அப்பாவி ஏழை மக்களிடம்… “2.5 லட்சத்தை பணத்தை வாங்கிக்கொண்டு ஏமாற்றுகிறதா…? மத்திய மாநில அரசுகள் !

காவிய சேகரன்

0

அப்பாவி ஏழை மக்களிடம்… “2.5 லட்சத்தை வாங்கிக்கொண்டு ஏமாற்றுகிறதா…? மத்திய மாநில அரசுகள் ? யார் பொறுப்பு !

 

“2022 ஆம் ஆண்டுக்குள் அனைத்து தகுதியான பயனாளிகளுக்கும் நிரந்தர வீடுகளை வழங்குவதற்காக, ஜூன் 25, 2015 அன்று பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (நகர்ப்புறம்) திட்டத்தை அரசாங்கம் அறிமுகப்படுத்தியது. அதாவது பிரதமரின் வீடு கட்டும் திட்டம். PMAY என்ற திட்டம் இது நகரப்புறங்களுக்கானது PMAY_G என்பது கிராம புறங்களுக்கானது என்று இரண்டு பிரிவுகளின் செயல்பாட்டில் உள்ளது.

PMAY_இத்திட்டத்தின் கீழ் வீடுகட்டி தருவதாக திருச்சி நகர்புறங்களில் வசிக்கும் வீடற்ற பயனாளர்கள் 184 பேர் சேர்க்கப்பட்டு அவர்களிடமிருந்து 2,50,000 ரூபாய் பணத்தை வசூலித்து உள்ளது குடிசைமாற்று வாரியம்.  ஐந்து _ஆறு ஆண்டுகளாகியும் வீடும் வரவில்லை கட்டிய பணமும் திரும்ப கிடைக்கவில்லை என்பதால் தொடர்ந்து போராடி வருகிறார்கள். மாவட்ட ஆட்சியர் மற்றும் குடிசை மாற்று அதிகாரிகளிடம் மட்டும் 10 முறைக்கு மேல மனு கொடுத்தும் இது வரை நடவடிக்கை எடுக்கவில்லை என்பது தான்..கொடுமையிலும் கொடுமை.

- Advertisement -

- Advertisement -

குடிசைமாற்றுவாரியத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள்
குடிசைமாற்றுவாரியத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள்

 

4 bismi svs

பரிதாபமாக திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் மனுவுடன் நின்றவர்களிடம் பேசினோம்.… நாங்கள் முதலியார் சத்திரம் பகுதியை சேர்ந்தவர்கள் எங்களுக்கு  வண்ணாரபேட்டை பகுதியில்  மோடி அரசின் திட்டத்தின் கீழ் வீடு கட்டித்தருகிறோம் என்று சொன்னாங்க குடிசைமாற்றுவாரிய அதிகாரிகள்.

அதற்காக அவர்கள் எங்களிடம் 2,50,000 கேட்டாங்க நாங்களும் நம்பி கடனை உடனை வாங்கி கட்டினோம். பணம் கட்டி 6 வருடம் ஆச்சு இதுவரை வீடுகள் கட்டி தரல…. வாங்கி கடனுக்கு நாங்க வட்டிக் கட்டிக்கிட்டு இருக்கோம், பணம் கட்டியவர்கள் எல்லாம் அன்றாட கூலி வேலை செய்பவர்கள், தினக்கூலியாக இருந்து ஏதோ அரசாங்க வீடு தராங்கன்னு சொல்லி கஷ்டப்பட்டு கட்டியிருக்கோம்.

நாங்கள் பணம் கட்டியது குடிசை மாற்று வாரியத்திடம் அங்கே போய் கேட்டா, கலெக்டர் ஆபீஸில் மனு கொடுக்க சொல்லுறாங்க, இங்கே கொடுத்தா குடிசைமாற்று வாரியத்திடம் கொடுங்கனு சொல்லுறாங்க, ஆறேழு வருசமா போராடிட்டே இருக்கோம் இதுவரை எந்த பதிலும் இல்லை, நாங்கெல்லாம் ஏழைங்க கஷ்டப்பட்டு உழைச்சி சாப்பிடுறோம் வயித்துக்கு சரியா சாப்பிடாம கூட இல்லாத வீட்டுக்கு வாங்கி கடன் பணத்துக்கு வட்டி கட்டிட்டு இருக்கோம் மன உளைச்சலுக்கு ஆளாகி தவிக்கிறோம் என்றனர்.

பாவப்பட்ட ஏழை மக்களுக்கு என்ன தான் பதில் சொல்ல போகிறது. மத்திய மாநில அரசுகள். அரசியல் பண்ணும் மத்திய – மாநில அரசாங்கங்கள் மக்களை பந்தாடுகிறது. இந்த திட்டம் எங்களுடையது நாங்கள் தான் நிதி ஒதுக்கினோம்… என மத்திய மாநில அரசுகள்… போட்டிப்போட்டு கொண்டு இருப்பது எல்லாம் டிஜிட்டல் விளம்பரங்கள் போல்.. எல்லாம் அறிவிப்பும், விளம்பரமும் மட்டும் தான் போல… பார்த்து ரசித்துக்கொள்ளலாம் , அனுபவிக்க முடியாது போல…. நடவடிக்கை எடுக்குமா ? மத்திய மாநில அரசுகள்..

 

– காவிய சேகரன்

5 national kavi
Leave A Reply

Your email address will not be published.