பிஜேபி அரசுக்கு விழுந்த முதல் அடி – அதிர்ச்சியில் தொழில் அதிபர்கள் !

0

தேர்தல் நிதி பத்திரம் சட்டம் செல்லாது – சட்டவிரோதம் , உச்சநீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு, ஒன்றியப் பாஜக அரசுக்கும் மோடிக்கும் பெரும் பின்னடைவு! அரசியல் கட்சிகளுக்கு நிதிகளைத் திரைமறைவில் வாரி வழங்க வகை செய்யும் தேர்தல் பத்திரங்கள் செல்லாது; அரசியல் அமைப்புச் சட்டத்துக்கு எதிரான என உச்சநீதிமன்றம் அதிரடியாகத் தீர்ப்பை இன்று (15.02.2024) வழங்கியுள்ளது. இத் தீர்ப்பு மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு மிகப் பெரும் பின்னடைவாகும். மேலும் தேர்தல் பத்திரங்கள், மக்களின் அடிப்படை உரிமைகளை மீறுகிறது. தகவல் அறியும் உரிமை சட்டத்துக்கும் எதிரானது என உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு தமது தீர்ப்பில் தெரிவித்துள்ளது.

இந்திய நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் ரூ20,000க்கும் அதிகமாக ஒருவரிடம் நன்கொடை பெற்றால் அதன் முழு விவரத்தையும் தேர்தல் ஆணையத்திடம் தெரிவிக்க வகை செய்தது மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம். ஆனால் 2018-இல் இந்தச் சட்டத்தில் ஒரு திருத்தம் கொண்டு வந்த ஒன்றியப் பாஜக அரசு, தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடைகளை அரசியல் கட்சிகள் பெற்றால் தேர்தல் ஆணையத்திடம் தெரிவிக்க வேண்டிய தேவை இல்லை, வருமானவரியிலும் காட்டவேண்டிய தேவையில்லை என மாற்றி அமைத்தது. இந்தத் தேர்தல் நிதிக்கான பத்திரங்கள் SBI வங்கியில் மட்டுமே பெறமுடியும் என்றும் சட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

தேர்தல் நிதி கணக்கு காட்ட வேண்டியது இல்லை
தேர்தல் நிதி கணக்கு காட்ட வேண்டியது இல்லை

இந்தச் சட்டத்தை இந்தியச் ரிசர்வ் வங்கி, இந்திய சட்ட ஆணையம், தேர்தல் ஆணையம் என அனைத்து அமைப்புகளும் ஏற்றுக்கொள்ளவில்லை. நாடாளுமன்றத்தில் தேர்தல் பத்திரம் தொடர்பான சட்டத்திருத்தத்தை நிதி மசோதா வடிவில் கொண்டு வந்தது. காரணம் இந்தச் சட்டத்திருத்தத்திற்கு மாநிலங்களவையில் ஒப்புதல் பெறவேண்டிய தேவையில்லை என்பதால் மட்டுமல்ல, மாநிலங்களவையில் பாஜகவுக்குப் பெரும்பான்மை இல்லை என்பது முக்கியக் காரணமாகும். இந்தச் சட்டத்தைக் காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் இதில் வெளிப்படைத் தன்மை இல்லை என்பதால் கடுமையாக எதிர்த்தன. எதிர்ப்புகளை மீறி மோடி தலைமையிலான பாஜக அரசு இந்தச் சட்டத் திருத்தத்தைக் கொண்டுவந்து நிறைவேற்றியது என்பது கடந்த கால வரலாறு.

- Advertisement -

- Advertisement -

இந்தத் திருத்தத்துக்குப் பின்னர் அனைத்து அரசியல் கட்சிகள் தேர்தல் பத்திரங்கள் மூலம் பெருமளவு நன்கொடைகளைப் பெற்றன. ஒவ்வொரு அரசியல் கட்சியும் கார்ப்பரேட் நிறுவனங்களிடம் தேர்தல் பத்திரங்கள் மூலமாகப் பெருமளவு நன்கொடையைப் பெற்றுக் குவித்தன. இதில் பெருமளவு நிதி பெற்றது மத்தியில் ஆளும் பாஜகதான். இத்தகைய தேர்தல் பத்திரங்களை எஸ்.பி.ஐ. வங்கிதான் வெளியிடும். ரூ.1,000 முதல் ரூ1 கோடி வரையிலான பத்திரங்களை ஜனவரி, ஏப்ரல், ஜூலை, அக்டோபர் மாதங்களில் பெற்றுக் கொள்ளலாம். தேர்தல் காலத்தில் கூடுதலாக 30 நாட்கள் மத்திய அரசால் தேர்தல் பத்திரங்கள் விற்பனைக்கு அனுமதி வழங்கப்படும்.

