மருத்துவம் என்பது பிசினஸ் இல்லை, அது மக்களுக்கான சேவை’ மருத்துவர் ஜெயபால் மறைந்தார்….

0

திருச்சியில் கடந்த 80 வருடங்களுக்கு முன், ஏழைகளிடம் கன்சல்ட்டிங் ஃபீஸ் வாங்குவதில்லை என்கிற அடிப்படையில் திருச்சியில் துவங்கப்பட்டது ஜி.வி.என் மருத்துவமனை.

அதன்படியே இன்றுவரை இயங்கி கொண்டிருக்கிறது.
இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்னால் 9மாவட்டங்களை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டமாக இருந்தபோது, மருத்துவப்படிப்பு முடித்த மருத்துவர்கள் இருப்பது என்பதே மிகக்குறைவு. ஆனால் 1939ம் ஆண்டு திருச்சி சிங்காரத்தோப்பில் ஒரு சின்ன இடத்தில் மருத்துவ சேவையை டாக்டர் விஸ்வநாதன் துவங்கினார் .

https://businesstrichy.com/the-royal-mahal/

மருத்துவர் விஸ்வநாதன்
மருத்துவர் விஸ்வநாதன்

‘மருத்துவம் என்பது பிசினஸ் இல்லை, அது மக்களுக்கான சேவை’ என்கிற கொள்கையோடு செயல்படதுவங்கி, தங்கள் மருத்துவமனைகளுக்கு வரும் ஏழை நோயாளிகளிடம் பணம் வாங்காமல் மருத்துவ சேவை செய்ய ஆரம்பித்தார்.

பல் கட்டும் சிகிச்சையில் நவீனம் காட்டும் KM DENTAL CLINIC

மருத்துவர் ஜெயபால்
மருத்துவர் ஜெயபால்

இவருக்கு துணையாக திருச்சியில் எம்.பி.பி.எஸ் உடன் டி.ஜி.ஓ எனும் மருத்துவ படிப்பை முடித்த முதல் மருத்துவரான அவரது தங்கை சகுந்தலாவும் துணையாக, செயல்பட மருத்துவ சேவையை சிறப்பாக செய்துள்ளனர். அதோடு மருத்துவமனை வளர்ச்சியிலும் கவனம் செலுத்தி அடுத்த சில வருடங்களில் திருச்சி ஸ்ரீரங்கத்தில் மற்றொரு புதிய மருத்துவமனை ஆரம்பித்தார். இப்போது இந்த மருத்துவமனைகள் வளர்ந்து நிற்கின்றன,.

தங்கள் மருத்துவ பணிகளுக்கு மத்தியில் அவர் வாழ்நாள் முழுவதும் திருச்சியில் உள்ள ராமகிருஷ்ணா குடில், ராமகிருஷ்ணா தபோவனம் ஆகியவற்றில் தொடர்ந்து இலவச மருத்துவ சிகிச்சை வழங்கி வந்தார்.
அதேபோல் திருச்சி, புதுக்கோட்டை, கரூர், பெரம்பலூர், அரியலூர் என சுற்றுவட்டாரங்களில் பெரும்பான்மையான மக்கள் புற்று நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதை உணர்ந்ததன் அடிப்படையில் ஜி.வி.என் புற்றுநோய் தடுப்பு மையம் உருவானது.

புற்றுநோய் குறித்து மக்களிடம் விழிப்புணர்வை உருவாக்க கிராமப்புற பகுதிகளில் அப்போதே நூற்றுக்கணக்கான மருத்துவ முகாம்களை நடத்தியும் உள்ளார்.

மருத்துவர் ஜெயபால் குடும்பத்தினர்
மருத்துவர் ஜெயபால் குடும்பத்தினர்

அவர் மறைவிற்கு பிறகு டாக்டர்.ஜி.விஸ்வநாதனின் மகன்களாக விளங்கும் டாக்டர் ஜெயபால், சிங்காரத்தோப்பில் உள்ள மருத்துவமனையை கவனித்து வந்தார். அவருக்கு துணையாக மகன் செந்தில், மருமகள் டாக்டர் கவிதா, மகள் சென்னையிலும் திருச்சி மருத்துவமனையில் மருத்துவராகவும் உள்ளார்.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

அடுத்து இன்னொரு மகன் டாக்டர் கனகராஜ் திருச்சி மாம்பழச்சாலையில் டாக்டர் விஸ்வநாதன் சிறப்பு புற்றுநோய் மருத்துவமனை நடத்திவருகின்றார்.,

இவர்கள் மகன் டாக்டர் கோவிந்தராஜ்-டாக்டர் ஹேமமாலினி தம்பதியரும் மருத்துவர்கள்தான். இப்படி அடுத்தடுத்த தலைமுறைகளும் மருத்துவர்களாகவும் திருச்சிக்குள் தனித்தனியே மருத்துவமனையும் நடத்தி வருகின்றார்கள். இப்போதும் ஒரு நாளைக்கு 500பேருக்கு இலவச சிகிச்சை தற்போது வரை நடைபெற்று வருகிறது.

இந்தியாவிலேயே படிப்பறிவு குறைவாக இருந்த காலகட்டத்திலேயே மருத்துவம் படித்துவிட்டு, அந்த மருத்துவத்தை ஏழைகளுக்காக பயன்படுத்திய டாக்டர் ஜி.விஸ்வநாதன் பிறகு அவருடைய மகன் டாக்டர் ஜெயபால் தன்னுடைய இறுதி காலம் வரை ஏழை மக்களின் மருத்துவராக இருந்தார்.

மருத்துவர் ஜெயபால்
மருத்துவர் ஜெயபால்

 

1987 முதல் திருச்சி மாவட்ட நலப்பணி நிதிக்குழுவில் நிர்வாக குழுவில் இணைந்து தற்போது வரை  செயல்பட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

திருச்சியில் உள்ள பத்திரிக்கையாளர்கள் அனைவருக்கும் மருத்துவ சிகிச்சை சிறப்பு சலுகை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் திருச்சி கி.ஆ.பெ.விஸ்வநாதம் கல்வி நிறுவனங்களின் தலைவரும், கல்வித் தந்தையுமான டாக்டர் வி. ஜெயபால்  உடல்நலக் குறைவினால் இன்று 06.11.2022 இரவு 8 மணி அளவில் இயற்கை எய்தினார்.

திருச்சி மாவட்ட நலப்பணி நிதிக்குழுவின் சார்பாக அதன்  பொருளாளர் சேவை கோவிந்தராஜ் மருத்துவர் வி.ஜெயபால் மறைவிற்கு அவருடைய குடும்பத்தினர் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தார்..

வாழ்வின் இறுதி வரை.. மக்கள் நலனிலே தன்னுடைய காலத்தை கழித்தவர் தற்போது அவர்களின் குடும்பத்தினர்  அவர் வழியிலே செயல்பட்டு வருவது இன்றைய தலைமுறையினருக்கு முன் உதாரணமாக இருப்பது மிகமுக்கியமானது.

மருத்துவர் ஜெயபால் அவர் தந்தையே போன்றே திருச்சியின் மிக முக்கியமான அடையாளமாக வாழ்ந்தார்  என்பதை பதிவு செய்வதில் அங்குசம் இதழ் பெருமை கொள்கிறது…

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.