அரசு புத்தக கண்காட்சியின் சாதனைகளும்! வேதனைகளும்!
கடலூர் மாவட்டம் கடலூர் மாநகரில் சமீபத்தில் 22/03/25 முதல் 31/025 வரையில் 10-நாட்கள் பிரபலமான மஞ்சக்குப்பம் மைதானத்தில் (ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இராபர்ட் கிளைவ் ஆட்சி செய்த அந்தக்கால ஆட்சியர் நிர்வாகம் செய்த அலுவலகங்களுக்கு எதிரில் உள்ளது).
சுமார் 100 அரங்குகள் அமைக்கப்பட்டன, பல பிரபலமான பதிப்பகங்கள் இடம் பெற்றிருந்தன, அரசுத்துறைகளும் உண்டு” தினமும் வருகின்ற பார்வையாளர்களை ஊக்குவிக்க குலுக்கல் சீட்டு முறையில் 5 பேர்களுக்கு புத்தகங்கள் பரிசளிக்கப்பட்டன! நல்ல ஏற்பாடு!

மாவட்ட நூலகத்துறை நூலக அலுவலர் முருகன் தலைமையில் பேராசிரியர் முனைவர் ஜானகி ராஜா ஒருங்கிணைப்பில் உள்ளூர் எழுத்தாளர்கள் 20(50) பேர்கள் மட்டுமே தினசரி நிகழ்ச்சிகளில் பங்கேற்க வாய்ப்பு தரப்பட்டன, வெளியூர் ஸ்டார் பேச்சாளர்கள் பர்வீன் சுல்த்தானா, சுகிசிவம், பாரதி கிருஷ்ணகுமார், நீயாநானா? கோபிநாத் ஆகியோர்களுக்கு பல ஆயிரங்கள் சன்மானம் ஏசி கார், ஏசி அறை வசதிகள், ஆனால் உள்ளுர் எழுத்தாளர்களுக்கு *பட்டைநாமம்*!!
ஒரு புத்தகம்
ஒரு பொன்னாடை
ஒரு தண்ணீர் பாட்டில்
அவ்வளவு தான்!
எழுத்தாளர் புத்தகங்கள் மேடையில் வெளியிடப்பட்டன, ஆனால் அந்த எழுத்தாளருக்கு ஒரு கைத்தறி துண்டுகூட கிடையாது!
மேலும் அவரிடம் 10-புத்தகங்கள் ரூ.1500-2500/- வரை இலவசமாகவே வாங்கப்பட்டன, நூல் வெளியீடு செய்தித்தாட்களில் வரவே
இல்லை! பாவம்! அப்பாவி எழுத்தாளர்கள்!
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
கடலூரில் ஏராளமான சங்கங்கள் உள்ளன. நாடார் சங்கம், படையாச்சிகள் சங்கம் மற்றும் அய்யர் சங்கம், ஒற்றுமை இல்லாதவர்கள்,!
ஜால்ராக்களுக்கு வாய்ப்பு மரியாதை எல்லாம் உண்டு, மூத்த எழுத்தாளர் சாகித்ய அகாடமி விருதாளர்(85) குறிஞ்சி வேலன் குறிஞ்சிப்பாடி உரிய முறையில் கெளரவிக்கப்படவில்லை!
இதுபோன்ற சில குறைகள் இருந்தன! காவல் துறை சிறந்த ஏற்பாடு. மக்கள் செய்திகள் விளம்பரங்கள் அபாயம்! வெளியே
அகண்ட எல்இடி தொலைக்காட்சி மற்றும் குடிதண்ணீர், கழிப்பறை வசதிகள் பரவாயில்லை!
ஏராளமான பள்ளி மாணவர்கள் இலவச பேருந்து வசதி உண்டு, கோடை காலத்தில் கடலூர் வாசிகளுக்கு கிடைத்த *ஜில்ஜில்* பொழுதுபோக்கு!
புத்தகங்கள் விற்பனை பரவாயில்லை! ஆனால் பதிப்பகங்களுக்கு ஸ்டால் வாடகை எல்லாம் இருந்தன!
— இராஜநாகன்.