மேயரை தேர்ந்தெடுக்க நேரடித் தேர்தல் அறிவாலய வட்டாரத்தில் பேச்சு -வார்டு உடன்பிறப்புகள் மகிழ்ச்சி!
வரும் ஜனவரி 5ஆம் தேதி தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத் தொடர் தொடங்க இருக்கிறது. அந்தக் கூட்டத் தொடரில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் சம்பந்தமாக சில மாற்றங்களை தமிழ்நாடு அரசு அறிவிக்க உள்ளது என்று பேச்சு சென்னை அறிவாலயம் வட்டாரங்களில் பேசப்பட்டது. அந்தப் பேச்சு பற்றிய தகவல் கேட்டவுடன் என்ன என்று விசாரிக்கத் தொடங்கியது அங்குசம் செய்தி,
வரக்கூடிய சட்டமன்ற கூட்டத்தொடரில் மேயர்களை நேரடியாக மக்கள் தேர்ந்தெடுப்பார்கள் என்று தமிழ்நாடு அரசு அறிவிக்க உள்ளதாக மேல் இடங்களுக்குள் பேச்சு நிலவுகிறது என்று கூறினார்கள்.
இதுகுறித்து வார்டு முக்கிய உடன்பிறப்பு களிடம் கேட்டபோது, மேயரை நேரடியாக தேர்ந்தெடுப்பது என்பது மிக்க மகிழ்ச்சியே. எங்களைப் போன்று வார்டு கவுன்சிலருக்கு போட்டியிடக் கூடிய நபர்களுக்கு பாரம் குறைந்து இருக்கிறது. எங்களுடைய செலவும் பாதிக்குப் பாதியாக குறைந்துவிடும். மேலும் மேயருக்கு போட்டியிடுபவரே நோட்டீஸ் முதல் பெரும்பான்மையான செலவுகளைப் பார்த்துக் கொள்வார்.
மேலும் வார்டுகளில் இருக்கக்கூடிய கோஷ்டிப் பூசல் குறையும். எப்படி என்றால் மேயரை ஜெயிக்க வைக்க வேண்டும் என்பதால் வார்டில் இருக்கக்கூடிய மற்ற கோஷ்டிகளை சேர்ந்தவர்களும் வேலை செய்வார்கள்.
அதுமட்டுமல்லாது மேயருக்கு போட்டியிடுபவரே ஓட்டுக்கு பணத்தையும் கொடுத்து விடுவார் பிறகென்ன கவலை என்று கூறினார்.