அரபிக்கடற்கரையிலிருந்து காவேரி கரை வரை….11 வயது சிறுவனின் சிகிச்சை பயணம்….தமிழக அரசு மருத்துவரின் அசாத்திய சிகிச்சை !

0

அங்குசம் இதழ் இணையதளத்தில் E-Book வாசிக்க... இந்த லிங்கை பயன்படுத்துங்கள் - அங்குசம் அச்சு இதழ்.. உங்கள் இல்லம் தேடி வர ஆண்டு சந்தா ரூபாய் 500 மட்டுமே - தொடர்பு எண் - 9488842025

இந்தியாவின் அரபிக் கடலின் தென்மேற்கு எல்லையில் உள்ள லட்சத்தீவில் 36 தீவுகள் உள்ளன. இதில் 10 தீவுகளில் தான் மனிதர்கள் வசிக்கிறார்கள். இதில் ஆண்ரூட் தீவில்  வசிக்கும் படிப்பறிவில்லா   ஏழை கூலி தொழிலாளி  செறிய கோயா – ஹாபி ஷா தம்பதியினரின் இரண்டாவது மகன்- பெயர் ‘முகம்மது துல்க்கர் – தற்போதுவயது 11- குறைபிரசவத்தில் (7 மாதத்தில் ) மிகக் குறைந்த எடையுடன் (700 kg)  பிறந்து பலமாதங்கள் தீவிர  சிசு மருத்துவ பிரிவில்  செயற்கை சுவாச சிகிச்சை பெற்றார்.

சிறிது சிறிதாக உடல் நலம் தேறி தற்போது   11 வயது சிறுவனாய் வளர்ந்துள்ளான். இவனுக்கு பிறக்கும் போதே ஏற்பட்ட உடல் நலக் குறைவால் இரண்டு கால்களும் சூம்பிபோல் நடக்க  பெலன் இல்லாமல் மிகவும் சிரமப்பட்டு வந்தான். கேரளாவில் உள்ள தனியார் மற்றும் அரசு மருத்துவ மனைகளில் பல்வேறு காலகட்டத்தில் சிகிச்சைகள் பெற்றும் துல்கரால் சரிவர நிற்கவோ  நடக்கவோ முடியாமல் போகவே பெற்றோரும் சோர்வடைந்து மருத்துவ சிகிச்சை முயற்சிகளை பல வருடங்களாக விட்டு விட்டனர்”.

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க

இந்த நிலையில் தமிழ்நாட்டில்  திருச்சி மாவட்டத்தில் முசிறி அரசு மருத்துவமனையில் பணிபுரியும் எலும்பு மூட்டு அறுவை சிகிச்சை நிபுணர் ஜான் விஸ்வநாத் இது போன்ற பிறவி ஊனங்களை  அறுவை சிகிச்சை செய்து வெற்றிகரமாக குண மாக்கி வருவதை தங்கள் நண்பர்கள் மூலம் கேட்டறிந்து லட்ச தீவில் இயங்கி வரும் ஒரு  தொண்டு நிறுவனம்  மூலம் திருச்சியில் உள்ள மருத்துவர் ஜான் விஸ்வநாத் அவர்களை தொடர்பு கொண்டு துல்கரின் நிலமையை எடுத்து கூறினர். மரு. ஜான் விஸ்வநாத்தும் துல்கர் குடும்பத்தினரை திருச்சிக்கு வர சொல்ல,  அதே தொண்டு நிறுவனத்தின் உதவியுடன் இரண்டு கப்பல்களில் இரண்டு நாள் பயணப்பட்டு கொச்சி வந்து பின்பு கொச்சியிலிருந்து திருச்சி வந்து சேர்ந்தனர் .

மாடூலர் கிச்சனை வீடியோவாக காண இங்கே கிளிக் செய்யவும்...

