சுற்றுச்சூழல் காக்கும் தினமாக டாக்டர் எம். எஸ். உதயமூர்த்தியின் 97ஆவது பிறந்த நாள் விழா !
மக்கள் சக்தி இயக்க நிறுவனரும், எழுத்தாளரும், சிந்தனையாருமான டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தி 97வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி மாவட்ட மக்கள் சக்தி இயக்கம் சார்பில் சுற்றுச்சூழல் காக்கும் தினமாக பொன்மலையடிவாரம் பகுதியில் மக்கள் சக்தி இயக்க மாநில பொருளாளரும், தண்ணீர் அமைப்பு செயல் தலைவருமான கே.சி.நீலமேகம் தலைமையில் நடந்தது.

சுற்றுசூழலை காக்க, நாம் அனைவரும் சேர்ந்து செயல்பட வேண்டும். மரம் நட்டு, தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்தி, பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தவிர்த்து, கழிவுகளைப் பிரித்து, சுற்றுச்சூழலுக்குத் தேவையான விழிப்புணர்வை ஏற்படுத்தி, இயற்கையை காக்க வேண்டும். என்ற வகையில் 08.04.25 பொன்மலையடிவாரம் பகுதியில் 25 மரக்கன்றுகள் வழங்கி, “பிளாஸ்டிக் தவிர்த்து, துணிப்பை எடுப்போம்” என்று துணிப்பைகளை வழங்கினோம்.
நிகழ்வில் மக்கள் சக்தி இயக்க திருச்சி மாவட்ட செயலாளர் ஆர்.இளங்கோ, மாநில நிர்வாகி வெ.இரா.சந்திரசேகர், மலைக்கோட்டை தாமு, சுமன், மெக்கானிக் மணி, சந்துரு, குமரன், சுதன் மற்றும் பல கலந்துக்கொண்டு சிறப்பித்தார்கள்.