அங்குசம் பார்வையில் ‘ நினைவெல்லாம் நீயடா படம் எப்படி இருக்கு ! ..

0

அங்குசம் பார்வையில் ‘ நினைவெல்லாம் நீயடா ‘ தயாரிப்பு: ‘ லேகா தியேட்டர்ஸ் ‘ ராயல் பாபு. டைரக்டர்: ஆதிராஜன். இசை: இசைஞானி இளையராஜா. ஆர்ட்டிஸ்ட்ஸ் : பிரஜின், மனிஷா யாதவ், சினாமிகா, ரோஹித், யுவலக்ஷ்மி, ரெடின் கிங்ஸ்லி, பி.எல்.தேனப்பன், மதுமிதா , அபிநட்சத்ரா, மனோபாலா,ஒளிப்பதிவு: ராஜா பட்டாச்சார்ஜி, எடிட்டிங்: ஆஷிஷ், ஆர்ட் டைரக்டர்: முனி கிருஷ்ணா, பாடல்கள்: பழனி பாரதி, இளையராஜா, சினேகன். பிஆர்ஓ: ஏ.ஜான்.

நினைவெல்லாம் நீயடா
நினைவெல்லாம் நீயடா
2 dhanalakshmi joseph

கட்னா கெளதம் ( ஹீரோ பிரஜின்) மாவைத் தான் கட்டுவேன் என ஒத்தைக் காலில் நிற்கிறார் ஆனந்தி. ஆனால் அந்த மாமாவோட மனசு பள்ளிக்கூடத்தில் படிக்கும் போது காதலிச்சு, சந்தர்ப்ப சூழ்நிலையால் அமெரிக்கா போய்விட்ட மலர்விழியை ( புது ஹீரோயின் சினாமிகா) நினைச்சு ஆனந்தியை நிராகரிக்குது.

4 bismi svs

ஒரு கட்டத்தில் நண்பர்கள், பெற்றோர்கள் வற்புறுத்தலால் ஆனந்திக்கு தாலி கட்டுகிறார் கெளதம். இதெல்லாம் முடிந்ததும் அமெரிக்கா மலர்விழி இங்கே வந்திறங்குகிறார். அதன் பின்னர் யார் நினைவில் யார் இருந்தார்கள், இருக்கிறார்கள் என்பதன் க்ளைமாக்ஸ் தான் இந்த ‘ நினைவெல்லாம் நீயடா ‘. அம்பது அறுபது ஆண்டுகளாக தமிழ் சினிமாவை சுற்றியடிக்கும் கதையை இந்தப் படத்தின் டைரக்டர் ஆதிராஜன் தனது பங்குக்கு சுற்றியடித்திருக்கிறார்.

- Advertisement -

- Advertisement -

கொஞ்சமும் அக்கறை இல்லாத திரைக்கதை, செயற்கையான சீன்கள், நடிப்பு என்ற பெயரில் அனைவரும் தேமே என வந்து போவதால் ஏற்படும் சலிப்பு இதெல்லாமே’நினைவெல்லாம் நீயாடா’ வை நாம் நினைவில் வைத்துக் கொள்ள மறுக்கும் காரணிகள். காது குளிரும் மனம் மகிழும் மூன்று பாடல்கள், முக்கால்வாசி சீன்களில் தனது பின்னணி இசையால் நிரப்பிச் சமாளித்திருக்கும் இசைஞானி இளையராஜா இல்லையென்றால்..

படத்தின் நிலைமை கவலைக்கிடம் தான். அமெரிக்காவில் இருந்து அழகி மலர்விழி வந்திருங்குவாள் என நாம் எதிர்பார்த்தால் படு கிழவியைக் காட்டி நம்மை கிறுகிறுக்க வைத்துவிட்டார்கள். சகோதரன் ஆதிராஜனுக்கு ஒரு அன்பான வேண்டுகோள். அடுத்த படத்தை Best – ஆகக்கூட பண்ண வேண்டாம். இந்த மாதிரி Worst – ஆகாமல் பார்த்துக் கொள்ளுங்க. நன்றி வணக்கம்.

– மதுரை மாறன்.

5 national kavi
Leave A Reply

Your email address will not be published.