அவர் மறைந்த போது எல்லாம் போச்சு என்று ஏன் பெரியார் அழுதார் என்பதை…..
அண்ணா
1. பெரியாரின் சிந்தனை விளைச்சலை தமிழர்கள் உண்ணக் காரணமானவர்.
2. பண்பாடு என்பது ஆன்மீகச்
சொத்தல்ல என்பதை உணர்த்தி அதீதப் பண்பாட்டோடு வாழ்ந்த நாத்திகர்
3. தமிழ்போல் ஆங்கிலமும்
தேவையென்பதை உணர்த்திய உண்மைத்தமிழர்
4. மத்திய அதிகாரக் குவியலை எதிர்த்து மாநில சுய ஆட்சி என்ற கோட்பாட்டை விதைத்த இந்தியாவின் முதல்
அரசியல் அறிஞன்.
5. ஆரியம் x திராவிடம் என்ற
பண்பாட்டுப்போரை வெகுமக்கள் இயக்கமாக்கி
சனாதனத்திடமிருந்து தமிழ் நாட்டைக் காப்பாற்றிய காரியவாதி.
6. எளிமை என்பது சட்டையல்ல கழற்றி மாற்ற. அது உடலின் தோல் போன்ற
உண்மையானது என்பதை பொதுவாழ்வில் கடைப்பிடித்த நல்ல மனிதன்.
7. தூங்கா மனம் என்னும்
புத்தனின் வாரிசு.
8. அவர் மறைந்தபோது
எல்லாம் போச்சு என்று ஏன்
பெரியார் அழுதார் என்பதை
தமிழ்நாடு இன்று உணர்கிறது.
9. அவரைவிட பெரியவர் சிறியவர் எல்லாம் அந்நாந்து பார்க்கும் வாழ்க்கையை அவர்
வாழ்ந்தால் தான் அவர் அண்ணா என்ற என் சொற்கள்
அவரைப் புரியவைக்கும்
-நந்தலாலா