மாரி செல்வராஜின் ‘பைசன்’ ஃபர்ஸ்ட் லுக்!
கபடி வீரன் ஒருவனின் கதையை மையமாக வைத்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘பைசன்’. மாரி செல்வராஜின் பிறந்த நாள் ( மார்ச் 07) அன்று பைசனின் ஃபர்ஸ்ட் லுக்கை தயாரிப்பு நிறுவனங்களான அப்ளாஸ் என்டர்டெய்ன்மென்டும் நீலம் ஸ்டுடியோஸும் இணைந்து வெளியிட்டுள்ளது.

கபடி வீரனாக துருவ் விக்ரம் , இவருக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன்நடித்திருக்கிறார்கள். இந்தப்படம் உண்மை சம்பவங்களால் ஈர்க்கப்பட்டு.. ஆர்வம்.. மீள் உருவாக்கம்.. மற்றும் அனைத்து தடைகளையும் எதிர்த்து வெற்றி பெறுவதற்கான ஒரு உறுதியான நிலைப்பாட்டை உயிர்ப்பிக்கிறது.
கதை சொல்வதில் தனித்துவமான பாணியை கொண்டிருக்கும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பைசன்’- பார்வையாளர்களை உத்வேகப்படுத்தவும், உற்சாகப்படுத்தவும் தமிழில் வெளியாகும் ஒரு மைல்கல் படைப்பாக இருக்கும் என உறுதி அளிக்கிறது தயாரிப்பு நிறுவனங்கள். இப்படத்தில் நடித்திருக்கும் மற்ற கலைஞர்கள், தொழில்நுட்பக் குழுவினர் விவரங்களுடன் மேலும் புதிய தகவல்கள் விரைவில்….
— மதுரை மாறன்.