‘த கேரளா ஸ்டோரி’ படத்தை தடை செய்ய வேண்டும்! அரசுக்கு ‘தடா’ ரஹிம் கோரிக்கை!!

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

முஸ்லிம்களுக்கு எதிராக திட்டமிட்டு வெறுப்பு பிரச்சாரத்தை மேற்கொள்ளும் வகையில் எடுக்கப்பட்டுள்ள ‘த கேரளா ஸ்டோரி’ திரைப்படத்தை தடை செய்ய வேண்டும் என இந்திய தேசிய லீக் மாநிலத் தலைவர் ‘தடா’ ஜெ.அப்துல் ரஹிம் கோரிக்கை விடுத்துள்ளார்.

அதோடு, அத் திரைப்படத்தின் இயக்குநர், தயாரிப்பாளர், நடிகை ஆகியோரை கைது செய்ய வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Sri Kumaran Mini HAll Trichy

இதுகுறித்து தடா ஜெ.அப்துல் ரஹிம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

சுதிப்தோ சென் இயக்கி, விபுல் ஷா தயாரித்துள்ளார். இப்படத்தின் நாயகியாக அதா ஷர்மா நடித்துள்ளார். இத்திரைப்படம் தொடர்பான டீஸரில், புர்கா அணிந்துள்ள ஒரு பெண் வீடியோவில் பேசுவதுபோல ஒரு காட்சி வெளியாகி தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்


அந்த வீடியோவில் பேசும் புர்கா அணிந்த பெண் தனது பெயர் ஷாலினி உன்னிகிருஷ்ணன் என்றும் நர்ஸ் ஆகி மக்களுக்கு சேவை செய்ய நினைத்ததாகவும், ஆனால் தற்போது பாத்திமா பாபு என்ற பெயரில் ஒரு ISIS பயங்கரவாதியாக ஆப்கானிஸ்தான் சிறையில் இருந்து வருவதாகவும் கூறுகிறார்.
தான் தனியாக இல்லை என்றும் தன்னைப் போல் 32,000 பெண்கள் இருக்கிறார்கள் என்றும் நாங்க சிரியா மற்றும் ஏமன் பாலைவனத்தில் புதைப்படுகிறோம் என்றும் அப் பெண் கூறுகிறார்.

Flats in Trichy for Sale

அதோடு, சாதாரண பெண்ணை தீவிரவாதி ஆக்கும் ஆபத்தான விளையாட்டு கேரளாவில் அதுவும் வெளிப்படையாக நடந்து வருகிறது எனக் குற்றஞ்சாட்டுகிறார். இதை யாரும் தடுக்க மாட்டார்களா எனவும் அப் பெண் கேட்கிறார்.

இத்திரைப்படத்தில் கூறியுள்ள தகவல் உண்மையெனில், 32,000 பெண்கள் அதுவும் கேரளாவில் இருந்து வெளிநாடுகளுக்கு கடத்திச் சென்ற தகவல் இந்திய உளவுத்துறைக்கு தெரியவில்லையா? என்றும், மத்திய, மாநில உள்துறை மற்றும் மத்திய, மாநில அரசுகள் என்ன செய்து கொண்டிந்தன என்றும் கேள்வி எழுப்புகிறார் தடா ரஹிம்.

இப்படத்தின் இயக்குநர் சுதிப்தோ சென் நான்கு ஆண்டுகளாக ஆய்வு மேற்கொண்டதாக கூறுகிறார். அப்படி ஆய்வு செய்தது உண்மை என்றால் பாதிக்கப்பட்டு ஏமன் சிரியாவில் உள்ள 32,000 பெண்களை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் மூலம் மீட்க நடவடிக்கை எடுக்காமல் திரைப்படம் எடுப்பது ஏன் என்றும் தடா ரஹிம் கேள்வி எழுப்பியுள்ளார்.

முஸ்லீம்களுக்கு எதிரான வெறுப்பு பிரச்சாரம் செய்ய இதுபோன்ற திரைப்படங்கள் எடுக்கபடுவதாகவே நினைக்க தோன்றுகிறது என தோன்றுகிறது என்றும், ஏற்கெனவே ‘த காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படம் மூலம் முஸ்லீம்களுக்கு எதிராக விஷத்தைக் கக்கிய கூட்டம் தற்போது ‘த கேரளா ஸ்டோரி’ திரைப்படம் மூலம் சயனைடை தடவி முஸ்லீம்களை அழிக்க பார்க்கிறது என்றும் தடா ரஹிம் குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஒரு பொய்யான கதை மூலம் ‘த கேரளா ஸ்டோரி’ திரைப்படத்தை சுதிப்தோ சென் இயக்கி உள்ளார் எனக் குறிப்பிட்டுள்ள தடா ரஹிம், இத் திரைப்படத்தை இந்திய சினிமா தணிக்கை குழு (சென்சார் போர்டு) அனுமதி அளித்து இத் திரைப்படம் திரைக்கு வந்தால் இந்தியாவின் ஒற்றுமைக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக அமையும் என எச்சரித்துள்ளார்.

இத் திரைப்படத்தின் டீஸரை சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட இயக்குநர் சுதிப்தோ சென், தயாரிப்பாளர் விபுல் ஷா, நடிகை அதா ஷர்மா ஆகியோரை கைது செய்து,  கேரளாவில் எந்த இடத்தில் இருந்து பெண்களை கடத்தினார்கள், ஏமன், சிரியா நாடுகளுக்கு எப்படி அழைத்துச் சென்றார்கள் என புலன் விசாரணை நடத்த வேண்டும் என்றும் மத்திய, மாநில அரசுகளுக்கு தடா ரஹிம் கோரிக்கை விடுத்துள்ளார்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.