உலக சினிமாவை மிரள வைக்கும் சன் பிக்சர்ஸ்+ அல்லு அர்ஜுன்+ அட்லீ கூட்டணி!
இந்திய சினிமாவின் மெகா தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸுடன் தெலுங்கு சினிமாவின் ‘ஐகான் ஸ்டார்’ அல்லு அர்ஜுன் கைகோர்க்கிறார். 1,000 கோடி கலெக்சன் அள்ளிய ஷாருக்கானின் ‘ஜவான்’ மூலம் கவனம் ஈர்த்த தமிழ் சினிமா டைரக்டர் அட்லீ யின் 6-ஆவது படம், அல்லு அர்ஜுனின் 26- ஆவது படம் என்பதால் தற்போதைக்கு ‘AA26 A6’ என தலைப்பு வைத்துள்ளது சன் பிக்சர்ஸ்.
இன்று ( ஏப்ரல் 08 ) காலை சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள முரசொலி மாறன் டவர்ஸில் சன் பிக்சர்ஸ் அதிபர் கலாநிதி மாறனை அல்லு அர்ஜுன்+ அட்லீ கூட்டணி சந்திப்பு நடந்ததும் இந்த மூவர்
கூட்டணியில், பான் உலகப் படைப்பாக, இந்திய திரைத்துறை கண்டிராத பிரம்மாண்டமாக உருவாகவுள்ள ‘#AA22xA6’ அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.”இந்தியாவில் தயாராகும் சர்வதேச தரத்துடனான உலக சினிமாவாக இருக்கும்” என்கிறார் கலாநிதி மாறன்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
இப்படத்தில், நடிக்கும் நடிகர்கள், நடிகைகள், பணியாற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.
— மதுரை மாறன்.