தேர்தல் நிதி - கணக்கு
தேர்தல் நிதி – கணக்கு

அண்மையில் தேர்தல் பத்திரம் மூலம் கட்சிகள் பெற்ற நன்கொடை விவரங்கள் வெளியாகிப் பெரும் புயலைக் கிளப்பி இருக்கின்றன. கடந்த 2022-23ம் ஆண்டில் மட்டுமே பாஜக ரூ1,294 கோடியைத் தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதியாகப் பெற்றுள்ளதாம். ஆனால் காங்கிரஸ் கட்சிக்கு வெறும் ரூ171 கோடிதான் கிடைத்துள்ளதாம். அதாவது காங்கிரஸ் கட்சியை விடப் பல மடங்கு கூடுதல் நிதியைத் தேர்தல் பத்திரங்கள் பாஜக பெற்றுள்ளது. இதுவரையில் விற்பனையான மொத்தத் தேர்தல் பத்திரங்களில் 55% பாஜகவுக்குக் கிடைத்துள்ளது. தேர்தல் பத்திரங்கள் மொத்தம் ரூ.12,008 கோடிக்கு விற்பனையானதில் பாஜகவுக்கு மட்டுமே 6,564 கோடி கிடைத்துள்ளது.

4 bismi svs

இந்தப் பின்னணியில் தேர்தல் பத்திரங்கள் என்பவை நிதி மசோதா சார்ந்தது என்பதால் மக்களவையின் ஒப்புதல் இல்லாமலேயே நிறைவேற்றப்பட்டது. இதன் அம்சங்கள், அரசியல் சாசனத்துக்கு எதிரானது எனக் கூறி உச்சநீதிமன்றத்தில் 2109-இல் பொதுநலன் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்குகளை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான பெஞ்ச் விசாரித்தது. மத்திய அரசு தாக்கல் செய்திருந்த பிரமாணப் பத்திரத்தில், தேர்தல் பத்திரம் மூலம் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை தருகிறவர்கள் யார் என்கிற விவரத்தை அறியக் கூடிய உரிமை பொது மக்களுக்கு அறியும் உரிமை உள்ளது எனத் தெரிவித்துப் பரபரப்பைக் கிளப்பி இருந்தது.

இந்த வழக்கில் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான பெஞ்ச் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசனப் பெஞ்ச் ஒருமித்த தீர்ப்பு அளித்தது. உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான பெஞ்ச் அளித்த தீர்ப்பின் சுருக்கம்
·தேர்தல் பத்திரங்கள் திட்டம் அரசியல் சாசனத்துக்கு எதிரானது
·தேர்தல் பத்திரங்கள் திட்டங்கள் செல்லாது
·தேர்தல் பத்திரங்கள் வாக்காளர்களது உரிமையைப் பறிக்கிறது
·தேர்தல் பத்திரங்கள் மக்களின் அடிப்படை உரிமைகளை மீறுகிறது
·தேர்தல் பத்திரங்கள் திட்டமானது தகவல் அறியும் உரிமை சட்டத்துக்கும் எதிரானது.
·தேர்தல் பத்திரங்கள் திட்டம் மட்டுமே கறுப்பு பணத்தை ஒழிக்க உதவாது.

மேலும், தேர்தல் பத்திரங்களை வாங்கியது யார்? அவர்கள் எந்தக் கட்சிக்கு எவ்வளவு நிதி வழங்கினார்கள்? போன்ற அனைத்து விவரங்களையும் SBI வங்கி மார்ச் 6ஆம் தேதிக்குள் தேர்தல் ஆணையத்திடம் வழங்கவேண்டும். தேர்தல் ஆணையம் வங்கி வழங்கிய அனைத்து விவரங்களையும் மார்ச் 13ஆம் தேதிக்குள் தன்னுடைய இணையத் தளத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வழங்கவேண்டும் என்று தெரிவித்துள்ளது.

சுப்பிரமணிய சுவாமி BJP
சுப்பிரமணிய சுவாமி BJP

இந்தத் தீர்ப்பு குறித்துப் பாஜகவின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கருத்து தெரிவிக்கும்போது, “உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு தேர்தல் பத்திரம் சட்டவிரோதம் என்று அறிவித்திருப்பதால் தலைமை அமைச்சர் மோடி மற்றும் நிதி அமைச்சர் நிர்மலா ஆகியோர் உடனே பதவி விலகவேண்டும்” என்று தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் தலைவர் கார்கே, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்றுள்ளார்கள். ஆனால் இதுவரை பாஜக தரப்பில் எந்தவொரு கருத்தும் இதுவரை வெளியிடப்படவில்லை. செய்தி ஊடகங்களில் பாஜக ஆதரவு வலதுசாரிகள் மட்டும் மோடியை ஆதரித்துக் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

பத்திரிகையாளர் மணி
பத்திரிகையாளர் மணி

தேர்தல் ஆணையம் தேர்தல் பத்திரம் தொடர்பாக நிதி அளித்தவர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டால்,  இந்த தன் தொழிலுக்காக கொடுத்த அரசியல் புகார்களால் கொடுத்த நிதியினால் பாஜக அரசால் நன்மை அடைந்தவர்களின் பெயர் பட்டியல் இருந்தால், 2024 நாடாளுமன்றத் தேர்தலில் மோடிக்குப் பெரும் பின்னடைவை உறுதியாக ஏற்படுத்தும் என்று மூத்த பத்திரிக்கையாளர் மணி கருத்து தெரிவித்துள்ளார்.

5 national kavi
Leave A Reply

Your email address will not be published.