உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் பாழடைந்த நீர்த்தேக்க தொட்டி ! தேவை பதில் அல்ல ஆபிசர்ஸ் …

0

உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் பாழடைந்த நீர்த்தேக்க தொட்டி ! தேவை பதில் அல்ல ஆபிசர்ஸ் … போர்க்கால நடவடிக்கை !
திருப்பத்தூர் மாவட்டம் ,பொம்மிக்குப்பம் இந்திரா நகர் பகுதியில் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பாக கட்டப்பட்ட நீர்த்தேக்கத் தொட்டி வலுவிழந்து எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழலாம் என்ற நிலையில் கிராம மக்களை அச்சுறுத்து வருகிறது.

நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கும் இப்பகுதி மக்களின் குடிநீர்த்தேவையை பூர்த்தி செய்து வந்த இந்த நீர்த்தேக்கத்தொட்டி, அருகிலேயே ஊராட்சி தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது என்பதே இக்கிராம மக்களை பெரும் அச்சத்தில் ஆழ்த்தியிருக்கும் செய்தியாகும். கிராம மக்களும் ஐம்பதுக்கும் மேற்பட்ட பள்ளிக்குழந்தைகளும் நடமாடும் பகுதியில், காண்கிரீட் கட்டுமானம் பெயர்ந்து விழுந்தபடியும், கம்பிகள் நீட்டிக்கொண்டும், பெரும் விரிசலோடும், எந்த நேரமும் எதுவும் நடக்கலாம் என்ற பீதியை ஏற்படுத்தியிருக்கிறது, இந்த நீர்த்தேக்கத் தொட்டி. விரும்பத்தகாத அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன்பாகவே, இடித்து அகற்ற வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் நியாயமான கோரிக்கையாக அமைந்திருக்கிறது.

2 dhanalakshmi joseph
அபாயகரமான, நிலையில் உள்ள நீர்தேக்க தொட்டி
அபாயகரமான, நிலையில் உள்ள நீர்தேக்க தொட்டி
4 bismi svs

“மாவட்ட ஆட்சியரிடம் குறை தீர்வு கூடத்தில் புகார் அளித்தோம் . முன்பு இருந்த தாசில்தார் சிவப்பிரகாசம் ஆய்வு செய்துவிட்டு சென்றார். ஊராட்சி மன்றத் தலைவர் தொடங்கி தொகுதி எம்.எல்.ஏ. நல்லதம்பி வரை பல முறை புகார் மனு கொடுத்து விட்டோம். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை” என்கிறார் இப்பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ராதாகிருஷ்ணன்.

- Advertisement -

- Advertisement -

இந்த விவகாரம் தொடர்பாக திருப்பத்தூர் பி.டி.ஓ சங்கர் அவர்களிடம் அங்குசம் சார்பில் பேசினோம். “நீங்கள் குறிப்பிடும் பொம்மிக்குப்பம் தண்ணிர் தொட்டியை செயற்பொறியாளர்கள் ஆய்வு செய்து இடிப்பதற்கான பரிந்துரைகள் கொடுத்திருக்கிறார்கள். புதிய தண்ணீர் தொட்டி உள்ளிட்டு சில புதிய கட்டுமானங்களுக்கான மதிப்பீட்டு கோப்புகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருக்கின்றன. மிக விரைவிலேயே இடித்து அகற்றப்படும்” என்றார் . கோப்புகளில் மூழ்கி கிடக்காமல், போர்க்கால அடிப்படையில் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே நம் அனைவரின் எதிர்பார்ப்பும்.

– மணிகண்டன்.

5 national kavi
Leave A Reply

Your email address will not be published.