்துவிட்டு உங்கள் ஆதரவை நீங்கள் கொடுக்க வேண்டும்” .

பல் கட்டும் சிகிச்சையில் நவீனம் காட்டும் KM DENTAL CLINIC

'பர்த் மார்க் '
‘பர்த் மார்க் ‘

நடிகர் ஷபீர், “‘சார்பட்டா’ படம் மூலம் நீங்கள் கொடுத்த அனைத்து அன்புக்கும் நன்றி. ‘சார்பட்டா’ படத்திற்குப் பிறகு நான் முதலில் கையெழுத்துப் போட்ட படம் இது. இயக்குநர் கொடுத்த இன்புட் வைத்தே படத்தில் என்னுடைய சிறந்த நடிப்பைக் கொடுத்திருக்கிறேன். மிர்னாவுக்கு இன்னைக்கு உடம்பு சரியில்லை. அதனால்தான், அவரால் இங்கு வரமுடியவில்லை. படத்தில் லிப்லாக் வைக்க வேண்டும் என்று திணிக்கவில்லை. கதைக்கு அந்த எமோஷன் தேவைப்பட்டது. நிச்சயம் படம் உங்களுக்குப் பிடிக்கும்” என்றார்.

இயக்குநர் விக்ரம் ஸ்ரீதரன், ஹீரோ ஷபீர் கல்லஆரக்கல் ஆகியோருடன்நடிகர்கள் தீப்தி, பொற்கொடி, ஒளிப்பதிவாளர் உதய் தங்கவேல், எடிட்டர் இனியவன் பாண்டியன் போன்ற படக்குழுவினரும் இந்த பிரஸ்மீட்டில் கலந்து கொண்டனர்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.