நாமக்கல் கோழி பண்ணைக்கு 26,500 கிலோ ரேஷன் அரிசியை பதுக்கியவர் கைது !

0

திருச்சி மண்டல குடிமை பொருள் குற்ற புலனாய்வு துறை காவல் கண்காணிப்பாளர் சுஜாதாவுக்கு ரகசிய தகவலாக பெரம்பலூர் மாவட்டம் களரம்பட்டியில் உள்ள காங்கேயத்தைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் குத்தகைக்கு நடத்தி வரும் அமுதா மாடர்ன் ரைஸ் மில்லில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக  தகவல் கிடைத்திருக்கிறது.

டிரைவர் ஆறுமுகம்
டிரைவர் ஆறுமுகம்
2 dhanalakshmi joseph

இதை அடுத்து பெரம்பலூர் மாவட்ட வருவாய்த்துறை பறக்கும் படை வட்டாட்சியர் மாயகிருஷ்ணன் மற்றும் பெரம்பலூர் வட்ட வழங்கல் அலுவலர் பெரியண்ணன் மற்றும் குடிமை பொருள் குற்ற புலனாய்வுத் துறை திருச்சி சரக டிஎஸ்பி சுதர்சன் , உதவி ஆய்வாளர் கண்ணதாசன் , ஏட்டு ராஜசேகர் மற்றும் போலீசாருடன் சென்று அதிரடியாக சோதனை செய்தனர்.

சோதனையின் போது  TN 39 CU 5720 என்ற அசோக் லேலாண்ட் தோஸ்த் நான்கு சக்கர வாகனத்தில் ரேஷன் அரிசி மூட்டைகள் இருந்ததை கண்டுபிடித்தனர்.

- Advertisement -

- Advertisement -

அதிரடி சோதனையில்
அதிரடி சோதனையில்

வாகனத்தின் டிரைவர் திருச்சி அரியமங்கலத்தைச் சேர்ந்த சுப்ரமணியன் மகன் ஆறுமுகம் என்பவரை பிடித்து விசாரித்தனர்.

4 bismi svs

திருச்சியை சேர்ந்த ஐயப்பன் என்பவருக்கு சொந்தமான நான்கு சக்கர வாகனத்தில் சுமார் 70 மூட்டைகள் ரேஷன் அரிசியை காங்கேயத்தை சேர்ந்த சுரேஷ் என்பவர் குத்தகைக்கு எடுத்துள்ள களரம்பட்டி அமுதா ரைஸ் மில்லில் இறக்கும்பொழுது கையும் களவுமாக பிடிபட்ட திருச்சி அரியமங்கலத்தை சேர்ந்த ஆறுமுகம் என்பவரை கைது செய்தனர்.

கைது செய்த போது

அதே நேரத்தில் ரைஸ் மிலுக்குள் பதுக்கி வைத்திருந்த சுமார் 330 முழு ரேஷன் அரிசியையும் ஆக மொத்தம் 400 மூட்டைகளில் 20 டன் ரேஷன் அரிசியும் சுமார் 130 மூட்டைகளில் சுமார் 50 கிலோ எடை வீதம் 20,000 கிலோ நல்ல அரிசியும் 6500 கிலோ உடைத்த குறுணை ரேஷன் அரிசிகளையும் ஆக மொத்தம் 26,500 கிலோ அரிசியை கைப்பற்றி வழக்கு பதிவு செய்துள்ளனர்..

விசாரணையில் காங்கேயம் சுரேஷ் என்பவர் அதிக லாபத்திற்காக நாமக்கல்லில் உள்ள கோழி பண்ணைகளுக்கு ரேஷன் அரிசிகளை பதிக்க வைத்து கடத்துவதாக தெரிந்தது.

வழக்கு பதிவு செய்து ஆறுமுகத்தின் மீது வழக்கு பதிவு செய்தனர்.

 

– பிரபு பத்மநாபன்

 

5 national kavi
Leave A Reply

Your email address will not be published.