பேரிடர்களால் ஏற்படும் உயிரிழப்புகளைக் காட்டிலும் கவனக்குறைவு, அலட்சியத்தால் நேரிடும் உயிரிழப்புகள் அதிகம் – ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி திருப்புகழ்

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

பேரிடர்களால் ஏற்படும் உயிரிழப்புகளைக் காட்டிலும் கவனக்குறைவு, அலட்சியத்தால் நேரிடும் உயிரிழப்புகள் அதிகம் செயின்ட் ஜோசப் கல்லூரி இயற்பியல் துறை நிகழ்வில் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி திருப்புகழ் பேச்சு

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி தன்னாட்சி அடைந்த 1978 ஆம் ஆண்டு பயின்ற இளநிலை இயற்பியல் மாணவர்கள் மன்றம் சார்பில் கருத்தரங்கு நடைபெற்றது.

துணை முதலமைச்சர் உதயநிதி வாழ்த்து

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி - இளநிலை இயற்பியல் மாணவர்கள் மன்றம்
திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி – இளநிலை இயற்பியல் மாணவர்கள் மன்றம்

கல்லூரி முதல்வர் அருள்முனைவர் ம.சேவியர் ஆரோக்கியசாமி தலைமை வகித்தார். கல்லூரி அதிபர் அருள்முனைவர் பவுல்ராஜ் மைக்கிள், கல்லூரிச் செயலர் அருள்முனைவர் கு.அமல் ஆகியோர் வாழ்த்தாரை வழங்கினர். இணை முதல்வர் முனைவர் பா.ராஜேந்திரன் கலந்துகொண்டார்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

இக்கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக கல்லூரியின் முன்னாள் மாணவரும், சென்னை பெருநகர வெள்ள அபாயத்தைத் தணித்தல் மற்றும் மேலாண்மையின் தலைவருமான ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி திருப்புகழ் கலந்து கொண்டு, பேரிடர் அபாய குறைப்பில் மாணவர்களின் பங்கு என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அவர் உரையில், பூமியின் நீர், நிலம் மற்றும் சூழ்நிலையியல் அமைப்புகளில் இழப்புகள் அதிகம். சில மாற்றங்கள் இயற்கையாகவே நிகழும். அவற்றில் நிலநடுக்கம், புயல், சுனாமி ஆகியவை பெரும் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. இவற்றுடன் இயற்கை சூழ்நிலைக்கு முரண்பட்ட கட்டிட அமைப்புகள், வாழ்வியல் முறைகள் ஆபத்துகளையும், இழப்புகளையும் மேலும் அதிகரிக்கின்றன.

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி - இளநிலை இயற்பியல் மாணவர்கள் மன்றம்
திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி – இளநிலை இயற்பியல் மாணவர்கள் மன்றம்

இவ்வாறு இயற்கையின்நிகழ்வுகள்பேரிடர்களாய் மாறுகின்றன. இந்தியாவைக் காட்டிலும் மற்ற வளர்ந்த நாடுகளில் கடந்த 50 ஆண்டுகளில் ஏற்பட்ட பேரிடர்கள் அதிகம், ஆனால், அவர்களின் உயர்ந்த பேரிடர் மேலாண்மை, மீட்டெடுக்கும் திறனால் இழப்புகள் குறைவு. இயற்கை பேரிடர்களால் ஏற்படும் உயிரிழப்புகளைக் காட்டிலும், மனிதர்களின் கவனக்குறைவாலும், அலட்சியத்தாலும் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகம். பேரிடர் மேலாண்மையில் இயற்பியலின் பங்கு அதிகம். எனவே மாணவர்களுக்கு பேரிடர் மேலாண்மை பற்றிய அறிவை பாடங்கள் மற்றும் பயிற்சிகள் மூலம் வளர்க்க வேண்டும் என்று பதிவு செய்தார்.

முன்னதாக, இயற்பியல் துறைத் தலைவர் ஜான்சன் வரவேற்றார். இயற்பியல் மன்ற செயலாளர் தினகரன் நன்றி கூறினார்.

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.