அட்டு, டைனோசரஸ் என ரசிக்க வைக்கும் நடிகர் ரிஷி!
அட்டு, டைனோசரஸ் என ரசிக்க வைக்கும் நடிகர் ரிஷி!
நடிகர் ரிஷி அட்டு படத்தின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் டைனோசர்ஸ். வட சென்னை மக்களின் வாழ்வியலை அப்படியே கண்முன் காட்டியிருந்த இப்படத்தில் தனா என்ற வட சென்னை இளைஞனாக நடித்து முத்திரை பதித்திருந்தார் நடிகர் ரிஷி.
இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்று வருவதில் மிகவும் மகிழ்ச்சியாக காணப்படுகிறார். மேலும் தனது திரை வாழ்வில் உறுதுணையாக இருந்து வரும் பத்திரிகையாளர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி டோலா, மர்ஜுவானா போன்ற படங்களில் தனது மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தியுள்ளவர் இனி தனது நடிப்பில் அடுத்தடுத்து நல்ல படங்கள் வெளிவர உள்ளதாகவும் இதுகுறித்து விரைவில் அறிவிக்க உள்ளதாக தெரிவித்தார்.
-மதுரை மாறன்