அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

கலைஞராக இருந்திருந்தால் கனக்கச்சிதமாக முடித்திருப்பார் !

திருச்சியில் அடகு நகையை விற்க

வன்னியர் வாக்குகளை கலைஞர் மிக கவனமாக கையாண்டார். ஆனால், அவருக்குப் பிறகு திமுக வன்னியர் வாக்கு வங்கியை ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை.

இந்தத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்ற பெரும்பான்மையான மாவட்டங்கள் வன்னியர் வாக்குகளை கொண்டது. ஆறு வட மாவட்டங்களில் ஒரு இடம் கூட வெற்றி பெற முடியாமல் போயிருக்கிறது. இன்று சிவி சண்முகத்திடம் இருக்கும் 30 எம்.எல்.ஏக்களில் சரியாக கையாண்டிருந்தால் 20 இடங்கள் திமுக பக்கம் வந்திருக்க வேண்டியது. ஏற்கனவே, வன்னியர்கள் அதிமுக ஆட்சியில் கிடைத்த 10.5 இட ஒதுக்கீட்டை திமுக ஆட்சிக்கு வந்து தான் தடுத்து விட்டதாக நினைக்கிறார்கள்.

இந்த வார MAY 6 அங்குசம் இதழில்…

அதை ஈடுகட்ட அல்லது சமாதானப்படுத்த எதுவுமே செய்யவில்லை. போதாக்குறைக்கு வேல்முருகனையும் மதிக்காமல் வெளியேற்றியது. பல்வேறு தரப்பினரின் வாக்குகள் விஜய் கட்சிக்கு பிரிந்த போதும் வன்னியர்  வாக்குகள் அதிமுகவின் மரியாதையை காப்பாற்றி இருக்கிறது.

கொங்கு மண்டலத்தை வாக்குகளை பெறுவதற்கு செந்தில் பாலாஜி அவர்கள் தலைமையில் செய்த வேலைகளில் 5 சதவீதம் கூட வன்னியர் வாக்குகளை பெற வேலை செய்யவில்லை. மெத்தனமான ஏளனமான பார்வையிலே அணுகப்பட்டது.

2026 யாவரும் கேளீர் ஏப்ரல் மாத இதழ்

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

சோசியல் மீடியாக்களில் பட்டியல் சமூகத்திற்கான உரிமைகளை  பேசினால் இன்ஸ்டன்ட் போராளி ஆகிவிடலாம் என்று நினைப்பவர்கள் கூட, வன்னியர் சமூகத்திற்கான இட ஒதுக்கீடு என்று வந்தால் ஓடிப் போய் பொடக்காளியில் ஒளிந்து கொள்வார்கள்.

சோசியல் மீடியாவில் ஜாதி வெறியோடு சுற்றிக் கொண்டிருக்கும் ஒரு 2000 பேரையே இரண்டு கோடி வன்னிய மக்களின்  பிரதிநிதிகளாக நினைக்கும் மனப்பான்மை கடந்த அரசுக்கும் இருந்திருக்கிறது போல. உண்மையில் பட்டியல் சமூகத்தை விட மிக மோசமான நிலையில் இருக்கும் ஒரு பெரும்பான்மை சமூகம்.

கணவனை இழந்த சோனியா என்றெல்லாம் பேசிவிட்டு காங்கிரஸ் உடன் கூட்டணி வைக்கும் பொழுது ஏற்படாத ஒவ்வாமை, ஒன்றிப் பயணித்த கட்சியை, ஒரு தாய் மக்களை உள்ளே வந்தால் நான் வெளியே போய் விடுவேன் என்று கருத்து பேசியதின் விளைவு இன்று  கூப்பில் உட்கார  வைத்திருக்கிறது. வைக்கப்பட்டிருக்கிறது.

கதறுவதை விட்டுவிட்டு கலைஞராக இருந்திருந்தால் கனக்கச்சிதமாக அந்த 20 எம்எல்ஏக்களை கொண்டு வந்து ஆட்சியில் உட்கார்ந்து இருப்பார் என்பதை சிந்தித்துப் பாருங்கள். அடுத்த முறையேனும் பயன்படும்.

–             சங்ககிரி ராஜ்குமார்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.