ஒன்றிய அரசின் ஓரவஞ்சனை – அதிர்ச்சியூட்டும் புள்ளி விவரங்கள் !

0

இந்தியாவின் தென்மாநிலங்களுக்கு குறிப்பாக தமிழ்நாட்டிற்கு அதிர்ச்சியளிக்கக்கூடிய தகவல்! ஜிஎஸ்டி (சரக்கு மற்றும் சேவை வரி) மற்றும் நேரடி வரி வருவாயின் அடிப்படையில் ஒன்றிய நிதி அமைச்சகம் தென் மாநிலங்களுக்கு எதிராக பாகுபாடு காட்டுகிறது.. ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் வசூலிக்கப்படும் தொகை நியாயமான முறையில் பகிர்ந்தளிக்கப்படல்லை என்று தெளிவாகிறது.. பாஜக ஆளும் மாநிலங்கள் உட்பட மற்ற மாநிலங்களை விட தென்மாநிலங்கள் குறைவாகவே பெறுகின்றன. அதாவது, ஜி.எஸ்.டி. வரி வருவாயில் தாங்கள் அளிக்கும் ஒவ்வொரு ரூபாய்க்கும், மற்ற மாநிலங்களை விட குறைவான வருமானத்தையே தென்மாநிலங்கள் பெறுகின்றன..

ஒன்றிய அரசின் ஓரவஞ்சனை - அதிர்ச்சியூட்டும் புள்ளிவிவரங்கள் !
ஒன்றிய அரசின் ஓரவஞ்சனை – அதிர்ச்சியூட்டும் புள்ளிவிவரங்கள் !

அதிர்ச்சியூட்டும் புள்ளிவிவரங்களைக் காணுங்கள்!

1) தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா, கேரளா, கர்நாடகா போன்ற தென் மாநிலங்கள் ஜிஎஸ்டி மற்றும் நேரடி வரிகளுக்கு கடந்த 5 ஆண்டுகளில் பங்களித்த மொத்த வரி (இறக்குமதி வரி மீதான ஜிஎஸ்டி நீங்கலாக) – ரூ.22,26,983.39 கோடி,
கடந்த ஐந்து ஆண்டுகளில் உத்திரப்பிரதேசத்தால் பங்களிக்கப்பட்ட தொகை Rs.3,41,817.60 கோடி

2) கடந்த 5 ஆண்டுகளில் மேலே குறிப்பிட்ட தென் மாநிலங்களுக்கு விடுவிக்கப்பட்ட மத்திய வரிகள் மற்றும் தீர்வைகள் (ஒட்டுமொத்தமாக) – ரூ.6,42,295.05 கோடி

உத்திரப்பிரதேசத்திற்கு விடுவிக்கப்பட்ட தொகை – ரூ.6,91,375.12 கோடி

நான் எழுப்பிய பின்வரும் பாராளுமன்ற கேள்விகளுக்கு மாண்புமிகு ஒன்றிய இணையமைச்சர் @mppchaudhary அவர்கள் அளித்த பதில்களைக் காணுங்கள்!

(a) கடந்த ஐந்து ஆண்டுகளில் ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் பெறப்பட்ட ஜிஎஸ்டி, நேரடி, மறைமுக மற்றும் பிற வரி பங்களிப்புகளின் விவரங்கள்;
(b) கடந்த ஐந்து ஆண்டுகளில் வசூலிக்கப்பட்ட மத்திய வரிகளின் அடிப்படையில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி விவரங்கள்;
(c) பல்வேறு மாநிலங்கள் கேட்டுக் கொண்டுள்ளபடி, வரி ஒதுக்கீட்டு முறையை மாற்றுவதற்கான யோசனை ஏதேனும் அமைச்சகத்தால் பரிசீலிக்கப்படுகிறதா?

இந்த கேள்விகளுக்கு மாண்புமிகு ஒன்றிய நிதியமைச்சர் அவர்கள் அளித்த பதில்கள் இணைக்கப்பட்டுள்ளன..
ஒவ்வொரு மாநிலத்திற்கும் அவர்கள் வழங்கிய ஒவ்வொரு ரூபாயின் அடிப்படையில் ஒன்றிய அரசு திருப்பித் அளித்த தொகை பின்வருமாறு;

ஒன்றிய அரசின் ஓரவஞ்சனை - அதிர்ச்சியூட்டும் புள்ளிவிவரங்கள் !
ஒன்றிய அரசின் ஓரவஞ்சனை – அதிர்ச்சியூட்டும் புள்ளிவிவரங்கள் !

தமிழ்நாடு – 26 பைசா
கர்நாடகா – 16 பைசா
தெலுங்கானா – 40 பைசா
கேரளா – 62 பைசா
மத்தியப் பிரதேசம் – 1 ரூபாய் 70 பைசா
உத்திரப் பிரதேசம் – 2 ரூபாய் 2 பைசா
ராஜஸ்தான் – 1 ரூபாய் 14 பைசா

பி.வில்சன், நாடாளுமன்ற உறுப்பினர் (ராஜ்யசபா).
பி.வில்சன், நாடாளுமன்ற உறுப்பினர் (ராஜ்யசபா).

முகநூலில் : Wilson Pushpanathan
பி.வில்சன், நாடாளுமன்ற உறுப்பினர் (ராஜ்யசபா).

Leave A Reply

Your email address will not be published.