‘பிரம்ம முகூர்த்தம்’ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் பண்ணிய வி.சே.& சசிக்குமார் !

0
dear movie banner

‘பிரம்ம முகூர்த்தம் ‘ ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் பண்ணிய வி.சே.& சசிக்குமார் !

KV Media தயாரிப்பாளர் P செந்தில்நாதன் வழங்க, இயக்குநர் TR விஜயன் இயக்கத்தில், விஜய் விஷ்வா, அபர்ணா நடிப்பில் காமெடி கமர்ஷியல் திரைப்படமாக உருவாகியுள்ள “பிரம்ம முகூர்த்தம்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை, தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் விஜய் சேதுபதி மற்றும் இயக்குநரும், நடிகருமான சசிகுமார் ஆகியோர் வெளியிட்டனர்.

Happy homes

காமெடி ஜானரில் மாறுபட்ட திரை அனுபவமாக உருவாகியுள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக், திரை ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

- Advertisement -

- Advertisement -

பிரம்ம முகூர்த்தம்
பிரம்ம முகூர்த்தம்

ஒரு இளம் ஜோடியின் திருமண ஏற்பாட்டில் நடக்கும் களேபரங்களும், அதைக் கடந்து அந்த திருமணத்தை நடத்த, நாயகன் நடத்தும் போராட்டங்களும், பரபர திரைக்கதையில், வயிறு குலுங்கச் சிரிக்க வைக்கும் காமெடியுடன் கூடிய கமர்ஷியல் படமாக இப்படம் உருவாகியுள்ளது.

இளம் நாயகன் விஜய் விஷ்வா நாயகனாக நடிக்க, அபர்ணா நாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் மதன்பாப், அப்புகுட்டி, பெஞ்சமின், C.ரங்கநாதன், அனுமோகன், விஜய கணேஷ், இமான் அண்ணாச்சி, TSR, கோதண்டம், அறந்தாங்கி சங்கர், சின்னத்திரை தளபதி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

3 kavi national

இப்படத்தின் படப்பிடிப்பு ஏற்காடு ,சென்னை, திருவள்ளூர், ஆகிய இடங்களில் நடத்தப்பட்டுள்ளது. படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழுதாக முடிந்த நிலையில், தற்போது இறுதிக்கட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

7 bismi bise almathina

இப்படத்தின் டீசர், டிரெய்லர் பற்றிய அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்.

தொழில் நுட்ப கலைஞர்கள் விபரம்
தயாரிப்பு நிறுவனம் – KV Media
தயாரிப்பாளர் – P செந்தில்நாதன்
கதை திரைக்கதை இயக்கம் – TR விஜயன்
வசனம் – ஜாபர்
இசை – ஶ்ரீ சாஸ்தா
ஒளிப்பதிவு – EJ.நவ்ஷாத்
பாடல்கள் – சினேகன், C. பாலமுருகன், A.P. ராஜா.
எடிட்டர் – பிரவீன் குமார்
நடனம் – சேஷவ் தபூர்
சண்டைப்பயிற்சி – பம்மல் ரவி
மக்கள் தொடர்பு – A.ராஜா

3 kavi national
Leave A Reply

Your email address will not be published.