ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு தாட்கோ மூலம் கடனுதவி – கலெக்டர் அறிவிப்பு!

0

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு தாட்கோ மூலம் கடனுதவி 

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக தொழில் முனைவோரின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவித்திடும் வகையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சார்ந்தவர்களுக்கு தமிழ்நாடு சிமெண்ட் கழகத்தின் விற்பனை முகவர், ஆவின் பாலகம் அமைத்தல் மற்றும் விவசாய நிலம் வாங்குதல் போன்ற திட்டங்களுக்கு தாட்கோ மூலம் மானியத்துடன் கூடிய வங்கிக்கடன் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவித்திருக்கிறார், திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.மா.பிரதிப் குமார்.இ.ஆ.ப., அவர்கள்.

2 dhanalakshmi joseph

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக தொழில் முனைவோரின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவித்திடும் வகையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரர் சார்ந்தவர்களுக்கு தமிழ்நாடு சிமெண்ட் கழகத்தின் விற்பனை முகவர், ஆவின்பாலகம் அமைத்தல் மற்றும் விவசாய நிலம் வாங்குதல் போன்ற திட்டங்களுக்கு தாட்கோ மூலம் மானியத்துடன் கூடிய வங்கிக்கடன் வழங்கப்படுகிறது.

4 bismi svs

100 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தொழில் முனைவோருக்கு தமிழ்நாடு சிமெண்ட் சுழகத்தின் விற்பனை முகவராகவும், அத்துடன் கூடுதலாக இதர கட்டுமான பொருட்கள் மூலம் விற்பனை செய்து வருவாய் ஈட்டும் வகையில் ஆதிதிராவிடர்களுக்கு திட்டத்தொகையில் 30% (விழுக்காடு) அல்லது அதிகபட்சம் ரூ.2.25 இலட்சம் மானியமும் பழங்குடியினருக்கு திட்டத்தொகையில் 50% (விழுக்காடு) அல்லது அதிகபட்சம் ரூ.3.75 இலட்சம் மானியமும் விடுவிக்கப்படும்.

- Advertisement -

- Advertisement -

50 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தொழில் முனைவோரின் பொருளாதார வளர்ச்சி ஊக்குவிக்கும் வகையில் உறைவிப்பான் (Freezer) குளிர்விப்பான் (Cooler) போன்ற உபகரணங்கள் கொள்முதல் செய்து ஆவின் பாலகம் அமைத்து வருவாய் ஈட்டிடும் வகையில் ஆதிதிராவிடர்களுக்கு திட்டத்தொகையில் 30% (விழுக்காடு) அல்லது அதிகபட்சம் 2.25 இலட்சம் மானியமும் பழங்குடியினருக்கு திட்டத்தொகையில் 50% (விழுக்காடு) அல்லது அதிகபட்சம் ரூ.3.75 இலட்சம் மாணியமும் விடுவிக்கப்படும்.

200 நிலமற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாய தொழிலாளர்களுக்கு சமூக பொருளாதார நிலையில் மேம்பாடு அடையும் பொருட்டு அவர்கள் விவசாய நிலம் வாங்க நிலத்தின் விலையில் 50% அல்லது அதிகபட்சம் ரூ.5.00 இலட்சம் வரை மானியம் விடுவிக்கப்படும்.
மேற்கண்ட திட்டங்களில் பயன்பெற தாட்கோ இணையதளமான www.tahdco.com_என்ற முகவரியில் பதிவு செய்ய வேண்டும்.

மேலும் விபரங்களுக்கு மாவட்ட மேலாளர் அலுவலகம், தாட்கோ, ராஜாகாலனி, மாவட்ட ஆட்சியர் அலுவலகச்சாலை, திருச்சிராப்பள்ளி-020001. (0431-2463909) என்ற முகவரியில் தொடர்பு கொண்டு இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளுமாறு” அழைப்பு விடுத்திருக்கிறார் திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.மா.பிரதீப்குமார், இ.ஆ.ப., அவர்கள் .

 

5 national kavi
Leave A Reply

Your email address will not be published.