இந்நிலையில் மருத்துவர் ஜான் விஸ்வநாத் திருவரங்கம் அரசு மருத்துவமனைக்கு மாற்றுப் பணியில் அனுப்பப்பட துல்கர் சிறுவனை அவர் திருவரங்கம் அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக சேர்த்து அவரை பரிசோதித்து பார்த்ததில் துல்கருக்கு பிறவி மூட்டு இறுக்கம் (Congenital Arthrogryposis)  – பெருமூளை வாதம் (Cerebral Palsy) தொடர்பான ஸ்பாஸ்டிக் பாராப்லீஜியா என்கிற பிறவி ஊனத்தினால் பாதிக்கபட்டு சரியாக நிற்கவோ நடக்கவோ முடியாமல் சிரமப்படுவது கண்டறியப்பட்டது.

3
Tamil Nadu government doctor's impossible treatment
Tamil Nadu government doctor’s impossible treatment

இதைத் தொடர்ந்து மேற்படி சிறுவன் துல்கரின் பெற்றோர்களின் வேண்டுகோள்படி அவனை நடக்க வைக்க இரண்டு இடுப்பு மூட்டுகள் முழங்கால் மூட்டுகள் கணுக்கால் மூட்டுகள் பாதங்கள், கால்கள் தொடைகளில் தொடர் அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டு  திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளபட்டன. அதன்படி முகம்மது துல்கருக்கு 28.12.2023, 31.01.2024 மற்றும் 06.02.2024 ஆகிய மூன்று தேதிகளில் எலும்பு மூட்டு அறுவை சிகிச்சை நிபுணர் ஜான் விஸ்வநாத் தலைமையிலான சிறப்புஅறுவை சிகிச்சை குழு  தொடர் அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டது. ஒவ்வொரு அறுவை சிகிச்சைகளும் 3மணி நேரத்திலிருந்து 4 மணி நேரம் வரை மேற்கொள்ளபட்டது.

4

இந்த தொடர் மராத்தான் நூதன நவீன அறுவை சிகிச்சைகள் – தசைநார் பரிமாற்றம், (Tendon Transters, Bridle’s  Procedure) தசை சமநிலை ( muscle Balancing )மற்றும் மறுசீரமைப்பு (Remodulation)/முன்பாத மறுஅமைப்பு செயல்முறைகளை உள்ளடக்கியது, மூன்று கட்டங்களில் இரண்டு இடுப்புகள் தொடை கால்களில் மொத்தம் 38 நூதன தசைநார் மற்றும் தசைநாண் அறுவை சிகிச்சைகள் முற்றிலும் இலவசமாக செய்யப்பட்டன.

இத்தகைய நூதன  நவீன அறுவை சிகிச்சைகள் எய்ம்ஸ், சிஎம்சி வேலூர் போன்ற நவீன உயர் மேற் சிகிச்சை வசதிகள் உள்ள மருத்துவமனைகளில் தான் செய்யப்பட முடியும். அதுவும் அதற்கு பல இலட்ச ரூபாய்கள் செலவாகும் என்ற நிலையில் கடல் கடந்து கப்பல், இரயில் பேருந்துகளில் பல நாட்கள் பிராயாணம் செய்து தம்மை நம்பி  தமிழகத்திற்கு வந்த அண்டை யூனியன் பிரதேசத்தின் மகனை தன் மக்களை போல் பார்த்து சிகிச்சை அளித்த எலும்பு மூட்டு அறுவை சிகிச்சை நிபுணர் ஜான் விஸ்வநாத்தை நோயாளியின் பெற்றோர் உறவினர்கள் மற்றும் பொது மக்கள் அனைவரும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

இந்த தொடர் அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக செய்து முடித்து சாதனை நிகழ்த்தி உள்ள மரு. ஜான் விஸ்வநாத் கூறும் போது அனைத்து அறுவை சிகிச்சைகளும்   எந்தவித அசம்பாவிதமும் இன்றி திட்டமிட்டபடி செய்து முடிக்க உதவிய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவுக்கு நன்றியும் கனமும் மகிமையும் சேரும் என்றும் அறுவை சிகிச்சை காயங்கள் குணமாகி தையல் பிரித்த பின் தொடர் இயல்முறை பயிற்சி அளிக்கப்பட்டு துல்கரை நன்றாக நடக்க வைத்து லட்ச தீவிற்கு வழி அனுப்புவோம் என்று நம்பிக்கை தெரிவித்தார்

Furry genius pet hospital

Leave A Reply

Your email address will not be published.