தாக்குதல் புகார் முதல் ப்ளீச்சிங் பவுடர் சர்ச்சை வரை… துறையூரில் என்ன நடக்கிறது?
துணை சபாநாயகர் ரவிசங்கர் தாக்குதல் நடத்திய சம்பவத்தை தொடர்ந்து வலுக்கும் கண்டனங்கள் , ஆர்ப்பாட்டங்கள் இவற்றால் துறையூர் சட்டமன்ற தொகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த 2026 நவம்பர் தீபாவளி 8-ம் தேதி இரவு 6-30 மணியளவில் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள துறையூர் எம்எல்ஏவும் துணை சபாநாயகர்மான ரவிசங்கரின் வீட்டிற்கு துறையூர் நெசவாளர் காலனியைச் சேர்ந்த சமூக ஆர்வலரும், தினசரி நாளிதழ் ஒன்றின் மாவட்ட போட்டோகிராபருமான கார்த்திக் குமார் தனது வார்டு பகுதியில் உள்ள அடிப்படை பிரச்சனைகள் குறித்து தீர்வு காண சென்ற பொழுது அவரை கண்மூடித்தனமாக தாக்கிய துணை சபாநாயகர் ரவிசங்கரின் விவகாரம் வீடியோவாக வெளியாகி தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது.

கடந்த இரு நாட்களுக்கு முன்பு திமுக சார்பில் துணை சபாநாயகரை தகுதி நீக்கம் செய்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சென்னையில் கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சிகள் அனைவரும் கண்டன அறிக்கை வெளியிட்டு வரும் நிலையில் வரும் நவம்பர் 18ஆம் தேதி அதிமுக முன்னாள் அமைச்சர் கே பி முனுசாமி தலைமையில் துறையூரில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாகவும் தொடர்ந்து பல்வேறு அமைப்பினரும் சமூக வலைதளங்களில் பல்வேறு தரப்பினரும் துறையூர் எம்எல்ஏவும் துணை சபாநாயகர்மான ரவிசங்கரை கண்டித்து அவரை பதவி நீக்கம் செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி வருவதால் இப் பிரச்சினை விஸ்வரூபம் எடுத்துள்ளது.

மேலும் கார்த்திக் குமார் கூறிய அடிப்படை பிரச்சினைகள் குறித்து தொலைக்காட்சி உள்ளிட்ட சமூகவலைதளங்களில் ஆய்வு மேற்கொண்டு அப்பகுதியைச் சார்ந்த பொதுமக்கள் அனைவரும் ஒன்று கூடி எங்கள் வார்டில் உள்ள அடிப்படை பிரச்சனைகள் பல காலமாக தீர்க்கப்படாமல் உள்ளது எனவும் ரவிசங்கரால் தாக்குதலுக்குள்ளான கார்த்தி குமார் கூறியது அனைத்தும் உண்மை அடிப்படை பிரச்சினையை குறித்து நேரில் முறையிட சென்ற கார்த்தி குமாரை துணை சபாநாயகர் தாக்கியது முற்றிலும் தவறு எனவும் அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுத்து அவர் பதவியை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் கொதித்தெழுந்தனர். மறுநாளே துறையூர் நகராட்சி மூலம் நெசவாளர் காலனி பகுதியில் குப்பைகள் அள்ளப்பட்டு துப்புரவு பணி மேற்கொள்ளப்பட்டு அவ்விடத்தில் ப்ளீச்சிங் பவுடர் தெளிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தன்று அவருக்கு பாதுகாப்புக்கு இருந்த போலீசார் எங்கே சென்றனர் என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது.
— ஜோஸ்..






Comments are closed, but trackbacks and pingbacks are open.